Astrology Discussions

பலம் பெற்ற 3,6,11ம் அதிபதிகள் அமையப்பெற்று காணப்பற்றால் வலிமை , பேராற்றல். திரண்ட செல்வம்
புதன் , குரு , ஷுக்ரன் கேந்திரத்திலிலோ அல்லது திரிகோணத்திலோ வலுவுடன் அமைய பெற்று இருந்தால் எழுத்தற்றால் , பேச்சு வன்மை , மந்திரி பதவி, பிறரால் மதிக்கப்படுவார்கள், உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள், எழுத்தாளராகவும், பேச்சாளர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்
சூரியனுக்கு இரு புறமும் சுப கிரஹங்கள் அமைவது உயர்ந்த சாதனை படைக்கும் திறன் , பெரும் புகழ் , திரண்ட செல்வம், சாதனைகளை படைக்க வல்லவர்கள், உயர் பதவி அடையக் கூடியவர்கள். புகழ், பெருமை உடையவர்கள்.
குரு , லக்கினாதிபதி மற்றும் சனி பலமுடன் காணப்படுதல் நிலைத்த புகழ் , வலிமை , பேராற்றல்
புதன் , சுக்ரன் , குரு ஜாதகத்தில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று காணப்படுதல் நாட்டை ஆளும் யோகம் , சிறந்த தலைவர் என்ற நற்பெயர்
சர லக்கினமாகி 5.10 திற்கு உரியவர்கள் கேந்த்ரா ஸ்தானங்களில் அமையப்பெற்றால் செல்வம் , செல்வாக்கு, நிலைத்த புகழ்,நினைத்தவை யாவையும் அடையும் வல்லமை உடையவர்கள்.
லக்கினத்தில் இருந்து 4,7,10 ல் சுக்ரன் , புதன் மற்றும் சூரியன் இணைந்து காணப்படுதல் நிறைந்த புகழ் , செல்வம் , செல்வாக்கு , ஆன்மிகத்தில் ஈடுபாடு
சந்திரனுக்கு சுபர் பார்வை ஏற்பட்டு லக்கினாதிபதி லாப ஸ்தானத்தில் அமையப்பெறுவது நிலைத்த புகழ் , மற்றவர்களால் மதிக்கப்படும் தன்மை , பிறரிடம் அன்பு காட்டுதல்
லக்கினத்திலிருந்து 12ல் ( மோட்ச ஸ்தானம் ) கேது அமையப்பெற்றால் ஆன்மிக வாழ்வில் அதீத ஈடுபாடு , மறுபிறவி இல்லாத நிலை தீர்த்த யாத்திரை ஈடுபாடு
கிரஹங்கள் தங்கள் வீடு மாரி அமர்ந்திருப்பது உதாரணமாக விருச்சிகத்தில் குருவும் தனுஷில் செவ்வாயும் பரிவர்த்தனை அடைந்து காணப்படுவது பரிவர்த்தனை பெற்ற கிரஹங்களின் தசை மற்றும் புக்தி காலங்களில் ஜாதகருக்கு நற்பலன்கள் ஏற்படுகின்றது
ஜாதகத்தில் 2ம் அதிபதியை சுபர் பார்வையிட்டாலும் சேர்க்கை பெற்றாலும் நல்ல பேச்சாற்றல் , உயர் கல்வி , நல்ல அறிவாற்றல்
2ம் 5ம் அதிபதிகள் சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ வலுவாக உள்ள நிலை சாதாரண தொண்டனாக இருந்து பெரும் தலைவராக ஆகும் தன்மை
நீச்ச கிரகம் நின்ற ராசி அதிபதி ஆட்சி , யுச்சம் பெற்றிடுப்பது பிறரால் செய்ய முடியாத சாதனை, ராஜ வாழ்வு வாழ்தல்
எல்லா கிரகங்களும் 1,4,7,10 யில் அமைவது ஆட்சி செய்யும் ஆற்றல், நல்ல புகழ்
சந்திரனுக்கு 1,4,7,10 செவ்வாய் அமையபெற்றிடுப்பது நல்ல புகழ் , உயர்ந்த செல்வம் உண்டாகும்
ராகு கேது பிடியில் எல்லா கிரகங்களும் அமைவது 32 வயது வரை சாதாரண வாழ்க்கை ., பின்பு நல்ல முன்னேற்றம்ச. லக்னமும் எல்லாக் கிரஹங்களும் ராகு கேது இவர்களின் மத்தியில் இருப்பது. காலசர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் அனேக கஷ்டங்களை அனுபவித்து தன்னுடைய சுய உழைப்பினால் முன்னேறக்கூடியவர்கள்.
· 6ம் அதிபதி 8இல் அல்லது 12இல் யிருப்பது · 8ம் அதிபதி 6இல் அல்லது 12இல் யிருப்பது · 12ம் அதிபதி 8இல் அல்லது 6இல் யிருப்பது சாதாரண குடும்பத்தில் பிறந்து பின்னர் ராஜ வாழ்வு வாழ்தல்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 2 ராசிகளில் சஞ்சரிப்பது சமுதாய நெறிமுறைகளை பின்பற்றாதவர், நல்லோர்களால் வெறுக்கப்படுவர் , சிறுமையான காரியங்களில் ஈடுபடுபவர்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 1 ராசியில் சஞ்சரிப்பது ஜாதகர் தீமை குணம் நிறைந்தவர் ஆகவும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுபவராகவும் இருப்பர்
ராகு கேதுவை தவிர்த்து மற்ற கிரஹங்கள் ஏதாவது 3 ராசிகளில் சஞ்சரிப்பது கேடி , மற்றும் பிரபல ரவுடி ஆவார்
Top