Astrology Discussions

2ம் வீடு முதல் 8ம் வீடு வரை தொடர்ந்து இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது
1ம் வீடு முதல் 7ம் வீடு வரை தொடர்ந்து இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது
லக்கினத்தில் இருந்து தொடர்ந்து 7 ராசிகளில் இடைவிடாது ராகு கேதுவை தவிர மற்ற கிரஹங்கள் அமைவது
குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல பேருள்ள சீமான், பணவருவாய் உண்டு.
அங்காரகன் ஆட்சி அல்லது உச்சத்தில் நின்று லக்னத்திற்கோ அல்லதுசந்திரனுக்கோ கேந்திரதிரிகோணங்களில் இருப்பது. நல்ல பேரும் புகழும், தீர்க்காயுள், பணவருவாய், சத்ருக்களை வெல்லும் திறமை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும் பெரிய உத்தியோகங்கள்.
சனி பகவான் ஆட்சி உச்சங்களில் கேந்திரத்தில் நிற்பது நல்ல படிப்பு, சொத்து, வாகனங்கள், பெரிய உத்தியொகம், ஆயினும் பொல்லாத குணம் உள்ளவன்.
புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் லக்னத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. கம்பீரத்தோற்றம், சபைகளில் பேசும் திறமை, நல்ல பணவருவாய்.
சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திரத்தில் நிற்பது. நல்ல தோற்றமுள்ள தேகமுடையவன், பேரும் புகழும் உள்ளவன். தனவான், வாகனங்கள் உள்ளவன். காமம் அதிகம் உள்ள ஜாதகன்
ஒரு ஜாதகத்தில் குரு லக்கினத்திற்க்கு 9ம் அதிபதி இருக்கும் இடத்தில் இருந்து 9ல் அமர்ந்து, அதே குரு இருக்கும் இடத்தில் இருந்து 9ல் ஒரு நல்ல கிரகம் அமைந்து,சனிலக்கினத்திற்க்கு 10ல் அமர்ந்தால் மனித சமுதாயத்திற்க்கு மிகவும் சக்திவாய்ந்த தலைவனாக இருப்பார்கள். கெட்டவைகளை அழித்து நியாயத்தை நிலை நாட்டுவார்கள்.
ஒரு ஜாதகத்தில் குரு தனதுமூலதிரிகோணத்திலும், 2 ம் அதிபதி அந்த குருவுடன் இணைந்தும் அமைந்து, லக்கினாதிபதி உச்சம் பெற்று நின்றால் அந்த அமைப்பிற்க்கு கோ-யோகம் என்று பெயர். உயர்ந்த குடியில் பிறந்தவராவார். அவரிடம் எக்கச்சக்கமான செல்வங்கள் குவிந்திருக்கும், அவர் அனைவராலும் மதிக்கப்படுவார்
0 லோ அல்லது 4 லோ பெரும்பாலான கிரகங்கள் இருத்தால் பரவை யோகம் உண்டாகும் . இந்த யோகத்தில் பிரதவர்கள் பல நாடுகள் சென்று வருவார்.ஞான மார்க்கம் அறிந்தவர் .சந்நியாசி என்று பெயர் பெறுவார் .
லக்னத்திற்கு 7,8,9,10 ஆகிய இடங்களில் மட்டும் கிரகங்கள் தேறி நிற்க இச்சாதகனுக்கு திரியோகம் உண்டாகும் . இந்த யோகம் உள்ளவர்கள் அவ்வமானம் தரும் காரியங்களைச் செய்வார்கள்.சோம்பல் உள்ளவர்கள்.நேர்மையற்ற தொழிலைச் செய்வார்கள்.பொதுமக்களிடம் அவமரியாதை பெற்றவர்.குலத்திற்கு தகுத்த தொழிலை செய்யமாட்டார்கள்.
லகினதிற்கு 2 இல் குரு இருக்க,4 இல் சுக்கிரன் இருக்க, 7 இல் சந்திரன் இருக்க,லக்கினதிபதி சுபகிரகள் உடன் சேர்திருதால் காம்ப யோகம் உண்டாகும். மனைவி அல்லது கணவன் மூலம் பெருத்த லாபம் உண்டு.பணவசதி பெருகும்.பெயர் புகழ் செல்வாக்கு உயரும்.மேன்மையான வாழ்கை அமைவது உறுதி.
லகினதிற்கு 1 இல் சந்திரன் இருக்க ,சனி கேந்திரத்தில் இருக்க,குரு 12 இல் இருக்க யாசக யோகம் உண்டாகும். இந்த அமைப்பு உடையவர்கள் பிச்சை எடுத்து தான் சாப்பிடுவார்கள்.6, 8 ,12,இல் லக்னாதிபதி இருந்தால் நாடு முழுவதும் திரித்து பிச்சை எடுத்து சாப்பிடுவார்கள்.
10 இல் சந்திரன் இருதால் இந்த யோகத்திற்கு மலா யோகம் எனப்படும்.இந்த அமைப்பை உடைய ஜாதகர் பெரும் செல்வந்தராக அடைவர்.சுகமான வாழ்கை அமையும்.அதிகாரம் செய்வதில் மிக திறமைசாலியாக இருப்பர் .
லக்கனத்தில் உச்ச கிரககள் இருந்து அதை செவ்வாய் பார்க்க 3 இல் 9 அதிபதி இருதால் ஜடா யோகம் ஏற்படும். இந்த அமைப்பை உடைய ஜாதகர் இளம் வயதில் பெரும் செல்வந்தராக அடைவர்.செல்வாக்கு உயரும்
லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ 6 இல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருத்தல் அஷ்டலட்சுமி யோகம்உண்டாகும் சுகபோகமான செல்வாக்கான வாழ்கை அமையும்.
9ல் ராகு அமையப்பெற்றால் பொருள் நஷ்டம் பெண்களால் ஏற்படுகிறது
மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 5ல் பாபர் அமர சந்திரன் பாபர் நடுவிலோ அல்லது நீச்சம் பெற்றோ காணப்படுதல் . மாத்ரு சாபத்தால் புத்ர தோஷம் ஏற்படுகிறது
கடக லக்கினத்தில் பிறந்தவர்க்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன் , சூரியன் , புதன் அமைதல் வேண்டும் ஆன்மிக தலைவராகுவோ , மதத் தலைவரகுவோ இருப்பார்
Top