செவ்வாய தோஷம் தொகுதி - 2

செவ்வாய தோஷம் தொகுதி - 2
++++++++++++++++++++++++++++++++++++
எப்போது தோஷம் இல்லை! ! !
+++++++++++++++++++++++++++++++++++++
1 . செவ்வாய் மேஷத்தில் ஆட்சி பெற்றால் தோஷமில்லை.
-
2. செவ்வாய் விருசிகத்தில் ஆட்சி பெற்றால் தோஷமில்லை .
-
3. செவ்வாய் கடகத்தில் நீசம் பெற்றால் தோஷமில்லை .
-
4 .செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றால் தோஷமில்லை
-.
5.செவ்வாய் சூரியன் வீடான சிம்மத்தில் இருந்தால் தோஷம் குன்றி
தோஷமே இல்லை என்ற நிலை கொள்ளலாம் .
-
6 .கடகம் , சிம்மம் ,இலக்கினகாரர்களுக்கு செவ்வாய் தோஷம்
இருந்தாலும் அதை தோஷம் இல்லை என்று கருத வேண்டும் .
-
7 .தனுசு , மீனம் ,இலக்கினம் ,கொண்ட ஜாதகர்களுக்கு அட்டம
ஸ்தானமாகிய 8 இல் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை .
-
8 .கன்னி ,மகரம் ,லக்கினம் ஆகி செவ்வாய் 8 இல் இருந்தால் தோஷமில்லை.
-
9 .மிதுனம் , கன்னி லக்கினம் ஆகி செவ்வாய் 12 இல் இருந்தால்
தோஷம் இல்லை .
-
10.ரிஷபம் , துலாம்,லக்கினம் ஆகி செவ்வாய் 12 இல் இருந்தால்
தோஷம் இல்லை.
-
11.செவ்வாயை ,குரு ,சனி ,பார்வை பார்த்தாலும் , சேர்ந்தாலும் ,
தோஷம் இல்லை.
-
12. செவ்வாயை ,ராகு ,கேது ,பார்த்தாலும் ,சேர்ந்து இருந்தாலும்
தோஷம் இல்லை
-
13. தேவ கேரளம் நூல் படி , செவ்வாய் இருக்கும் 2 ஆம் இடம் மிதுனம் ,,அல்லது கன்னி ஆனால் தோஷம் இல்லை.
-
14. செவ்வாய் இருக்கும் 4 ஆம் இடம் மேஷம், விருட்சிகம் ஆனால்
தோஷம் இல்லை.
-
15. செவ்வாய் இருக்கும் 7 ஆம் இடம் கடகம், மகரம் ,ஆனால் தோஷம்
இல்லை
-
16. செவ்வாய் இருக்கும் 8 ஆம் இடம் தனுசு , மீனம், ஆனால் தோஷம் இல்லை .
-
17 .செவ்வாய் இருக்கும் 12 ஆம் இடம் ரிஷபம் , துலாம் ,ஆனால் தோஷம் இல்லை
-.
18 .கும்பத்தில் ,சிம்மத்தில் ,செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
-
19.செவ்வாய் சூரியனுடன் சேர்ந்தாலும் , பார்த்தாலும் தோஷம் இல்லை
-
20.செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தாலும் தோஷம் இல்லை
-
21. செவ்வாய் புதனுடன் சேர்ந்தாலும் ,பார்த்தாலும் தோஷம் இல்லை.
-
22 .செவ்வாய் குருவுடன் சேர்ந்தாலும் , பார்த்தாலும், தோஷம் இல்லை.
-
23. செவ்வாய் இருக்கும் இடம் 8 ,12 ,ஆம் இடம் மேஷம் ,சிம்மம் ,
விருச்சிகம் ,மகரம் ஆனால் தோஷம் இல்லை .
-
24 . செவ்வாய் நின்ற வீடடு அதிபதி லக்கின, கேந்திரம் , அல்லது திரிகோண ஸ்தானம் 1,4,7,10,1,5,9, ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷம்
இல்லை
-
25 .செவ்வாய் சர ராசியான மேஷம் ,கடகம் ,துலாம் ,மகரம் ஆகிய ராசிகளில் இருந்து இலக்கினதிற்கு 2,4,7,8,12, ஆக இருந்தாலும் தோஷம் இல்லை, ஆனால் ஸ்திர உபய , ராசிகளுக்கு செவ்வாய்
தோஷம் உண்டு .
-
26.பெண் ஜாதகங்களில் லக்னம்,அல்லது சந்திரா லக்னம் ஆகிய இரண்டில் எது பலமாக இருக்கோ,அந்த ராசியை கொண்டு செவ்வாய்
தோஷ பலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று ஹோரா சாஸ்திரத்தில்
சொல்லபட்டுள்ளது .
-
27 மேலும் பெண் ஜாதகத்தில் ,லக்கினம் ,சந்திரலக்கினம் ,சுக்கிரன் நின்ற ராசி ,ஆகிய மூன்று இடங்களிலும் செவ்வாய் தோஷம் இருந்தாலும் செவ்வாய் திசை நடைமுறைக்கு வருமானால் கணவனுக்கு ,தோஷம்,கண்டம் , மாரகம் ,நடைபெற கூடும் என்றும்
இதில் ஜென்ம லக்கினம் மட்டும் முக்கியமாக கணக்கீடும் செய்ய வேண்டும் .
-
28.யவனேஸவரால் எழுதபட்டுருக்கும் ஸ்திரி ஜாதகாதயத்தில் செவ்வாய் நட்பு வீட்டிலோ , குரு,வளர்பிறை சந்திரன் ,புதன் ,சேர்ந்தாலும் , பார்த்தாலும் ,நல்ல பலனாகவே நடக்கும் என்பது
சாஸ்திர விதி ஆகும்
-
29.மூலகிரந்த வாக்கியப்படி செவ்வாய் லக்கினாதிபதி ஆகஇருக்குமானால் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் சுபம் மட்டும்தான் செய்வார் என்பதாம். எனவே இதையும் மனத்தில் கொண்டு பொருத்தம் பார்க்க வேண்டும் .
-
30. கர்க மகரிஷி மேல் குறிப்பிட்ட ஸ்தனங்களில் செவ்வாய் இருக்க
சனி ,ராகு,கேது சேர்ந்தாலும் ,பார்த்தாலும் ,செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்கீறார் .
-
31 .முஹூர்த்த சங்கிரக தர்ப்பணம் எனும் நூலில் இலக்கினதிக்கு சனி பகவான் 1,4,7,8,12, ஆகிய இடங்களில் இருந்தால் .அந்த ஜாதகற்கு
செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.
-
32 .சரள யோகம் செவ்வாய் 12 ஆம் வீட்டின் அதிபதியாகி எட்டாம் ராசிகளில் இருந்தால் உதாரணமாக தனுசு லக்னம் ,கடகத்தில் செவ்வாய், ரிஷபம் லக்னம் தனுசு ராசிகளில் செவ்வாய் இருந்தாலும்
செவ்வாய் தோஷம் இல்லை.
-
33. 7 ஆம் இடத்தின் அதிபதியுடன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால்
உதாரனமாக கன்னியா லக்கினம் 7 இல் மீனத்தில் செவ்வாய் 3 இல் குரு விருசிகத்தில் இருந்தால் தோசம் இல்லை .
34.செவ்வாய் கேது பகவான் நட்ச்சத்திரமான அஸ்வினி , மகம் ,மூலம் ,நட்ச்சத்திரசாரம் பெற்றால் தோசம் இல்லை.
-
35.ஷட்பலம் உள்ள குரு அல்லது சுக்கிரன் , லக்னம் ,அல்லது 7 இல்
நிற்க ,செவ்வாய் தோஷம் இல்லை .
-
36 .செவ்வாய் ,நீசம், வக்கிரம் அஸ்தாங்கம் ,ஆனால் தோஷம் இல்லை
-
37. செவ்வாய் அனுஷம் ,திருவோணம் ,உத்தராடம் ஆகிய நட்ச்சத்திர
சாரம் பெற்றால் சாத்வீக தோஷம் இல்லை.
-
38 .செவ்வாய் அவிட்டம் ,மூலம், கேட்டை, விசாகம் ,மகம் ,ஆயில்யம் ,கார்த்திகை ,பரணி ,பூராடம் ,பூரம் , பூரட்டாதி ,ஆகிய நட்ச்சத்திர சாரத்தில் நின்றாள் தோஷம் உண்டு பண்ணும் ,
-.
39. செவ்வாய் தோஷம் என்பது பாதிப்பு மட்டும் தான் தரும் மரணம்
தராது என்கிறது சுக்கிர நாடி .
-
40. சனி , செவ்வாய் , பரஸ்பர பார்வை கூடாது என்பது ஒரு கொள்கை.
-
41.செவ்வாய் ,குரு நவாம்சத்தில் சேர்ந்தாலும் தோஷம் இல்லை..
-
42 .செவ்வாய் அஸ்தமனம் , ராகு உடன் 5 பாகைக்குள் இணைந்து
இருத்தல் , நீச சுக்கிரனுடன் சேர்க்கை ஆனால் செவ்வாய் தோஷம்
உண்டு.
-
43 . செவ்வாய் கிரக யுத்தம் ஆனாலும் அதில் தோற்றாலும், கிரக யுத்தத்தில் உள்ள மற்ற கிரகங்களுடன் சேர்ந்தாலும் செவ்வாய்
தோஷ விலக்குகள் கிடையாது . .
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
“,ஜோதிட சித்தர் “ மீனம் P. பச்சமுத்து
நிறுவனர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம்
244, ஜலகண்டாபுரம் ரோடு _ இடைப்பாடி 637101 சேலம் DT தமிழ்நாடு.
செல் - 093628 15547
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 
Top