நல்ல நாள் என்றால் என்ன

பதிவு எண் 35 தேதி; 21 -2 –2015
நல்ல நாள் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் , என்பது மட்டுமல்ல ,
அந்த நாளில் இணைந்து மருவி இருக்கும் இலை மறை வு கனி போல இருக்கும் .அந்த நாளில் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் கூட நன்மைகள் தரும் .
இத்தகைய அமைப்பையை ; ‘ நல்லநேரம் ,’ என்றும் ‘நல்லவேளை ;’ என்றும் , ‘ நல்லசமயம் ‘ என்றும் சொல்வதுண்டு .
ஆகவே அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லவைகளைச் செய்யும் முன் அதற்கான நல்ல நாளை தெரிந்து அதன்படி வேலைகளை
ஆரம்பிக்க வேண்டும் .சில பழமொழிகளையும் பார்ப்போம் .
1 ‘.பருவத்தே பயீர் செய் ‘
2. ‘ ஆடிப் பட்டம் தேடி விதை ‘
3 . ‘ இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே ‘
4 . ‘ பால் ஏடு ஆகிணும் காலம் அறிந்து உண் ‘
5. ‘ காலம் அறிந்து இடமரிந்து செய்வினை மூலம் அறிந்து செய் ‘
6. ‘ காற்று உள்ள போதே தூற்றிக்கொள் ‘
7’. காலத்தார் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது’
8’ .மாலை முழுவதும் நல்ல விளையாட்டு ‘
9’’ காலை மாலை நூலை ஓது ‘
1௦.’ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தார் செயின்’
11.கார்த்திகைக்கு மேற்பட்டு கைப்பயீர் ஏறிய வேண்டும் .
12. சனி பிடித்ததோ சளி பிடித்ததோ ?????
13. சனிப் பிணம் தனிப் போகாது
மேலே குறிப்பிட்ட பாடல் ---- பழமொழி பலவித உட்பொருளில் சொல்லப்பட்ட போதிலும் அவைகள் யாவும் நல்ல வேளையையும்
நல்ல காலத்தையும் ,நல்ல நேரத்தையும் , குறிப்பிட்டு உள்ள காலத்தில்
செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .
=================================================================================
வீடு கட்டும் விதம் ;
மதியுதிக்க கால நாட்டி மாலு உதிக்க கட்டி
விடி வெள்ளி தாணு உதிக்க வேய்ந்து பதிதனிலே
மந்த்ரி தான் உதிக்க மாடந்க் குடி புகுந்தால்
இந்திரன் போல வாழ்ந்து இருப்பார்
பாடல் விளக்கம் ;
சந்திரன் உதயமாகும் போது கால நட்டு புதன் உதயமாகும் போது வீடு
கட்டி சுக்கிரன் உதயமாகும் போது ஓலை மேய்ந்து குரு உதயமாகும் போது குடி போனால் இந்திரன் போல வாழ்வான் எண்பதாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
விருந்து உண்பதற்கு உரிய நாள்
வெள்ளி சனி திங்கள் விருந்து உன் புதன் ஆகும்
கள்ள வியாழன் கசபிக்கும் –தெள்ளு கதிர்
தீராப் பகை காட்டுங் செவ்வாய் தனுக்குமே
வாராப் பகையும் வருமே .
பாடல் விளக்கம் ;
வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை , திங்கள்கிழமை , புதனகிழமை , விருந்து
சாப்பிட நலம் . வியாழன் உறவு கசப்பு ஆகும் . ஞாயிறு தீராத பகை வந்து விடும் .செவ்வாய்க்கிழமை வாராத பகை கூட வந்து விடுமாம் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குழந்தைக்கு முடி எடுக்க கூடாத காலம்
ஆடி புரட்டாசி ஐப்பசி மார்கழி ]தேடிய ஞாயிறு செவ்வாய் சனி தனில்
கூடிய ரோமம் குறைந்திட வல்லிரேல்
மாடு மக்கள் மைந்தர் மாள்வாறாய்
]பாடல் விளக்கம்
ஆடி , ஐப்பசி , மார்கழி , மாதங்களில் ஞாயிறு , செவ்வாய் , சனி கிழமைகளில் குழந்தைக்கு முடி எடுத்தால் மாடும் மக்களும் பிள்ளையும் இறந்து விடுவார் என்பதாம் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.கட்டணம் உண்டு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
 
Last edited by a moderator:
Top