சூரியன் சந்திரன் கிரக சேர்க்கை பலன்களும் பரிகாரமும்

கிரக சேர்க்கை என்பது இரண்டு கிரகங்கள் ஒரே கட்டத்தில் இருப்பதாக மட்டும் கணக்கிடக்கூடாது.

1,5,9 என்னும் திரிகோண ஸ்தானங்களையும் சேர்த்தே கணக்கிட வேண்டும்.

இந்த கணக்கீடுகள் எந்த லக்னம் அல்லது எந்த ராசி என்பது பார்க்கப்பட வேண்டியதில்லை.

கிரக சேர்க்கை மட்டுமே கவனிக்கவேண்டும்.

சூரியன் சந்திரன்
ஒன்றாக இருந்தாலும் அல்லது சூரியனுக்கு 5ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது சூரியனுக்கு 9ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் இது சூரியன் சந்திரன் ஒன்றாக இருப்பதாகத்தான் கருதப்படவேண்டும்.

உங்களது ஜனன ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணைந்திருந்தாலும்
அல்லது சூரியனுக்கு
5ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது சூரியனுக்கு 9ம் இடத்தில் சந்திரன் இருந்தாலும்
உயர்பதவியில் இருப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கு அர்த்தமற்ற
பயம் உண்டாகும்.

சின்னச்சின்ன பொய்கள் பேசுபவராக இருப்பார்கள்.

மூளை மற்றும் இதய நோய் குறித்த பயம் உடையவராக இருப்பார்கள்.

அவசர முடிவுகளை எடுத்துவிட்டு ’என்ன நடக்குதுன்னு தெரியலயே’ என்கிற மன நிலைக்கு ஆளாவார்கள்.

ஜாதகருக்கு ஸ்திரமான புத்தி இருக்காது.

சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.

அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும்.

கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும்.

சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடுபலன் செய்ய மாட்டார் என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும்.

அதேபோல் சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் கெடுபலன்கள் ஏற்படாது.

மற்றுமொரு முக்கியமான விதியையும் குறிப்பிட வேண்டும்.

அதாவது கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோணாதிபதியும் யாரோடு சேர்ந்திருந்தாலும்,
தான் நல்லது செய்வதுடன் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகத்தையும் நல்லது செய்யவைக்கும்.

சூரியன் சந்திரன் நெருங்கிய பாகையில் ஒன்றாக இருப்பது அமாவாசை யோகம் நிகழும்.

இது வளர்பிறை சந்திரன் சேர்க்கை நல்ல பலனை தரும்.

ஜாதகர் உடல் மற்றும் மனவலிமையும் கொண்டவராகவும்,
பல எந்திர கருவிகள் உருவாக்குபவனாகவும், மருத்துவம் அறிந்தவனாகவும், புத்திக்கூர்மை,
சிறந்த நிர்வாகியாகவும் இருப்பார்கள்.

இந்த இரு ஒளிகிரகங்கள் லக்கினத்திற்கு திரிகோண, கேந்திர மற்றும் 2,9,10 ஆகிய இடங்களில் ஒன்று சேர்ந்து இருந்தால் புகழ், செல்வம், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.

அமாவாசை யோகம் ஒருவிதத்தில் நல்லது என்றாலும் சில பாவங்களில் அமரும்பொழுது மாறுபடும்.

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு

பகலவனும் கலை மதியும் கோணமேற

சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்

செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு

ஆறப்பா அமடு பயமில்லை யில்லை

அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்

கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்

கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே - புலிப்பாணி

சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் எல்லாவித செல்வங்களும்,
வீடு, ஆயுள் விருத்தி , கொண்டவராகவும் மற்றும் ஜாதகர் இரவில் சப்தங்களைக் கேட்பானகவும் இருப்பார்.

இத்தகைய அமைப்பில் உள்ள நபர் அதிகபட்சம் 78 வயது வரை உயிர் வாழ்வார் என சித்தர் கூற்று.

சூரியன் சந்திரன் இரண்டு ஒளிகிகங்களில் சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்ய மனக்குழப்பம் நீங்கும்.

மனக்குழப்பத்தால்
பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும்.

இப்படிபட்ட ஜாதக அமைப்பு உடையவர்கள்
ஹனுமனை தொடர்ந்து வழிபட்டால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உணர்வார்கள்.
 
Top