சுக்கிர திசை யாருக்கு சுகபோகத்தை அள்ளிக்கொடுத்து, சுகமாக வாழ வைக்கும்?

பொதுவாக, ஜோதிட பரிச்சியம் இல்லாத ,நம் மக்கள் மனதில், சுக்கிரதிசை வந்தாலே சூப்பராக இருக்கும் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர்.

சுக்கிரன் சிலநேரங்களில், சுளுக்கெடுக்கவும் செய்யும். இது தான் உண்மை.

கன்னியா லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ,மகர, லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் மட்டுமே சுக்கிரன் முழு யோகாதிபதியாக செயல்படும்.

30,35 வயதில் இவர்களுக்கு சுக்கிர தசை வந்தால் ,நிச்சயமாக இவர்கள் புண்ணியம் பல செய்து, கொடுத்து வைத்தவர்களே.

இந்த இரு லக்னங்களுக்கும் சுக்கிரன் ஆதிபத்திய ரீதியாக ,முழு யோகத்தைத் தர கடமைப்பட்டவர் என்ற அமைப்பில் ,20 வருடங்களும் யோக பலனை ,அள்ளி அள்ளி வாரி வழங்கும்.

அதுபோல் இருக்கும்
தசைகளிலேயே பெரிய தசை சுக்கிர திசைதான் என்பதால், 20 வருடமும் ஏகபோக வாழ்க்கைதான்.

சுக்கிரனின் காரகத்துவமே சொகுசு வாழ்க்கை என்பதால், சுக்கிர தசை நல்ல ஆதிபத்தியம் பெற்று 30 வயதை ஒட்டி சுக்ரதசை வருபவர்கள் நிச்சயமாக யோகவான்களே.

கும்ப லக்னத்திற்கு ,சுக்கிரன், யோகாதிபதியாக வந்தாலும் பாதகாதிபதி என்ற அமைப்பை பெறுவதால், எல்லாம் கிடைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் பிடுங்கிக் கொள்ளும் அல்லது ஏதாவது ஒருவிதத்தில் குறை இருக்கும்.

மிதுன லக்கினத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி என்ற அமைப்பை பெற்றாலும், விரையாதிபதி என்ற மற்றொரு ஆதிபத்திய பலனையும் செய்வார்.

கொடுத்துக் கெடுக்கும் அல்லது கெடுத்துக் கொடுக்கும் என்ற அமைப்பு.

கடக லக்னத்திற்கு சுக்கிரன்
4 ,11-க்குடைய என்ற சுப ஆதிபதிபத்ய அமைப்பை பெற்றாலும், லக்னாதிபதி சந்திரனுக்கு சுக்கிரன் பகைவர் என்பதாலும் ,கடக லக்னத்திற்கு பாதகாதிபதியாவாதாலும் சுக்கிர திசை சூப்பராக கொடுத்து,கெடுத்து சுளுக்கெடுக்கும்.

மேஷ ,விருச்சிக
லக்கினங்களுக்கு 45 லிருந்து 50 மதிப்பெண் பெற்ற மாணவனை போலவும், சிம்ம லக்கினத்தை பொருத்தவரை ஜஸ்ட் பாஸ் என்ற அமைப்பிலும் இருக்கும்.

தனுசு லக்னத்திற்கும் ,மீன லக்னத்திற்கும் சுக்கிர தசை வந்தால் உரி, உரி என உரித்து உப்புகண்டம் போட்டு விடும்.

குறிப்பாக மீன லக்னத்திற்கு சுக்கிர தசை எந்த நிலையிலும் வரவே கூடாது.

மீன லக்னத்திற்கு சுக்கிர தசைக்கு அடுத்து வரக்கூடிய சூரிய திசையும் 6க்குடைய தசை என்பதால் ,மீன லக்கனத்தில் ,சனியின் நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் ஒருவிதத்தில் பாவப்பட்டவர்களே.
பிறந்ததிலிருந்து அவயோக திசைகளாகவே செல்லும்.

சுக்கிரன், ஜாதகத்தில் பாவ கிரக சேர்க்கை அமைப்புகளை பெற்று , பருவ வயதில் சுக்கிர திசை வந்தால்,
பெண்களின் சகவாசத்தோடு, சல்லாப அமைப்பையும் சுக்கிரதிசை கொடுத்து,கெடுத்துவிடும்.

காரணம் .காதல் காமத்தின் காரணகர்த்தாவே சுக்ரன்தான்.
 
Top