Astrology Discussions

1 .ஊழிற் பெருவலி யாவுள மற்தொன்று சூழினும் தான் முந்துறும் அதிகாரம் 38 ஊழ் குறள் 380 திருவள்ளுவர் ஊழை விட மிக்க வலிமையானது வேறதுவும் இல்லை அதிலிருந்து தப்ப வேறு வழியைத் தேடினாலும் அங்கும் ஊள் தான் முன் நிற்கிறது. பாலா நி கிரேக சாரேன சூஸ்யந்தி மாநீஷ்ண கோ வக்தா தார தம யஷய தமாகம் வேதசம் விநா ; உத்தர காலம்ருதத்தில் காளி தாசன் சொன்ன வாக்கு ஆகும் . ஜோதிடர்கள் கிரகங்களின் சாரங்கள் கொண்டும் , கிரகங்களின் அசைவை கொண்டும் ,பல்வேறு கணித முறைப்படியும் ,அனுபவம் ,சுருதி ,யுக்தி ,கால ,தேச , வர்த்தமானம் , மதம் ,இனம் ,பேதம் ,அடிப்படையில் ,இறை அருளழலும், ஜோதிட பலன்களைக் முன் கூட்டியே, சொல்லுகீரர்கள் , ஆனால் நம்மை படைத்த பிரம்மாவைத் தவிர யாரும் அறுதியிட்டுக் ,இருதி இட்டு கூற முடியாது என்று பொருள் ஆகும் 2 பிறக்கும் குழந்தை ஆனா !அல்லது பெண்ணா ! இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலன் தட்டான் அறிந்தும் ஒருவருக்கும் உரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குலன் கெட்டான் இம் மாயையென் கீழ் அமைண் தவாரே ; இப் பாடல் படி விந்தை விட்ட ஆணுக்கும் ,விந்தை ஏற்ற் பெண்ணுக்கும் , பிறக்கும் குழந்தை ஆணா ,பெண்ணா என்று தெரியாது உடலை படைக்கும் பிரம்மா ஒருவன மட்டும அறிவான் .ஆனால் அவன் யாரிடம் சொல்ல போவது இல்லை ,ஒரு வேளை சிவ பெருமானின் பூர்ண அருள் பெற்றால் , தான் பிறப்பது ஆனா ! பெண்ணா ! என்பதை அறிய முடியும் .மேலும் மழைப் பேறும் ,மகப்பேறும் மகாதேவனுக்கே தெரியாது என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு . ஆக இது ஓர் மாயை ஆகும் . 3, பிறக்கும் குழந்தையின் ஆயுள் நன்கு கணிக்க வேண்டும் 4, லக்கினம் ,லக்கினாதிபதி ,சந்திரா லக்னம் ,சந்திரா லக்கினாதிபதி ,ஆயுள் காரகன் சனி ,குரு ,பார்வை அல்லது சுபர் ,பார்வை செய்வது நல்லது . 5 . 1,5,9, திரிகோண ராசிகளும் ,1,4,7,10, கேந்திர ராசிகளும் 2,11, ராசிகளும் ,வலுபெற வேண்டும் , 6 .கூடுமனவரை\, தாய் ,தந்தை ,மூத்த சகோதரர்கள் , சகோதறி ,ஜென்ம நட்ச்சத்திரம் பிறக்கும் குழந்தைக்கு வரக் கூடாது . 7. இலக்கினங்கள் அமைக்கும் போது நாக தோஷம் ,செவ்வாய் தோசம் , புத்திர தோஷம் , சகடை தோஷம் ,பாலரீஷ்ட தோசம் ,களத்திர தோசம் ,,தாய் தந்தைக்கு தோசம் , இல்லாமல் குறிக்க வேண்டும் . 8 . திருமணத்தை தாமதம் செய்யும் நட்சத்திரம் ஆன, மூலம் ,ஆயில்யம்,கேட்டை ,விசாகம் ,தவிர்க்க வேண்டும் . 9. அஷ்டமி திதி ,ராகுகாலம் ,யமகண்டம் ,மரணயோகம் ,தவிர்க்க வேண்டும் . 10 எதிர் காலத்தில் வரும் திசைகள் யோகமாக உள்ளவனவா, என்று பார்க்க வேண்டும் . 11. மேற்படி அத்தனை விதிகள் இல்லா விட்டாலும் ஆயுள் நன்றாக உள்ள லக்கினங்களை தேர்வு செய்ய வேண்டும், .
சகல காரியங்கள் வெற்றி அடைய ********************************** ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ் ப்ரசோதயாத் - துர்கை (ராகுதோஷ நிவர்த்திக்காக) ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத் - ஓம் சிம்மத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத் - அன்னபூரணி தேவி (நித்தியான்ன பிராப்திக்காக) ஓம் பக்வத்யைஹ் வித்மஹே மஹேஸ்வர்யைஹ் தீமஹி தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத் - சிவதூதி ஓம் சிவதூத்யை ச வித்மஹே சிவங்கர்யைச தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத் - பாலா ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே காமேஸ்வரீ ச தீமஹி தன்னோ பாலா ப்ரசோதயாத் - அம்ருதேஸ்வரி தேவி (ஆயுள் ஆரோக்கியம் பெற) ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே சக்தீஸ்வரீ ச தீமஹி தன்னோ அம்ருத ப்ரசோதயாத் - வாக்பலா (பேச்சுபிழை சரியாக) ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே வாக்பவேஸ்வரீ தீமஹி தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத் - சர்வமங்கள (நல் பயணத்திற்கு) ஓம் சர்வமங்களை வித்மஹே மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத் - கன்னிகா பரமேஸ்வரி (மாங்கல்ய பிராப்தம் கிடைக்க) ஓம் பாலாரூபிணி வித்மஹே பரமேஸ்வரி தீமஹி தன்னோ கந்யா ப்ரசோதயாத் - ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே கந்யாரூபிணீ தீமஹி தன்னோ கந்யா ப்ரசோதயாத் - காமேச்வரி (மங்களம் உண்டாக) ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே காமேச்வர்யை தீமஹி தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத் - ஓம் காமேஸ்வர்யை வித்மஹே நித்யக்லிந்நாய தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத் காமதேனு (கேட்டது கிடைக்க) ஓம் சுபகாமாயை வித்மஹே காமதாத்ரை ச தீமஹி தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத் - காளிகா தேவி (கேட்ட வரம் கிடைக்க) ஓம் காளிகாயை ச வித்மஹே ஸ்மசான வாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரசோதயாத் - வாராஹி (நினைத்தது நிறைவேற) ஓம் வராஹமுகி வித்மஹே ஆந்த்ராஸனீ தீமஹி தன்னோ யமுனா ப்ரசோதயாத் - குலசுந்தரி (சொத்து, கவுரவம் அடைய) ஓம் குலசுந்தர்யை வித்மஹே காமேஸ்வர்யை தீமஹி தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத் - சந்தோஷி மாதா (திருமண தடை நீங்க) ஓம் ருபாதேவீ ச வித்மஹே சக்திரூபிணி தீமஹி தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத் - கவுமாரி தேவி (சக்தி பெற) ஓம் சிகித்வஜாயை வித்மஹே வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத் - கவுரிதேவி (தியானம் சித்தி அடைய) ஓம் சுவபாகாயை வித்மஹே காம மாளினை தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத - ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ருத்ரபத்ன்யை ச தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத் - ஓம் கணாம்பிகாய வித்மஹே மஹாதபாய தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத் - ஓம் சௌபாக்யதாயை வித்மஹே காம மாலாய தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத் - ஓம் ஸோஹம்ச வித்மஹே பரமஹம்ஸாய தீமஹி தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத் - கங்காதேவி (ஞாபக சக்தி பெற) ஓம் த்ரிபதகாமினி வித்மஹே ருத்ரபத்ன்யை ச தீமஹி தன்னோ கங்கா ப்ரசோதயாத் - சாமுண்டி ஓம் பிசாசத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னோ காளி ப்ரசோதயாத் - ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே சக்ரதாரிணி தீமஹி தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத் - சித்ரா (கலைகளில் தேர்ச்சி பெற) ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே மஹாநித்யை ச தீமஹி தன்னோ நித்ய ப்ர சோதயாத் - சின்னமஸ்தா (எதிரிகளை வெல்ல) ஓம் வைரேசான்யை ச வித்மஹே சின்னமஸ்தாயை ச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் - சண்டீஸ்வரி (நவகிரக தோஷங்கள் விலக) ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே மஹாதேவீ ச தீமஹி தன்னோ சண்டீ ப்ரசோதயாத் - ஓம் அப்ஜஹஸ்தாய வித்மஹே கௌரீஸித்தாய தீமஹி தன்னோ சண்டீ ப்ரசோதயாத் - ஜெயதுர்கா (வெற்றி கிடைக்க) ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே துர்காயை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத் - ஓம் நாராண்யை வித்மஹே துர்காயை ச தீமஹி தன்னோ கேணீ ப்ரசோதயாத் - ஜானகிதேவி (கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்க) ஓம் ஜனகனாயை வித்மஹே ராமபிரியாய தீமஹி தன்னோ சீதா ப்ரசோதயாத் - ஓம் அயோநிஜாயை வித்மஹே ராமபத்ன்யை ச தீமஹி தன்னோ சீதா ப்ரசோதயாத் - ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ராமபத்ன்யை ச தீமஹி தன்னோ சீதா ப்ரசோதயாத் - ஜ்வாலாமாலினி (பகைவரை வெல்ல) 1ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே மஹா ஜ்வாலாயை தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத் - ஜேஷ்டலக்ஷ்மி (மந்திர சக்தி பெற) ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே நீலஜேஷ்டாயை தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத் - துவரிதா ஓம் த்வரிதாயை வித்மஹே மஹாநித்யாய தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத் - தாராதேவி ஓம் தாராயை ச வித்மஹே மனோக்ரஹாயை தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத் - திரிபுரசுந்தரி ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத் - ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே க்ளீம் காமேஸ்வரீ தீமஹி சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத் - மஹா திரிபுரசுந்தரி ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத் - ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத் - ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத் - தனலட்சுமி (செல்வம் பெற) ஓம் தம்தனதாயை வித்மஹே ஸ்ரீம் ரதிபிரியாயை தீமஹி ஹ்ரீம் ஸ்வாஹா சக்தி ப்ரசோதயாத் - பராசக்தி (வாக்குவன்மை பெற) ஓம் தசவனாய வித்மஹே ஜ்வாமாலாயை ச தீமஹி தன்னோ பராசக்தி ப்ரசோதயாத் - பிரணவதேவி ஓம் ஓம்காராய வித்மஹே பவதாராய தீமஹி தன்னோ ப்ரணவஹ் ப்ரசோதயாத் - தரா ஓம் தனுர்தைர்யை ச வித்மஹே சர்வ சித்தை ச தீமஹி தன்னோ தரா ப்ரசோதயாத் - தூமாவதி ஓம் தூமாவத்யை ச வித்மஹே சம்ஹாரின்யை ச தீமஹி தன்னோ தூம ப்ரசோதயாத் - - நீலபதாகை (தேர்தலில் மற்றும் பரீட்சையில் வெற்றி பெற) ஓம் நீலபதாகை வித்மஹே மஹாநித்யாயை தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத் - நீளா ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத் - ஓம் விஷ்ணுபத்ன்யை ச வித்மஹே ஸ்ரீ பூ சகை ச தீமஹி தன்னோ நீளாஹ் ப்ரசோதயாத் - ஸ்ரீ(மகாலட்சுமி) ஓம் தேஜோரூப்யை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ ஸ்ரீஹ் ப்ரசோதயாத் - ஸ்ரீதேவி ஓம் தேவீமனௌஜ ச வித்மஹே மஹாசக்த்யை தீமஹி தன்னோ தேவீஹ் ப்ரசோதயாத் - தேவி பிராஹ்மணி ஓம் தேவீ பிராஹ்மணி வித்மஹே மஹாசக்த்யை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத் - சூலினிதேவி (தீய சக்திகளிலிருந்து காக்க) ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே மஹாசூலினி தீமஹி தன்னோ துர்கா ப்ரசோதயாத் - ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே மஹாசூலினி தீமஹி தன்னோ துர்கஹ் ப்ரசோதயாத் - சரஸ்வதி (கல்வியும், விவேகமும் பெருக) ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே விரிஞ்சிபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத் - ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ஸர்வ ஸித்தீச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத் - ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே பிரஹ்மபத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத் - ஓம் யேயே சர்வபிரியவாக் வித்மஹே ப்ரீம் வாகீஸ்வரீ தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத் - ஓம் ஐம் வாக்தேவ்யை ச வித்மஹே காமராஜாய தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத் - ஓம் சரஸ்வத்யை ச வித்மஹே பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத் - ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே பிரஹ்ம பத்ன்யை ச தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத் - லட்சுமி (சகல செல்வங்களையும் அடைய) ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத் - ஓம் லக்ஷ்மிர் பூர்புவஹ் லக்ஷ்மி ஸ்வஹ் காலகம் தீமஹி தன்னோ மஹாலக்ஷ்மீஹ் ப்ரசோதயாத் - ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபந்தாய ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத் - சப்தமாத்ருகா தேவி ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத் - பகமாளினி (சுக பிரசவத்திற்காக) ஓம் பகமாளிணி வித்மஹே சர்வ வசங்கர்யை தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத் - பகளாதேவி ஓம் ஜம்பகளாமுகீ வித்மஹே ஓம் க்ளீம் காந்தேஸ்வரீ தீமஹி தன்னோ ஸெளஹ் தந்தஹ் ப்ரஹ்லீம் ப்ரசோதயாத் - ஓம் குலகுமாரை வித்மஹே பீதாம்பராயை தீமஹி தன்னோ பகளா ப்ரசோதயாத் - பகளாமுகி ஓம் பகளாமுக்யை ச வித்மஹே சதம்பின்யை ச தீமஹி தன்னோ தேவ ப்ரசோதயாத் - ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே மஹாஸ்தம்பிணி தீமஹி தன்னோ பகளா ப்ரசோதயாத் - ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே பகளாமுகி தீமஹி தன்னோ அஸ்த்ரஹ் ப்ரசோதயாத் - பாரதிதேவி ஓம் நாகாராயை ச வித்மஹே மஹா வித்யாயை தீமஹி தன்னோ பாரதீ ப்ரசோதயாத் புவனேஸ்வரி தேவி ஓம் நாராயந்யை வித்மஹே புவநேஸ்வர்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் - பூமா தேவி (வீடு, நிலம் வாங்க) ஓம் தநுர்தராயை ச வித்மஹே சர்வஸித்தைச தீமஹி தன்னோ தராஹ் ப்ரசோதயாத் - பைரவி தேவி ஓம் த்ரிபுராதேவி வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ பைரவீ ப்ரசோதயாத் - ஓம் த்ரிபுராயை வித்மஹே பைரவைச தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் - மகாமாரி (அம்மை வியாதி குணமடைய) ஓம் பிசாசத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மாரி ப்ரசோதயாத் - மஹா வஜ்ரேஸ்வரி (பிரச்சனைகளில் தீர்வு காண) ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே வஜ்ரநித்யாய தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத் - மகாசக்தி (மந்திர சக்தியில் வல்லமை பெற) ஓம் தபோமயை வித்மஹே காமத்ருஷ்ணை ச தீமஹி தன்னோ மஹாசக்தி ப்ரசோதயாத் - மஹிஷாஸுரமர்தினி (பகைவர்கள் சரணாகதி அடைய) ஓம் மஹிஷமர்தின்யை வித்மஹே துர்காதேவ்யை ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத் - மகேஸ்வரி (சர்ப தோஷம் நீங்க) ஓம் வ்ருஷத்வஜாய வித்மஹே மிருக ஹஸ்தாய தீமஹி தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத் - மாதங்கி (அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைய) ஓம் மாதங்க்யை வித்மஹே உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத் - மாத்ரு (கா) ஓம் சர்வசக்திஸ்ச வித்மஹே ஸப்தரூப ச தீமஹி தன்னோ தேவீ ப்ரசோதயாத் - மீனாக்ஷி (சகல சவுபாக்கயங்களை பெற) ஓம் உன்னித்ரியை ச வித்மஹே சுந்தபப்ரியாயை ச தீமஹி தன்னோ மீனாக்ஷீ ப்ரசோதயாத் - முக்தீஸ்வரி ஓம் த்ரிபுரதேவி வித்மஹே முக்தீஸ்வரி ச தீமஹி தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத் - யமுனா ஓம் யமுனா தேவ்யை ச வித்மஹே தீர்தவாசினி தீமஹி தன்னோ யமுனா ப்ரசோதயாத் ராதா (அனுகிரகஹம் பெற) ஓம் விருஷபானுஜாயை வித்மஹே கிருஷ்ணப்ரியாயை தீமஹி தன்னோ ராதிகா ப்ரசோதயாத் - ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை வித்மஹே விஸ்வஜனன்யை தீமஹி தன்னோ சக்தி ப்ரசோதயாத் - வாணி (கலைகளில் தேர்ச்சி பெற) ஓம் நாதமயை ச வித்மஹே வீணாதராயை தீமஹி தன்னோ வாணீ ப்ரசோதயாத் - வாசவி ஓம் வாசவ்யை ச வித்மஹே குசுமபுத்ர்யை ச தீமஹி தன்னோ கண்யகா ப்ரசோதயாத் - விஜயா (வழக்குகளில் வெற்றி பெற) ஓம் விஜயதேவ்யை வித்மஹே மஹாநித்யாய தீமஹி தன்னோ நித்ய ப்ரசோதயாத் - வைஷ்ணவி தேவி (திருமண தடை நீங்க) ஓம் தார்க்ஷ்யத்வஜாய வித்மஹே சக்ர ஹஸ்தாய தீமஹி தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத் - ஓம் சக்ரதாரிணீ வித்மஹே வைஷ்ணவீதேவீ தீமஹி தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத் - சியாமளா (சகல சவுபாக்யங்களும் கிடைக்க) ஓம் ஐம் சுகப்பிரியாயை வித்மஹே க்லீம் காமேஸ்வரி தீமஹி தன்னோ சியாமா ப்ரசோதயாத் - ஓம் மாதங்கேஸ்வரி வித்மஹே காமேஸ்வரி ச தீமஹி தன்னோ க்லின்னே ப்ரசோதயாத் - துர்கா தேவி ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமரி தீமஹி தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத் - வனதுர்கா ஓம் உத்திஷ்ட புருஷ்யை வித்மஹே மகாசக்த்யை தீமஹி தன்னோ வனதுர்கா ப்ரசோதயாத் - ஆஸூரி துர்கா ஓம் மகா காம்பீர்யை வித்மஹே சத்ரு பக்ஷிண்யை தீமஹி தன்னோ ஆஸூரி துர்கா ப்ரசோதயாத் - திருஷ்டி துர்கா ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யை வித்மஹே தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாசின்யை தீமஹி தன்னோ திருஷ்டி துர்கா ப்ரசோதயாத் - ஜாதவேதா துர்கா ஓம் ஜாதவேதாயை வித்மஹே வந்தி ரூபாயை தீமஹி தன்னோ ஜாதவேதோ ப்ரசோதயாத் - - வனதுர்கா ஓம் ஹ்ரீம் தும் லவந்தராயை வித்மஹே தும் ஹ்ரீம் ஓம் பயநாசிந்யை தீமஹி தன்னோ வந துர்கா ப்ரசோதயாத் - சந்தான துர்கா ஓம் காத்யாயண்யை வித்மஹே கர்பரக்ஷிண்யை தீமஹி தன்னோ சந்தான துர்கா ப்ரசோதயாத் - சபரி துர்கா ஓம் காத்யாயண்யை வித்மஹே கால ராத்ர்யை தீமஹி தன்னோ சபரி துர்கா ப்ரசோதயாத் - சாந்தி துர்கா ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ஜயவரதாயை தீமஹி தன்னோ சாந்தி துர்கா ப்ரசோதயாத்
புத்திர ஸ்தான அதிபதியை சனி பார்த்தால் மனைவி கர்ப்பமாவது அரிது. அப்படியே பிறந்தாலும் குழந்தைக்கு கண்டம் ஏற்படும்.
மாந்தி சனியின் புதல்வர் என்று அழைக்கப்படுகிறார் .மாந்தி நவாம்சத்தில் இருக்கும் இடம் இறப்பை கணிக்க உதவும் ஸ்தானம் என்று சொல்லப்பட்டுள்ளது . மாந்தி நவாம்சத்தில் இருக்கும் இடத்திக்கு கோட்சார சனி வரும் காலமும், பார்க்கும் காலமும் ஒருவருக்கு மரணத்தை தரும் என்று கூறப்பட்டுள்ளது . 1 . மாந்தி லக்கினத்தில் இருந்தால் ; விஷம் தீண்டுவதால் ஆபத்து , கண் கோளாறு ஏற்படும் . 2 .மாந்தி 2 இல் இருந்தால் , கல்வி அறிவில்லாத ஏழை 3 .மாந்தி 3 இல் இருந்தால் நீண்ட ஆயுள் ,செல்வம் ,புகழ் ,உடன் பிறப்பால் நன்மை 4 . மாந்தி 4 இல் இருந்தால் ; கால்நடை –விவசாயம் ,நன்மை வெளி ஊர்களில் வசிக்கும் நிலை ஈற்படும் . 5. மாந்தி 5 இல் இருந்தால் ; மூத்தோருக்கு ஆகாத நிலை , தகப்பன் உறவு பாதிக்கப்படும் . 6. மாந்தி 6 இல் இருந்தால் ; இறக்கம் ,செல்வம் , புகழ் ,பிறரால் விரும்பப்படும் நிலை ஈற்படும் . 7 .மாந்தி 7 இல் இருந்தால் ; பல பெண்கள் தொடர்பு ஈற்படும் .சட்ட.ததிற்க்கு புறம்பான நிலையில் செல்வர் ; 8 . மாந்தி 8 இல் இருந்தால் ; குறையான ஆயுள் , சண்டை போடுவார் ,நண்பர்கள் குறைவு ,விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் . 9 . மாந்தி 9 இல் இருந்தால் ; ஏழ்மை – பிறர் மீது குற்றத்தை சாட்டுவார் . 10. மாந்தி 10 iஇல் இருந்தால் ; முரட்டுதனமான ,பிடிவாத குணம் உள்ளவர் . 11. மாந்தி 11 இல் இருந்தால் ; வீடு ,நிலம் , அதிருஷ்டம் உதவியுடன் புதையல் எடுப்பார் ,வாகன வசதி உண்டு . 12 மாந்தி 12 இல் இருந்தால் ; பல தகாத காரியங்கள் செய்வார் ,கண் நோய் ஏற்படும் ,செல்வம் இழப்பு ஏர்படும் பல செலவுகள் செய்வார்
ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் நவ கிரகங்களில் மிக மிக முக்கியமான கிரகமாகிய "சனீஸ்வரர் பகவானை"பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் சனி பகவானைப் பற்றிய முரண்பட்ட தகவல்களும் மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன,சனி ஒரு தீய கோள்,முழு அசுபர், யாருக்கும் நன்மை செய்ய மாட்டார்,சோம்பேறி, ஜாதகத்தில் சனி இருக்கும் பாவம், கெட்டுப்போகும் நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடும்,சனி திசை வந்தால் ஒரு மனிதன் அனைத்தையும் இழந்து விடுவார் இப்படி எல்லாம் சொல்வார்கள். ஆனால் இது அனைத்தும் முற்றிலும் மிக மிக தவறாகும். நவகிரகங்களில் சனி பகவானையும் போன்று நீதி உடையவர் தர்மத்தின் பக்கம் நிற்பவர் நேர்மையானவர் யாருமே கிடையாது. சனி பகவான் தர்மத்திற்கும் கடமைக்கும் கண்ணியத்திற்கும் கட்டுப்பட்டவர் ஆவார். சனி பகவான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நேர்மை ,பொறுமை, நிதானம், நிசப்தம், நாவடக்கம், சொல்லடக்கம், தன்னடக்கம் தர்மம் இது எல்லாம் சனி பகவானின் ஒரு குணமாகும் அல்லது சனியின் காரணமாகும் இது சார்ந்த விஷயங்களில் ஒரு மனிதன் எப்போது தன்னுடைய வாழ்க்கையில் இந்த கட்டுப்பாடுகளை தகர்த்து எறிகிறானோ அப்போதுதான் சனி பகவான் அவரை தண்டிப்பார் அல்லது பிடிப்பார் நவகிரகங்களில் சனி பகவானுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சக்தி. நவக்கிரங்களில் ஏன் சனி பகவானுக்கு மட்டும் அவ்வளவு சக்தி என்றால் சனி பகவான் சூரிய பகவானின் மகன் மட்டுமல்ல அவ்வாறு எம்பெருமான் சிவபெருமானின் அம்சம் ஆவார். சிவபெருமானுடைய அம்சத்துடனும் அவருடைய ஆசியுடனும் பிறந்தவர்தான் சனி பகவானாவார். இன்னும் சொல்லப்போனால் சிவபெருமானுடைய ஒரு அவதாரமாக கூட நாம் சனி பகவானை எடுத்துக் கொள்ளலாம். பூமியில் தர்மத்தையும் நியாயத்தையும் நிலைநாட்ட மனிதர்களை கெட்ட பாதையிலிருந்து நல்வழிக்கு கொண்டு வர அவதரித்தவர் தான் சனி பகவானாவார். அதே சமயம் சனி பகவான் அசிங்கத்திற்கும் அவமானத்திற்கும் அதிபதி ஆவர்.சூரியன் அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும் தலைகணத்திற்கும் அதிபதி ஆவார். எப்போதுமே சூரிய பகவானுக்கும் சனி பகவானுக்கும் ஆகவே ஆகாது. எதிரும் புதிரும் ஆகவே எப்போதும் இருவரும் இருப்பார்கள். ஏனென்றால் சனி பகவானுக்கு அதிகாரத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவது அகங்காரத்தில் ஆடுவது இது எல்லாம் பிடிக்காது.ஆனால் சூரியனுக்கு தலை கணத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவது அதிகாரம் செய்வதுதான் பிடிக்கும். அதனால்தான் ஜோதிடத்தில் சூரியனுக்கு சனி பகவான் பகைவர் என்று சொல்கின்றனர்.அதற்கு இதுதான் காரணம். அதனால்தான் ஜோதிடத்தில் சூரிய பகவான் எந்த இடத்தில் உச்சம் ஆகிறாறோ அந்த இடத்தில் சனி பகவான் நீச்சம் ஆகிறார் சனி பகவான் எந்த பாவத்தில் உச்சம் ஆகிறாறோ அந்த வீட்டில் சூரிய பகவான் நீச்சம் ஆகிறார்.அதற்கு இதுதான் காரணம். அதனால்தான் காலபுருஷ தத்துவத்தில் மேஷத்தில் சூரிய பகவான் உச்சம் ஆகிறார் அதே பாவத்தில் சனி பகவான் நீச்சம் ஆகிறார் அதேசமயம் துலாத்தில் சனி பகவான் உச்சம் ஆகிறார்.அதே பாவத்தில் சூரிய பகவான் நீச்சம் ஆகிறார்.எப்போதுமே காலபுருஷ தத்துவத்தின்படி படையில் சனி பகவானும் சூரிய பகவானும் ஒருவரை ஒருவர் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இருவருக்குமே ஏழாம் பார்வை இருக்கிறது எனவே சனிபகவானின் பார்வையிலிருந்து சூரியபகவான் எப்போதுமே விலக மாட்டார் நான் சொல்வது காலபுருஷ தத்துவத்தின்படி ஒருவருக்கொருவர் எப்போதுமே பார்த்துக் கொண்டே இருப்பார்கள் இதுதான் சூரியனுக்கும் சனிக்கும் இருக்கும் தொடர்பாகும். கால பைரவருக்கும் சனிபகவானுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. பிரம்ம தேவருக்கும் சிவபெருமானுக்கும் இடையில் மிகப்பெரிய வாக்குவாதம் எழுந்தது நான் பெரியவனா இல்லை நீ பெரியவனா இதுபோன்ற பிரச்சினை வந்தது. பிரம்ம தேவருக்கு முதலில் 5 தலைகள் இருந்தது.அந்த ஐந்தாவது தலையை தான் கர்வம் கொண்ட அகங்காரம் கொண்ட குணங்களைக் கொண்ட தலையாகும். சிவபெருமானைப் பற்றி பிரம்மதேவர் அகங்காரதிலும் ஆணவதிலும் சில தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிக்கொண்டே இருந்தார் உடனே கோபமடைந்த சிவபெருமான் காலபைரவரை வரவழைத்தார். கால பைரவரிடம் சிவபெருமான் என்னுடைய கட்டளைக்கிணங்க என்னுடைய ஆணைக்கிணங்க நீ சென்று பிரம்மதேவனின் அந்த அகங்காரம் கொண்ட ஐந்தாவது தலையை பிடுங்கி எடுத்து விடு என்று ஆணையிட்டார். ஆனால் காலபைரவர் செய்த தவறு என்னவென்றால் பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை பிடுங்கும் போது சிவபெருமான் இட்ட கட்டளையை ஏற்று நான் உங்களை தண்டிக்கிறேன் என்று சொல்லவில்லை காலபைரவர் என்ன செய்தார் என்றால் என்னுடைய பலத்தை பார் என்று சொல்லி ஆணவத்தில் அந்த ஐந்தாவது தலையை வெட்டிவிட்டார். அப்படி காலபைரவர் ஆணவத்துடன் பிரம்மதேவரின் ஐந்தாவது தலையை வெட்டும் போது சனி பகவான் காலபைரவரை பார்த்து விடுகிறார். அதனால் வெட்டப்பட்ட அந்தக் தலை கால பைரவரின் கையில் ஒட்டிக்கொண்டது சனி பகவான் காலபைரவரை பார்த்து என்ன சொன்னார் என்றால் நான் மனிதர்களையே அகங்காரத்தில் ஆடக்கூடாது ஆணவத்தில் ஆடக்கூடாது என்று சொல்கிறேன் நீ ஒரு கடவுளாக இருந்து கொண்டு எப்படி நீ அகங்காரத்தில் ஆணவத்தில் ஆடினாய் அதற்கான தண்டனையை நீ அனுபவித்து தான் ஆக வேண்டும் நீ எப்போது உன் அகங்காரத்தை ஆணவத்தை உடைக்கிறாயோ அப்போதுதான் இந்த சாபத்திலிருந்து உனக்கு விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு சனி பகவான் அங்கிருந்து சென்றுவிடுகிறார். கடைசியில் கால பைரவர் தன்னுடைய கையில் ஒட்டிக் கொண்ட திருவடி உடன் அனைத்து தேவர்களிடமும் அனைத்து கடவுளிடமும் சென்று பிச்சை எடுத்தார்.அதன் மூலம் தன்னுடைய ஆணவத்தையும் தான் செய்த குற்றத்தையும் உணர்ந்து அனைத்தையும் விட்டு திருந்தினார். அப்போதுதான் காலபைரவருக்கு சாப விமோசனம் கிடைத்தது கடவுளுக்கே இப்படி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் சிந்தித்துப் பாருங்கள். நவகிரகங்களில் சனி பகவானுக்கு தான் ஒரு மனிதனுக்கு தேவையான மிக முக்கியமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொழில் ,ஆயுள், கடமை கண்ணியம் கர்மகாரகன் இது அனைத்தும் சனி பகவானின் காரகத்துவம் ஆகும். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமானவைகள் இதுதான். அதனால்தான் இது அனைத்தும் சனியின் கட்டுப்பாட்டில் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் முக்கியமாக சனியன் காரகத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களும் நாம் வாழ்க்கையில் செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் கண்டிப்பாக இருக்கும். தொழில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் செய்தே ஆக வேண்டும் அது யாராக இருந்தாலும் சரி ஏன் இது அனைத்தும் சனியின் காரகத்துவதிற்கு கொடுத்தார்கள் என்றால் ஒரு மனிதன் தொழில் சார்ந்த விஷயங்களில் அகங்காரத்திலும் ஆணவதிலும் ஆடக் கூடாது என்பதற்காகத்தான். தொழிலில் வருமானம் அதிகமாக வரும் போது தலைக்கனம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சனியின் காரகத்துவத்திற்கு தொழில் ஸ்தானத்தை கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் காலபுருஷ தத்துவத்தின் அடிபடையில் தொழில் ஸ்தானத்தை குறிக்கக்கூடிய பத்தாம் பாவம் ஆகிய மகரம் என்னும் வீடும் லாப ஸ்தானத்தை குறிக்கக்கூடிய பதினோராம் பாவம் ஆகிய கும்பம் எனும் வீடும் சனி பகவானின் வீடுகளாக வருகிறது. யாரெல்லாம் தொழிலில் ஏமாற்றுகிறார்களோ தொழில் அடுத்தவர்களுக்கு துரோகம் செய்கிறார்களோ தொழிலில் தர்மத்தையும் நியாயத்தையும் சரியாக கடைப்பிடிக்காமல் இருக்கிறார்களோ அவர்களை தண்டிப்பதற்காக தான் சனி பகவானுக்கு தொழில் ஸ்தானம் எனும் பத்தாம் பாவமும்,லாப ஸ்தானம் எனும் பதினோராம் பாவமும் கர்ம ஸ்தானம் சனி பகவானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சனிபகவான் தான் தொழிலுக்கும் அதிபதி ஆயுளுக்கும் அதிபதி அதாவது யாருடைய குடும்பத்தில் எல்லாம் தொழிலில் நன்றாக கொடிகட்டிப் பறக்கிறார்களோ அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் ஆயுள் அவ்வளவாக இருக்காது. அதே சமயம் யாருடைய குடும்பத்தில் எல்லாம் அனைவருக்கும் ஆயுள் நன்றாக இருக்கிறதோ அவர்கள் குடும்பத்தில் தொழில் நன்றாக இருக்காது யாரையெல்லாம் சனி பகவான் பிடிப்பார் சனிபகவானுடைய காரகத்துவங்களை பார்க்கலாம் சனி பகவான் அடிமை மனோபாவம்,தாழ்வு மனப்பான்மை, பயத்தை கொடுக்கக்கூடியவர்,பாதுகாப்பற்ற ஒரு மனோபாவத்தை கொடுக்கக் கூடிய அசிங்கத்தையும் ,அவமானத்தையும், கொடுக்கக் கூடியவர்,இது எல்லாம் சனியின் காரகத்துவம் ஆகும். அதாவது யாரெல்லாம் அகங்காரத்தில் ஆணவத்தில் ஆடுகிறார்களோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களோ, கடமை, நேர்மை, கண்ணியத்துடன் வாழாமல் இருக்கிறார்களோ, அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கிறார்களோ அவர்களைத் தான் சனிபகவான் பிடிப்பார். இது போன்று செய்பவர்களை சனி பகவான் முதலில் அவர்களுடைய தொழில் கை வைப்பார் அதாவது தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துவார்.அல்லது அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்.இல்லையென்றால் ஆயுளில் கை வைத்து விடுவார். இதை நாம் நிகழ்காலத்தில் எப்படி ஒப்பிடலாம் என்றால் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் அல்லது ஊரில் இருக்கும் மிகப்பெரிய முக்கியமான மனிதர்கள் தங்களுக்கு ஒரு அசிங்கம் ஒரு அவமானம் வந்து விட்டால் அது தொழிலாக இருக்கலாம் சொந்த பிரச்சினையாக இருக்கலாம் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம். இதற்குக் காரணம் சனி பகவான் தான் ஆவார்.ஏனென்றால் இவர்கள் இத்தனை காலம் வைராக்கியத்துடன் கொண்டிருந்த அந்த ஒரு கொள்கை மற்றும் ஒரு பெயர் ,புகழ், அந்தஸ்து, மரியாதை, இது எல்லாம் இவர்களை விட்டுப் போய் விடும் அவர்களால் அந்த மன வலியை தாங்கி வாழ முடியாது ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு போதும் அகங்காரத்தில் ஆணவதில் தலை கணதில் இருக்கக்கூடாது,வாழக் கூடாது அப்படி இருந்தால் சனி பகவான் முதலில் அவர்களைத்தான் பிடிப்பார் பிறகு தன்னுடைய வேலையை காட்டி விடுவார். சனி பகவான் ஒருவரை பிடித்தவர் என்றால் அவர்களை இரண்டு விஷயங்களில் துன்புறுத்துவது தொழிலில் மற்றொன்று ஆயுளில் மிக முக்கியமாக சனியின் காரகத்துவமான கடை நிலை ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பவர்கள், அடிமை வேலை செய்பவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள் கொத்தடிமைகள்,தாழ்த்தப்பட்ட மக்கள்,பழங்குடிமக்கள்,சிறுபான்மையின மக்கள்,உடல் ஊனமுற்றவர்கள் அங்கஹீனம் கொண்டவர்கள், பிச்சைக்காரர்கள்.இவர்கள் மனம் புண்படும் வகையில் ஒரு தவறையோ ஒரு கேலி கிண்டலயோ, ஒரு துரோகத்தையும் என்றைக்குமே செய்யவே கூடாது. மீறி செய்தார்கள் என்றால் சனி பகவான் அவ்வளவுதான் அவர்களை விட்டு வைக்க மாட்டார் உடனடியாக பிடித்துவிடுவார் பிறகு அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் தொழிலிலும் ஆயுளிலும் கண்டிப்பாக கை வைத்து விடுவார்.எனவே யாரும் இவர்களை சார்ந்து எந்த ஒரு தவறையும் ஒரு துரோகத்தையும் ஒரு கேலி செய்ய வேண்டாம் சனி பகவானுக்கு அகங்காரம் ஆணவம் என்பது பிடிக்காது.நம்மை சனி பகவான் பிடிக்கக் கூடாது அல்லது சனியின் தாக்கத்திலிருந்து நாம் பாதிக்கக்கூடாது என்று நினைக்க வேண்டும் என்றால்.முதலில் நாம் அகங்காரத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவதை விட்டுவிட வேண்டும் அப்போதுதான் சனி பகவான் நம்மை விடுவார். யாரெல்லாம் தன்னடக்கத்துடன் நாவடகத்துடன் சொல்லடக்கத்துடன் பொறுமையுடன் நிதானத்துடன் அமைதியுடன் மரியாதையுடன் இருக்கிறார்களோ அல்லது வாழ்கிறார்களோ அவர்களை சனி பகவான் காலத்திற்கும் அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் அவர்கள் கேட்கும் அனைத்தையும் வாரி வாரி வழங்குவார்.இவர்கள்தான் சனிபகவானுடைய அருள் பெற்றவர்கள் இன்னும் சனி பகவானைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம் அவ்வளவு விஷயங்கள் எழுதி கொண்டு போகலாம்
ரோஹிணி நட்சத்திரம் எத்தகைய பீடைகளையும் போக்க வல்ல ஸ்ரீகிருஷ்ண செல்வப் பீட சக்திகளைப் பெற்றுள்ளது. குசேலர், ரோஹிணி கூடிய சனிவாரத்தில் தம் பெரிய குடும்பப் பரிவாரத்தோடு, ஸ்ரீகிருஷ்ண விரத பூஜைகளைப் பூண்டு வழிபட்டு வர, கண்ணனே கனிந்து உவந்து வந்து குசேலருக்கு உயரிய செல்வ கடாட்சத்தை அருளினார். வறுமைப் பீடையையும், மனப் பீடையையும் போக்க வல்லதே ரோஹிணி கூடும் சனிவார நாளில் ஏற்று ஆற்றும் நோன்புடைக் கண்ணபிரான் வழிபாடும் குடும்பத்தோடு கூடிய ஸ்ரீகிருஷ்ண தரிசனமும் ஆகும். சனிக்கிழமை வரும் ரோஹிணி நாளின் அம்சங்களை வைத்து, ‘ரோஹிணித்த சனி, சனித்த ரோஹிணி’ என்ற இரண்டு வகையிலான சனிவார வகைகள் உண்டு. சனிக்கிழமை அன்று சூரியோதயத்திற்கு முன்னரேயே ரோஹிணி நட்சத்திரம் நிறைந்திட, இவ்வாறு ஏற்கனவே ரோஹிணி பூரித்திடத் தோன்றும் சனிக் கிழமை, ‘ரோஹிணித்த சனியாகும்’. சனிக் கிழமை, சூரியோதயத்திற்குப் பின் ரோஹிணி நட்சத்திரம் ஏற்பட்டிடில், ‘சனித்த ரோஹிணி’ ஆகும். ‘பணம் வந்தவுடன் கரைவதற்குக்’ காரணமான பலத்த கரிதோஷங்களை நீக்க வல்லதே ‘சனித்த ரோஹிணி’ தின பூஜைப் பலனாகும். இவ்வாறு ‘சனித்த ரோஹிணி நாளில்’ ஸ்ரீகிருஷ்ண பகவான், ஜீவ வாழ்க்கையின் பல்துறைகளிலும் வளம் தரும் ஆயுட் சேம மூர்த்தியாக அருள்கின்றார். “ரோஹிணித்த சனிவாரம்” வந்தமையும் நாளில், ஸ்ரீகிருஷ்ண பரிவார வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புடையது. ‘ஸ்ரீகிருஷ்ண பரிவார வழிபாடு’ என்பது, பரமாத்வாமாம் ஸ்ரீகிருஷ்ண பகவான் தம் பத்னியர்கள், பிள்ளைகள், பேரன்களோடு - குடும்பத்தோடு - திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் அருள்வது போலானதாகும். மதுரை அருகே திருத்தங்கல் ஆலயத்தில் பெருமாளப்பர், ஜாம்பவதி தேவியோடு மிகவும் அபூர்வமாகப் அருள்கின்றார். ஸ்ரீகிருஷ்ண பரிவாரத் தரிசன ஆலயங்களில், தத்தம் குடும்பத்தோடு தரிசித்து, அன்னம், ஆடைகள், பழங்கள், பாதணிகள் போன்ற எட்டு விதமான தான தர்மங்களையும் அவரவர் குடும்ப வசதிக்கு ஏற்ப நிகழ்த்துதலால், குடும்பத்தில் நல்ல மன அமைதி உண்டாகும்.
ஒருவர் உலகப் புகழ் பெறக் கூடிய கோடீஸ்வரர் ஆகிப் பலருக்கு உதவி புரியும் ஒரு பிரமுகராக ஆக வேண்டுமானால் அவருடைய ஜனன ஜாதகத்தில் வலிமை பெற்றவர் என்று சொல்லபடுகின்ற ராகு கேந்திரத்தில் தனித்து நின்றிறுக்க அந்த ராகுவுக்கு 7 -ஆம் இடத்தில் மறையவன் என்று சொல்லபடுகின்ற குருவுடன் இசை ஞானி என்று சொல்லபடுகின்ற கேதுவும் கூடி இருக்க வேண்டும் . இவ்வித அமைப்பில் ராகுவுக்கோ, அல்லது கேதுவுக்கோ , 9- ஆம் ராசியில் புந்தி என்று அழைக்கப்படும் ,புதன் அல்லது சுங்கன் என்று சொல்லக்கூடிய சுக்கீரனோ இடம் பெற்று இருக்க வேண்டும் . ஒருவருக்கு இத்தகைய கிரக அமைப்பு மட்டும் இயற்கையாக ஏற்பட்டு விட்டால் அந்த ஜாதகர் உண்மையில் ஒரு கோடீஸ்வரர் ஆகி விடுவார் . வல்லரவு கேந்திரத்தில் தனித்து நின்று மறையவனோடு இசை ஞாணி மருவக்கரனின் எல்லைஇல்லா நிதிக்கு இறைவான் இவனா என்று இயம்பு தற்கு ஏதுவாய் இருப்பான் மற்றும் நல்லவரன்று உரைப்போரில் சுங்கன் புந்தி நவ கோணத்தில் இருப்பரேல் நிரப்புவீய இல்லை யென்று உரைப் போர்க்கும் மேலவர்க்கும் இரு நிதியம் உதவுகின்ற இறைவனாவான் . கேந்திரம் என்பது ஜனன இலக்கினதிக்கு 1-4-7-10- என்றும் காலப் புருஷ தத்துவம் படி , மேஷம் , கடகம் ,துலாம் , மகரம் என்றும் பொருள் கொள்ளலாம் , ஒரு ஜாதகத்தில் குருவும் ,கேதுவும் ,கூடி இருந்தாலும் அல்லது கேதுவை குரு பார்வை செய்தாலும் ,அந்த ஜாதகர் எப்படியும் பெருமை பெரும் வாழ்க்கை கிடைக்கும் என்பது உறுதி
1- மேசம் வணங்க வேண்டய எந்திரம் :- பால ஷ்ண்மக ஷடாஷர மூலிகை :- வைகுண்ட மூலிகை 2.ரிஷபம் எந்திரம் :- ஹி மஹாலட்சுமி எந்திரம் மூலிகை :- அம்மான் மூலிகை 3.மிதுனம் எந்திரம் :- ஸ்ரீ தன ஆகர்ஷன யந்திரம் மூலிகை :- அற்ற இலை ஒட்டி 4. கடகம் எந்திரம் :- ஸ்ரீ துர்கா யந்திரம் மூலிகை :- நத்தை சூரி மூலிகை 5.சிம்மம எந்திரம் :- ஸ்ரீ சிதம்பர சக்கரம் மூலிகை :- ஸ்ரீ விஷ்ணு மூலி 6.கன்னி எந்திரம் :- ஸ்ரீ சுதர்ஸன யந்திரம் மூலிகை :- துளசி 7. துலாம் எந்திரம் :- ஸ்ரீ சூலினி யந்திரம் மூலிகை :- செந்நாயுருவி 8.விருட்சகம் எந்திரம் :- பால சண்முக ஷாடத்ச்சர எந்திரம் மூலிகை :- மஞ்சை கிளுகிளிப்பை - 9.தனுசு எந்திரம் :- தன சக்ர யந்திரம் மூலிகை :- சிவஞர் மூலி 10.மகரம் எந்திரம் :- ஸ்ரீ பைரவ யந்திரம் மூலிகை :- யானை வணங்கி 11.கும்பம் எந்திரம் :- ஸ்ரீ கணபதி யந்திரம் மூலிகை :- தகரை மூலிகை 12.மீனம் எந்திரம் :- ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம் மூலிகை :- குப்பை மேனி
பிரதமை திதி வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை அக்னி சம்பந்தமான காரியங்கள் செய்யலாம் இந்த திதிக்கு அதிதேவதை அக்னி. துவிதியை‌ திதி : அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன். திருதியை திதி : குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி). சதுர்த்தி திதி : முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும். பஞ்சமி திதி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது. சஷ்டி திதி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை முருகன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். சப்தமி : பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும் அஷ்டமி திதி: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார். நவமி திதி : சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள். தசமி திதி : எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை. ஏகாதசி திதி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார். துவாதசி திதி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார். திரயோதசி திதி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். சதுர்த்தசி திதி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள். பௌர்ணமி திதி: ஹோமம் சிற்பம் போன்ற மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். அமாவாசை திதி : பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள் நம்பிக்கையோடு வழிபாடு பூஜை தானம் தர்மம் அன்னதானம் செய்து நலம் பல பெறுங்கள்
4, ஜோதிட சாஸ்திரம் : ******** காலக்கணக்கீடு : """""""""""""""""""""""""""""""""" கால அளவில் மிகப்பெரியது யுகங்கள் ஆகும் மிகச்சிறியது அல்பமாகும் யுகங்கள் என்பது மொத்தம் நான்கு. 1, கிருதயுகம் திருதயுகம் கிரேதாயுகம். இது மூன்றும் ஒரே பொருள்தான். இதன் கால அளவு 17, லட்சத்து 28, ஆயிரம் ஆண்டுகளாகும் 2, திரேதாயுகம். இதன் கால அளவு 12, லட்சத்து 96, ஆயிரம் ஆண்டுகளாகும் 3, துவாபர யுகம். இதன் கால அளவு 8, லட்சத்து 64, ஆயிரம் ஆண்டுகளாகும் 4, கலியுகம். இதன் கால அளவு 4, லட்சத்து 36, ஆயிரம் ஆண்டுகளாகும். மேற்காணும் கால கணக்கீடு ஆனது பூலோகம் எனும் இந்த பூமியில் வசிக்கும் நம்முடைய 1, நாள் என்பது தேவர்களின் ஒரு சுவாசம் எனும் மூச்சாகும் இவ்வாறு விடும் 21600, மூச்சுக்கள் தேவர்களுக்கு ஒரு தினமாகும். அதாவது நம்முடைய 21600, நாட்கள் தேவர்களின் ஒரு நாளாம். இந்த 21600 ஐ 80, ஆல் பெருக்கினால் வரும் தொகையான (21600 + 80 = 17,28,000) 17, லட்சத்து 28, ஆயிரம் ஆண்டுகள் என்பது கிருத (அ) கிரேதயுகமாகும். இந்த 21600 ஐ 60, பெருக்க வரும் தொகையான (21600 + 60 = 12,96,000) 12, லட்சத்து 96, ஆயிரம் ஆண்டுகள் திரேதாயுகமாகும். இந்த 21600 ஐ 40, ஆல் பெருக்க வரும் தொகையான (21600. + 40 = 8,64, 000) 8, லட்சத்து 64, ஆயிரம் வருடங்கள் துவாபரயுகமாகும் இந்த 21600 ஐ 20 ஆல் பெருக்க வரும் தொகையான (21600 + 20 = 4,32,000) 4, லட்சத்து 32, ஆயிரம் ஆண்டுகள் கலியுகமாகும். மானுட வருடம் மற்றும் தேவ வருடங்களை இணைத்து யுக வருடங்களை நமது முன்னோர்கள் கணக்கீடு அளித்துள்ளார்கள். கலியுகம் கி.மு 3,101ல் ஆரம்பித்தது என்றும் அப்போதுதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மண்ணுலகை நீக்கிப்போனார் என்பதும் புராணங்களில் உள்ள செய்திகள். வேதகால நேர கணக்கீடு : """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""" 4 - நொடிகள் - 1 அசு 6 - அசுக்கள் - 1, பலம் 4 - பலம் - 1, விநாடிகை 60 - விநாடிகள் - 1 - நாழிகை 60 - நாழிகைகள் - 1 - நாள் 1 - நாழிகை - 24, நிமிடங்கள் 1 - நாள் - 24 மணி நேரங்கள் 15 - நாள் - 1 பட்சம் 2 - பட்சம் - 1 மாதம் 2 - மாதங்கள் - 1 ருது 3 - ருது - 1 அயனம் 2 - அயனம் - 1 வருடம் 6 - மாதங்கள் - 1 அயனம் 12 - மாதங்கள் - 1 வருடம் புராண கால கணக்கீடு ********** பிரம்ம வருடம் தேவ்ய (அ) திவ்ய வருடம். """"""""""""""""""""""""""""""""'''''''""'""'''''''''""""" வருடம் வரை வேத காலம் போலவே வைத்துக்கொள்ளவும். 360 - வருடங்கள் - 1 தேவ வருடம் 12,000 - தேவ வருடங்கள் - 1 சதுர்யுகம் 71 - சதுர்யுகங்கள் - 1 மன்வந்திரம் 14 - மன்வந்திரம் - பிரம்மாவின் ஒரு பகல் 28 - மன்வந்திரம் - பிரம்மாவின் ஒரு நாள் 365 - பிரம்ம நாட்கள் - 1 பிரம்ம வருடம் 100 - பிரம்ம வருடம் - பிரம்மாவின் ஆயுள் மானவ வருடம் """""""""""""""""""""""""""" மனு என்பவர் ஏற்படுத்திய வருடம் மானவ வருடமாகும் இது மன்வந்திரம் என்று சொல்லப்படும் மன்வந்திரம் என்பது மனு இந்த உலகை ஆளும் காலம் என்று அர்த்தம் மனு தர்ம சாஸ்திரம் இயற்றியவர் தான் மனு என்று கூறப்படுகிறது இந்த மனுவின் வழி வந்தவர்கள் மன்வாதி என்று குறிப்பிடப்படுகிறது மொத்தம் 14 - மனுக்கள் அவர்களின் வருடம்தான் மானவ வருடம் பெளச்ய மனு சாஷுச மனு ருத்ரசாவர்ணி மனு அக்னி சாவர்னி மனு தாமஸ மனு சூர்ய ஸாவர்ணி மனு ஸ்வாரேசிஷ மனு ஸ்வாயம்புவ மனு இந்திரஸாவர்ணி மனு சைவத் மனு வைவஸ்தம் மனு பிரம்மஸாவர்ணி மனு உத்தம மனு மொத்தம் உள்ள மனுக்களில் தற்போது நடைபெறுவது ஏழாவது மனுவின் ஆட்சி பிரம்மாவின் ஆயுள் நிறைவடையும் போது பிரளயம் ஏற்பட்டு இவ்வுலகம் அழியும் என்று புராணங்களில் கூறப்படுகிறது. பித்ரு (அ) பைத்திர வருடம் """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" பித்ருக்கள் எனப்படுவது காலமாகிப்போன முன்னோர்களாகும் இறந்த பிறகு புண்ணியம் செய்த புண்ணிய ஆத்மாக்கள் பித்ரு லோகத்தில் வாசம் செய்கின்றனர் என்று கூறப்படுகிறது இங்கு வாசம் செய்யும் இவர்களின் வருடமே பைத்திர வருடமாகும் இவர்களுக்கு நம்முடைய சந்திரமாதமான கணக்குப்படி 30, நாளில் பூர்வ பட்சம் எனும் வளர்பிறை 15, நாளும் ஒரு பகலாகவும் கிருஷ்ணபட்சம் எனும் தேய்பிறை 15, நாளும் ஒரு இரவாகவும் அமையும் என்று கூறப்படுகிறது பாண்டவ வருடம் """""""""""""""""""""""""""""""""" மகாபாரதம் நடந்த காலத்தில் பாண்டவர்களின் வனவாசம் தொடங்கியதிலிருந்து பாண்டவ வருடம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை : * மேஷம் * ரிஷபம் * மிதுனம் * கடகம் * சிம்மம் * கன்னி * துலாம் * விருச்சிகம் * தனுசு * மகரம் * கும்பம் * மீனம் ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேஷம் -------------- 1. வைராக்கியம் (Assertiveness) 2. தேசநலன் (Citizenship) 3. நிறைவேற்றுதல் (Chivalry) 4. துணிச்சல் (Courage) 5. கீழ்படிதல் (Obedience) 6. வெளிப்படையாக (Openness) 7. ஒழுங்குமுறை (Order) 8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance) 9. ஆன்மிகம் (Spirituality) #மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும் ரிஷபம் ------------- 1. கருணை (Mercy) 2. இரக்கம் (Compassion) 3. காரணம் அறிதல் (Consideration) 4. அக்கறையுடன் (Mindfulness) 5. பெருந்தன்மை (Endurance) 6. பண்புடைமை (Piety) 7. அஹிம்சை (Non violence) 8. துணையாக (Subsidiarity) 9. சகிப்புத்தன்மை (Tolerance) #ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும் மிதுனம் --------------- 1. ஆர்வம் (Curiosity) 2. வளைந்து கொடுத்தல் (Flexibility) 3. நகைச்சுவை (Humor) 4. படைப்பிக்கும் கலை (Inventiveness) 5. வழிமுறை (Logic) 6. எழுத்து கற்க பிரியம் (Philomathy) 7. காரணம் (Reason) 8. தந்திரமாக (Tactfulness) 9. புரிந்து கொள்ளுதல் (Understanding) #மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும். கடகம் ------------ 1. பிறர் நலம் பேணுதல் ( Altruism ) 2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence) 3. அறம் (Charity) 4. உதவுகின்ற (Helpfulness) 5. தயாராக இருப்பது (Readiness) 6. ஞாபகம் வைத்தல் (Remembrance) 7. தொண்டு செய்தல் (Service) 8. ஞாபகசக்தி (Tenacity) 9. மன்னித்தல் (Forgiveness) #கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும். சிம்மம் ------------- 1. வாக்குறுதி (Commitment) 2. ஒத்துழைப்பு (Cooperativeness) 3. சுதந்திரம் (Freedom) 4. ஒருங்கிணைத்தல் (Integrity) 5. பொறுப்பு (Responsibility) 6. ஒற்றுமை (Unity) 7. தயாள குணம் (Generosity) 8. இனிமை (Kindness) 9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing) #சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும். கன்னி ------------- 1. சுத்தமாயிருத்தல் (Cleanliness) 2. அருள் (Charisma) 3. தனித்திருத்தல் (Detachment) 4. சுதந்திரமான நிலை (Independent) 5. தனிநபர் உரிமை (Individualism) 6. தூய்மை (Purity) 7. உண்மையாக (Sincerity) 8. ஸ்திரத்தன்மை (Stability) 9. நல்ஒழுக்கம் (Virtue ethics) #கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும். துலாம் ------------- 1. சமநிலை காத்தல் (Balance) 2. பாரபட்சமின்மை (Candor) 3. மனஉணர்வு (Conscientiousness) 4. உள்ளத்தின் சமநிலை (Equanimity) 5. நியாயம் (Fairness) 6. நடுநிலையாக (Impartiality) 7. நீதி (Justice) 8. நன்னெறி (Morality) 9. நேர்மை (Honesty) #துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும். விருச்சிகம் -------------------- 1. கவனமாக இருத்தல்(Attention) 2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness) 3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness) 4. சீரிய யோசனை (Consideration) 5. பகுத்தரிதல் (Discernment) 6. உள் உணர்வு (Intuition) 7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness) 8. கண்காணிப்பு (Vigilence) 9. அறிவுநுட்பம் (Wisdom) #விருச்சகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும். தனுசு ----------- 1. லட்சியம் (Ambition) 2. திடமான நோக்கம் (Determination) 3. உழைப்பை நேசிப்பது (Diligence) 4. நம்பிக்கையுடன் (Faithfulness) 5. விடாமுயற்சி (Persistence) 6. சாத்தியமாகின்ற (Potential) 7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness) 8. உறுதி (Confidence) 9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance) #தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும். மகரம் ------------ 1. கண்ணியம் (Diginity) 2. சாந்த குணம் (Gentleness) 3. அடக்கம் (Moderation) 4. அமைதி (Peacefulness) 5. சாதுவான (Meekness) 6. மீளும் தன்மை (Resilience) 7. மௌனம் (Silence) 8. பொறுமை (Patience) 9. செழுமை (Wealth) #மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும். கும்பம் ------------ 1. சுய அதிகாரம் (Autonomy) 2. திருப்தி (Contentment) 3. மரியாதை (Honor) 4. மதிப்புமிக்க (Respectfulness) 5. கட்டுப்படுத்துதல் (Restraint) 6. பொது கட்டுப்பாடு (Solidarity) 7. புலனடக்கம் (Chasity) 8. தற்சார்பு (Self Reliance) 9. சுயமரியாதை (Self-Respect) #கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும். மீனம் ---------- 1. உருவாக்கும் கலை (Creativity) 2. சார்ந்திருத்தல் (Dependability) 3. முன்னறிவு (Foresight) 4. நற்குணம் (Goodness) 5. சந்தோஷம் (Happiness) 6. ஞானம் (Knowledge) 7. நேர்மறை சிந்தனை (Optimism) 8. முன்யோசனை (Prudence) 9. விருந்தோம்பல் (Hospitality) #மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Top