சிசேரியன் மூலம் குழந்தை பெரும் போது கவனிக்க வேண்டிய ஜோதிட விதி முறைகள்

1 .ஊழிற் பெருவலி யாவுள மற்தொன்று
சூழினும் தான் முந்துறும்

அதிகாரம் 38 ஊழ் குறள் 380 திருவள்ளுவர்

ஊழை விட மிக்க வலிமையானது வேறதுவும் இல்லை அதிலிருந்து தப்ப வேறு வழியைத் தேடினாலும் அங்கும் ஊள் தான் முன் நிற்கிறது.

பாலா நி கிரேக சாரேன சூஸ்யந்தி மாநீஷ்ண
கோ வக்தா தார தம யஷய தமாகம் வேதசம் விநா ;

உத்தர காலம்ருதத்தில் காளி தாசன் சொன்ன வாக்கு ஆகும் .

ஜோதிடர்கள் கிரகங்களின் சாரங்கள் கொண்டும் , கிரகங்களின் அசைவை கொண்டும் ,பல்வேறு கணித முறைப்படியும் ,அனுபவம் ,சுருதி ,யுக்தி ,கால ,தேச , வர்த்தமானம் , மதம் ,இனம் ,பேதம் ,அடிப்படையில் ,இறை அருளழலும், ஜோதிட பலன்களைக் முன் கூட்டியே, சொல்லுகீரர்கள் , ஆனால் நம்மை படைத்த பிரம்மாவைத் தவிர யாரும் அறுதியிட்டுக் ,இருதி இட்டு கூற முடியாது என்று பொருள் ஆகும்

2 பிறக்கும் குழந்தை ஆனா !அல்லது பெண்ணா !
இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலன்
தட்டான் அறிந்தும் ஒருவருக்கும் உரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குலன்
கெட்டான் இம் மாயையென் கீழ் அமைண் தவாரே ;

இப் பாடல் படி விந்தை விட்ட ஆணுக்கும் ,விந்தை ஏற்ற் பெண்ணுக்கும் , பிறக்கும் குழந்தை ஆணா ,பெண்ணா என்று தெரியாது உடலை படைக்கும் பிரம்மா ஒருவன மட்டும அறிவான் .ஆனால் அவன் யாரிடம் சொல்ல போவது இல்லை ,ஒரு வேளை சிவ பெருமானின் பூர்ண அருள் பெற்றால் ,

தான் பிறப்பது ஆனா ! பெண்ணா ! என்பதை அறிய முடியும் .மேலும் மழைப் பேறும் ,மகப்பேறும் மகாதேவனுக்கே தெரியாது என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு . ஆக இது ஓர் மாயை ஆகும் .

3, பிறக்கும் குழந்தையின் ஆயுள் நன்கு கணிக்க வேண்டும்
4, லக்கினம் ,லக்கினாதிபதி ,சந்திரா லக்னம் ,சந்திரா லக்கினாதிபதி ,ஆயுள் காரகன் சனி ,குரு ,பார்வை அல்லது சுபர் ,பார்வை செய்வது நல்லது .
5 . 1,5,9, திரிகோண ராசிகளும் ,1,4,7,10, கேந்திர ராசிகளும் 2,11, ராசிகளும் ,வலுபெற வேண்டும் ,
6 .கூடுமனவரை\, தாய் ,தந்தை ,மூத்த சகோதரர்கள் , சகோதறி ,ஜென்ம நட்ச்சத்திரம் பிறக்கும் குழந்தைக்கு வரக் கூடாது .
7. இலக்கினங்கள் அமைக்கும் போது நாக தோஷம் ,செவ்வாய் தோசம் , புத்திர தோஷம் , சகடை தோஷம் ,பாலரீஷ்ட தோசம் ,களத்திர தோசம் ,,தாய் தந்தைக்கு தோசம் , இல்லாமல் குறிக்க வேண்டும் .
8 . திருமணத்தை தாமதம் செய்யும் நட்சத்திரம் ஆன, மூலம் ,ஆயில்யம்,கேட்டை ,விசாகம் ,தவிர்க்க வேண்டும் .
9. அஷ்டமி திதி ,ராகுகாலம் ,யமகண்டம் ,மரணயோகம் ,தவிர்க்க வேண்டும் .
10 எதிர் காலத்தில் வரும் திசைகள் யோகமாக உள்ளவனவா, என்று பார்க்க வேண்டும் .
11. மேற்படி அத்தனை விதிகள் இல்லா விட்டாலும் ஆயுள் நன்றாக உள்ள லக்கினங்களை தேர்வு செய்ய வேண்டும், .
 
Top