8- ல் சனி

🔥ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவத்தில் சனி இருந்தால்,

8ம் இடத்தில் சனி இருப்பின் அவருக்கு நீண்ட ஆயுள் இருக்கும் என்றாலும் பொருளாதர ரீதியான பிரச்னை, ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் பிரச்னையும், கண்டமும், கண்களில் பாதிப்பு,,

🔥நீண்ட ஆயுள் என்பதும்கூட இந்த காலத்தில் ஒருவித சாபம் என்றே கூறலாம் .

🔥8 ல் இருக்கும் சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் 10-ம் வீட்டை பார்ப்பார் .தொழில் செய்வதில் அல்லது தொழில் ஆரம்பிக்கும் பொழுது ஜாதகருக்கு தயக்கமும் சுணக்கம் ஏற்படும் பத்தாம் பாவகம் கர்ம ஸ்தானம், சனி எட்டாம் வீட்டிலிருந்து தசா நடத்தும் பொழுது,ஜாதகர் ஏதேனும் ஒரு கர்ம காரியங்களில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும் ..

🔥சனி எட்டில் வக்ரம் பெற்று இருக்கும்பொழுது, அல்லது பரிவர்த்தனை அடைந்திருந்தாலும் வேறு ஏதேனும் ஒரு சுபர் தொடர்பு பெற்று இருக்கும் பொழுதும் தசாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கூட ,அதன்மூலம் வருமானத்திற்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பார் .

🔥பழைய பொருள் காகிதம் குப்பைகள் கழிவுகள் இதன் மூலம் வருமானம், பழைய (Scraps)பொருட்களின் உதிரிபாகங்கள் அதன் மூலம் பெரிய அளவில் லாபம்

🔥பொதுவாக எட்டில் சனி இருந்து தசா நடக்கும் பொழுது, உறவினர்கள் நட்பு வட்டாரங்கள் போன்றவற்றின் மூலம் அசிங்கம் அவமானம் முதலானவற்றை உருவாக்கி அதன் மூலம் ஒரு தெளிவை கொடுப்பார், ,

🔥3,7,10 ஆகிய பார்வைகளில், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பம் அமைவதில் தாமதம் அல்லது குடும்பம் அமைந்தால் அதில் சிக்கல்களை உருவாக்கும் ..,
10 - ம் பார்வையாக ஐந்தாம் பாவகத்துடன் தொடர்பு கொள்வதால், புத்திரப்பேறு தாமதத்தை உருவாக்குவார் அல்லது புத்திரர்களால் மன சஞ்சலத்தை கொடுக்கும் .

🍁ஆயுள்காரகன் சனி ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவகத்தில் தசா நடத்தும் பொழுதும் எட்டில் சனி இருந்தாலும் வாழ்க்கை ஜாதகருக்கு போராட்டமாகவே இருக்கும் நீண்ட ஆயுளும் ஒரு போராட்டமே ,,

🍁இவர்கள் வாழ்வின் சம்பாதிக்கும் வருமானத்தின் ஒரு பகுதி எப்பொழுதும்,

சனியின் காரகத்துவ பொருள்களாக வாங்கி தானம் தருதல் இவர்களுடைய வாழ்வியல் பரிகாரமாகும் ..

இஸ்திரி பெட்டி, காலணிகள் ,நல்லெண்ணெய், தயிர் சாதம் ,ஊனமுற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு தேவையைப் பூர்த்தி செய்தல் போன்றவை .
 
Top