விரைய சனி / 12ல் சனி

❤❤ விரைய சனி / 12ல் சனி

⚜️⚜️ செயல்திறன் குறைந்து காணப்படுவர். ஒரு செயலைச் செய்ய சொன்னாள் அதை நான் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சோம்பேறித்தனமாக இருப்பார்

⚜️⚜️ எதிலும் தயக்கம். இதை நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்

⚜️⚜️ தன்னம்பிக்கை குறைவு. அதாவது எந்த விஷயமாக இருந்தாலும் தன்னை சார்ந்த நபர்கள் அந்த விஷயத்தை பார்த்துக்கொள்வார்கள் என்று எண்ணம். உதாரணமாக பெண்ணிற்கு 12ல் சனி என்ற கணவனுக்கு தான் ஏகப்பட்ட பிரச்சினைகள் அதிகம். த ன் மனைவியை பாதுகாப்பதே ஒரு வேலையாக இருக்கும்.

⚜️⚜️ முன்னேற்றத்திற்கு பணம் ஒரு தடையாக இருக்கும். தனது மூன்றாம் பார்வையாக இரண்டாம் இடத்தைப் பார்த்து தன ஸ்தானத்தை வலிமை இழக்கச் செய்வார். 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தைப் பார்த்து உத்தியோகத்தில் நஷ்டத்தை ஏற்படுத்துவார். பத்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்த்து தங்கையின் முன்னேற்றத்தையும் பாழ் படுத்துவார்.

⚜️⚜️ மறதி அதிகம். காரணம் யோசனையின்றி செயல்படுவதுதான். எதை செய்கிறோம் என்று தெளிவாக தெரியாது.

⚜️⚜️ தனக்கு தேவையற்ற கோபத்தால் குடும்பத்திற்கு அவமானங்களும் தேவையற்ற நஷ்டங்களும் இழப்புகளும் ஏற்படும்.

⚜️⚜️ ஊரார் மத்தியில் அவமானம் ஏற்படும் ஒரு சம்பவம் நடக்கும்

⚜️⚜️ மற்றவர்களால் இவர்களுக்கு அடிக்கடி தொல்லைகள் இடைஞ்சல்கள் ஏற்படும். காரணம் அழகாக இருப்பதும் மற்றும் அதிக பணம் சேர்த்து செலவு செய்யாமல் இருப்பதம்

⚜️⚜️ சோம்பேறிதனம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் உறங்கி விடுவது. இதனால் குடும்பத்தில் மற்றவர்களிடம் அனேகமாக அவர் பெயர்தான் வாங்குகிறார்கள்.

⚜️⚜️ இல்லற வாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. துணையிடம் அன்பும் அறனும் இருக்கும் அதேசமயம் சற்று பெரிய இடைவெளி இருக்கும்

⚜️⚜️ மெதுவான அன்னநடை போட்டு நடப்பீர்கள். நடை வசீகரத்துடன் இருக்கும்

⚜️⚜️ வெளியாட்களிடம் இருந்து அல்லது எதிரிகளிடமிருந்து தொல்லைகள் ஏற்படும். நாளும் அதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது

⚜️⚜️ சிலர் பெண்களுக்கு தொல்லை தருபவர்களாக இருப்பார்கள்

⚜️⚜️ இன்னும் சிலர் சொந்த ஊரை விட்டு தொழில் நிமித்தமாக வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடு என செல்வார்கள்.

⚜️⚜️ அரசாங்கத்தால் பகை ஏற்படும். உதாரணமாக ரேஷன் பொருட்களை கூட வாங்க போகமாட்டார்கள். அங்கு ரேஷன் கடை காரர் திட்டிக்கொண்டே இருப்பார்.

🍁🍁 ஓய்வு நேரம் அதிகமாக இருப்பதால் பல விசயங்கள் செயல்படுத்த ஏதுவாக இருக்கும்

🍁🍁 குழந்தை பெறுவதில் தாமதம் ஏற்படும்

🍁🍁 நட்பு வட்டாரம் மற்றும் சகோதர சகோதரிகளிடம் பாசம் மிகுந்த காணப்படுவீர்கள்.

🍁🍁 அனைவரிடமும் எளிமையாக வசப்படுவார்கள். காரணம் உங்கள் எதார்த்த குணம் தான்.

🍁🍁 தனது சொந்த ஊரையும் தனது சொந்தங்களையும் நினைத்துக்கொண்டே வருத்தப்பட்டு கொண்டே இருப்பீர்கள். காரணம் அந்த அளவிற்கு பாசம் மிகுந்தவர்கள்

🍁🍁 தாய்மாமன் பெரிய அளவில் கண்டுகொள்ளாததால் உங்களின் துணையே அரணாக அமைவார்

🍁🍁 தந்தைக்கு பெரிய பொருளாதார முன்னேற்றம் இருந்தாலும் மனதளவில் பிரச்சினைக்கு உள்ளவராக இருப்பார்

🍁🍁 சிலர் தனது துணைக்கு துரோகம் செய்வார்கள். அதாவது அன்னியர்களின் தீய சகவாசம் இருக்கும்

🍁🍁 திருமணம் முடிந்த பிறகு சிலரின் குடும்பத்தில் அசுப விரயங்கள் ஏற்படும். உதாரணமாக தற்கொலை விபத்து உட்பட.

🍁🍁 சிலருக்கு சொந்தத்தில் திருமணம் முடிவதால் சில நேரங்களில் அவமானமும் ஏற்படும் அதே சமயம் சொந்தங்களால் உண்மையான ஆதாயம் ஏற்படும்

🍁🍁 உங்கள் துணையிடம் தாங்கள் எதிர்பார்க்கும் உண்மையான ஆசைகள் எதுவும் நிறைவேறாது இருக்கும்

இதில் 12ஆம் இடம் சனியை பார்க்கும் கிரகங்கள் இணையும் கிரகங்கள் வர்கோத்தமம் வக்கிரம் என பலன்கள் மாறுபட வாய்ப்பு உள்ளது. இவை யாவும் ஆய்வு செய்ததில் பொது பலன்களே ஆகும். இந்த பலன்கள் அனைத்தும் உறுதிப்படுத்த தசா புத்தியை தீர்மானமாகும்.
 
Top