நட்சதிரங்களின் கணங்கள்

திருமணப்பொருத்ததிற்கு மட்டுமல்ல கூட்டு_தொழில் செய்வதற்கும், தெரியாத நாட்டில் புதிய நண்பர்களின் நட்பை வளர்த்து கொள்வதற்கும் மிக பயன்படக்கூடியவைதான் இந்த கணங்கள்.

கணங்கள் மூன்று வகை அவை தேவகணம்மானுஷகணம்_ராஷசகணம் போன்றவை ஆகும்.

தேவ_கணம்
இவர்கள் அமைதியாகவும், பொருமையாகவும் விட்டுக்கொடுக்கும் தன்மையும் கொண்டவர்கள்.

மனுச_கணம்
இவர்கள் ஒரளவு விட்டுக்கொடுத்து, தேவையான நேரத்தில் தனது கோபதாபங்களை காட்டுவார்கள்.

ராஸச_கணம்
இவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவராயும்,சிந்திப்பதில் தாமதம் உடையவராகவும் இருப்பார்கள்.

தேவகண_நட்சத்திரங்கள்
அஸ்வினி,மிருகசீரிடம்,புனர்பூசம்,பூசம்,ஹஸ்தம்,சுவாதி,அனுசம்,திருவோணம்,ரேவதி போன்றவை.

மனுசகணம்நட்சத்திரங்கள்
பரணி,ரோகிணி,திருவாதிரை,பூரம்,உத்ரம்,பூராடம்,உத்ராடம்,பூரட்டாதி,உத்திரட்டாதி போன்றவை.

ராஸசகணநட்சதிரங்கள்
கார்திகை,ஆயில்யம்,மகம்,சித்திரை,விசாகம்,கேட்டை,மூலம்,அவிட்டம்,சதயம் போன்றவை.

குறிப்பு : பெண்,ஆண் ஒரே கணமானால் சிறப்பு.(இருவரும் ராஸச கணமாக இருக்க கூடாது)
பெண் மனுசகணமும்,ஆண் தேவ கணமும் நல்லதே.
(இவை மாறி இருந்தாலும் பிரச்சனை இல்லை).என்கிறது பொருத்த சாஸ்திரம்.

இவற்றை நட்புகளை தேர்தெடு பதற்கும், கூட்டு தொழில் செய்வதற்கும் கூட பயன்படுத்தலாம்.
 
Top