பண்ணிரு நவாம்ச லக்கினத்தின் பொதுப் பலன்கள்

பண்ணிரு நவாம்ச லக்கினத்தின்
பொதுப் பலன்கள் ;
பதிவு எண் ; 31 தேதி 17-2-2015
சிம்மம் நவாம்ச இலக்கின பலன்கள் ;
ஜாதகன் நீண்ட சுருண்ட முடி உடையவன் , அழகான உடல் , துஷ்ட அமைப்பு கொண்டவன் , போகத்தில் சமர்த்தன் , நண்பர்கள் தொடர்பு உண்டு .தைரியம் , அதிக சபலம் கொண்டவன் , பணப் பைத்தியம் , துஷ்டன் , எதிரிகளை வெல்வான் , அற்ப குழந்தை உண்டு
கடகம் நவாம்ச இலக்கின பலன்கள் ;
ஜாதகனின் உடம்பு தங்க நிறமாக மின்னும் , சம உயரம் உள்ளவன் , நன்கு வளர்ந்த சரீரம் மயீர் உள்ளவன் , அழகிய பார்வை , ஆடை அலங்கார பிரியன் , நல்ல அழகிய பார்வை உள்ளவன் , தரும , தயாள குணம் கொண்டவன் , நல்ல அழகிய தோற்றம் உடையவன்
மேஷம் -----விருட்சிகம் நவாம்ச இலக்கின பலன்கள் ;
ஜாதகன் சிகப்பு நிற மயிர்கள் உடையவன் , கண்கள் சிவந்து காணப்படும் , வெளுத்த உடம்பு கொண்டவன் , அழகில்லாத நகம் கொண்டவன் , காயம் , வடு தலையில் உள்ளவன் , சொட்டை தலை , துஷ்டன் , அதிக காமம் உள்ளவன் , குரூரன் , அற்ப தனம் , கோபம் எதிரிகளை வெல்வான் .;ஆனாலும் பணம் சேர்ப்பதில் கெட்டிக்காரன் ,
மிதுனம் ------கன்னி --- நவாம்ச இலக்கின பலன்கள் ;
ஜாதகன் கருத்த நிறம் , மிரண்ட கண்கள் , சம தேகம் , விசாலமான மார்பு , நீண்ட சுருண்ட தலை முடி உள்ளவன் .
அழகிய பல்வரிசை , அற்பாயுள் , வணிகத்தில் சமர்த்தன் தைரியம் ,
செல்வம், சுகம் , அழகிய ஆடை பிரியர்கள்
தனுசு --- மீனம் ---- நவாம்ச இலக்கின பலன்கள் ;
ஜாதகன் கருத்த நிறம் , தாமரை போன்ற முகம் உடையவன் , கரு நீல
நிறம் கொண்ட கண்கள் , உயர்ந்த தேகம் , அழகிய தலைமயீர் , அதிக சுத்தமான நல்ல ரேகை உடைய கைகள் , உயர்ந்த புக்தி , விருந்தினர்களை நன்கு உபசரிக்கும் தன்மை , நல்ல குணம் , பெண்களுக்கு பிரியமானவன் , பணக்காரன் , இனிமையான குரல் கொண்டவன் /
ரிஷபம் ------துலாம் -------- நவாம்ச இலக்கின பலன்கள் ;
ஜாதகனுக்கு சிவந்த அழகிய கடைக் கண் பார்வை , நல்ல உடல் , கவர்ச்சியான முகம் , அழகிய தலைமுடி உள்ளவன் . அழகிய கழுத்து ,சூரர் , சீமான் , கவி , அதிக தனவான் , தானமுடையவன் , அடுத்தவர்குணமறிந்து நடப்பான் . பூக்கள் , அழகிய ஆடை அணிகலன்களை உடையவன் ..
மகரம் ------கும்பம் ----- நவாம்ச இலக்கின பலன்கள் ;
ஜாதகன் விசாலமான பொன்னிறமான தலைமுடி உள்ளவன் ,
மெலிந்த தேகம் , கருத்தமேனி , அழகிய கண்கள் , சுதந்தரமாக இருக்க விருப்பம் உள்ளவன் , பாப சுபாவம் உள்ளவன் , அளவுள்ள தனப் ப்ராப்தி உடையவன் .தர்மம் இல்லாதவன். .
புத்திர பலன் நவாம்ச இலக்கினப்படி எவ்வாறு கண்டு பிடிப்பது ??????????
நவாம்ச லக்கினபடி 5 ஆம் வீட்டுக்கு அதிபனும் , புதனும் சுபர்களோடு சேர அல்லது பார்க்க ஜாதகனுக்கு அதிக புத்திரன் உண்டு , பாவரால் சேர அல்லது பார்க்க புத்திரர் குறைப்பாடு உண்டுபண்ணும்
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
-------------------------------------------------------------------------------------------------------------------
.கட்டணம் உண்டு
-------------------------------------------------------------------------------------------------------------------------
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
 
Top