தர்மகர்மாதிபதி யோகம்

தர்மகர்மாதிபதி யோகம்:-
ஒன்பது பத்தாம் அதிபதிகள்
லக்கனத்திற்கோ, சந்திரனுக்கோ, ஒன்பதாம் வீட்டிற்கோ ,பத்தாம் வீட்டிற்கோ
ஒன்பதாம் பத்தாம் அதிபதிகள்
தொடர்பு,சம்மந்தம் தர்மகர்மாதிபதி யோகம் கிட்டும் .
மேற்கூறிய வர்களுக்கு ஒன்பதாம் பத்தாம் அதிபதிகள்
சேர்ந்து இருந்தாலோ, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலோ ,
இருவரும் பரிவர்த்தனை பெற்றாலும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருந்தாலும்,
தங்கள் வீடுகளில் ஆட்சியாக இருந்தாலும்
தர்ம கர்மாபதி யோகம் கிட்டும்.
குருவும் சனியும் தர்மகர்மாதிபதிகளாகி
இணைந்தாலும் சில லக்ன ராசிகளுக்கு இவ்வித யோகம் கிட்டும்.
சேர்ந்து இருப்பதைக் காட்டிலும் தனித் தனியாக 9,10ம் வீடுகளில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு.
தர்மகர்மாதிபதி யோகம் என்றால் செல்வம்
செல்வாக்கு
செம்பொன்
செந்நெல் விளையும் பூமி பெருமைப்படுத்தும் புதல்வர்கள்
உயர்பதவிகள்
பட்டங்கள்
ஆள் அடிமை
ஆரோக்கியம்
தீர்க்காயுள் போன்றவைகள் கிட்டும் இதில் அளவீடுகள் சில பல கிரக நிலைகளைப் பொறுத்து மாறுபடும்.
 
Top