ராகு கேது பரிகாரங்கள்

🌠 கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.

🌠 ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.

🌠 காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.

🌠 புற்று இருக்கும் அனைத்து அம்மன், காளி கோவில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.

🌠 நவகிரகத்தில் உள்ள ராகு கேதுவுக்கும் விளக்கேற்றலாம்.

🌠 சிவன் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டும்.

🌠 பெருமாள் கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை புதன்கிழமை ராகுகாலத்திலும் வணங்குவது நல்லது.

🌠 சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும்.

🌠 தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.

🌠 ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடவும்.

🌠 ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடவும்.

🌠 பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம்.

🌠 பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்.

🌠 ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம்.

🌠 வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடவும். எலுமிச்சம் பழம் மாலையில் 16 அல்லது 32 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும்.

🌠 அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடவும்.

ராகு கேது பரிகார ஸ்தலங்கள் :

🌠 கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும்.

🌠 நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்களம் பரிகார ஸ்தலமாகும்.

🌠 சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

🌠 கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும்
 
Top