திக்கு பலம்

கிரகங்களுக்கு 6 விதமான பலன்கள் உள்ளன. அவை
1 கால பலம்
2 ஜேஷ்டர பலம்
3 . உச்ச பலம்
4 திக்கு பலம்
5 அயன பலம்
6 ஸ்தான பலம் .

4 திக்கு பலம் பற்றி இங்கு காண்போம்
பொதுவாக வடக்கில் இருக்கும் கிரகங்களுக்கு பலம் அதிகம் , கிரக யுத்தத்தில் வெற்றி பெற்றதாக கருதப்படும் .ஆனால் சுக்கிரனுக்குமட்டும் தெற்குத் திக்கில் வெற்றி பெரும் ;

திக்கு பலம் கீழ் கண்டவாறு அமையும்
1. லக்கினத்தில் ------------------ குரு , புதன்
4 – ஆம் ராசியில் -----------சந்திரன் ---- சுக்கிரன்
7- ஆம் ராசியில் ------------சனி , ராகு ,
10---ஆம் ராசியில் ----------சூரியன் ---- செவ்வாய்
திக்கு பலத்தோடு கூடிய கிரகம் , தனது திக்கை சேர்ப்பித்து,

அங்கே வஸ்திரம் , வாகனம் , பூஷணம் , சௌக்கியம் , இவைகளைத் தரும் .

நிஷ் பலம் என்றால் என்ன?
லக்கினத்தில் ----------------- சனி , ராகு ;
4 – ஆம் ராசியில் --------சூரியன் , செவ்வாய் ,
7—ஆம் ராசியில்-----------குரு -- புதன்
10—ஆம் ராசியில் ------சந்திரன் , சுக்கிரன்
இவைகளைத் தான் பலமில்லா கிரகங்கள் என்று சொல்கிறோம்;

சூரியன் திக்கு பலம் பெறின் பலன்கள்
வணிகத்தில் நல்ல பண வரவு , கௌரவித்தல் , பணக்காரன்

சந்திரன் திக்கு பலம் பெறின் பலன்கள்
ராஜ சேவையால் விருத்தி அடைவான் ;

புதன் திக்கு பலம் பெறின் பலன்கள்
உழவுத தொழிலால் பணம் வரவு , புத்தி சாதுர்யம் மூலம் பேரும் , புகழும் உண்டாகும் .

குரு திக்கு பலம் பெறின் பலன்கள்
ராஜ காரியத்தில் பண வரவும் , வீரியத்தில் பிரபல யோகம் உண்டு

சுக்கிரன் திக்கு பலம் பெறின் பலன்கள்
தானம் கொடுப்பதால் பெரும் , புகழும் , கீர்த்தியும் உண்டுபண்ணும்

சனி - திக்கு பலம் பெறின் பலன்கள்
தேசம் மூலம் வருமானம் , தனப் ப்ராப்தி , சூரன் , உண்டுபண்ணும்
 
Top