சனி பகவானுடைய காரக தத்துவமும் மகிமைகளும்

ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கும் நவ கிரகங்களில் மிக மிக முக்கியமான கிரகமாகிய "சனீஸ்வரர் பகவானை"பாரம்பரிய ஜோதிடத்திலும் வேத ஜோதிடத்தில் சனி பகவானைப் பற்றிய முரண்பட்ட தகவல்களும் மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன,சனி ஒரு தீய கோள்,முழு அசுபர், யாருக்கும் நன்மை செய்ய மாட்டார்,சோம்பேறி,
ஜாதகத்தில் சனி இருக்கும் பாவம்,
கெட்டுப்போகும் நம்மால் அனுபவிக்க முடியாமல் போய்விடும்,சனி திசை வந்தால் ஒரு மனிதன் அனைத்தையும் இழந்து விடுவார் இப்படி எல்லாம் சொல்வார்கள்.
ஆனால் இது அனைத்தும் முற்றிலும் மிக மிக தவறாகும்.

நவகிரகங்களில் சனி பகவானையும் போன்று நீதி உடையவர் தர்மத்தின் பக்கம் நிற்பவர் நேர்மையானவர் யாருமே கிடையாது.
சனி பகவான் தர்மத்திற்கும் கடமைக்கும் கண்ணியத்திற்கும் கட்டுப்பட்டவர் ஆவார்.

சனி பகவான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நேர்மை ,பொறுமை, நிதானம், நிசப்தம், நாவடக்கம், சொல்லடக்கம், தன்னடக்கம் தர்மம்
இது எல்லாம் சனி பகவானின் ஒரு குணமாகும் அல்லது சனியின் காரணமாகும் இது சார்ந்த விஷயங்களில் ஒரு மனிதன் எப்போது தன்னுடைய வாழ்க்கையில் இந்த கட்டுப்பாடுகளை தகர்த்து எறிகிறானோ அப்போதுதான் சனி பகவான் அவரை தண்டிப்பார் அல்லது பிடிப்பார்

நவகிரகங்களில் சனி பகவானுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சக்தி.

நவக்கிரங்களில் ஏன் சனி பகவானுக்கு மட்டும் அவ்வளவு சக்தி என்றால் சனி பகவான் சூரிய பகவானின் மகன் மட்டுமல்ல அவ்வாறு எம்பெருமான் சிவபெருமானின் அம்சம் ஆவார்.

சிவபெருமானுடைய அம்சத்துடனும் அவருடைய ஆசியுடனும் பிறந்தவர்தான் சனி பகவானாவார்.
இன்னும் சொல்லப்போனால் சிவபெருமானுடைய ஒரு அவதாரமாக கூட நாம் சனி பகவானை எடுத்துக் கொள்ளலாம்.
பூமியில் தர்மத்தையும் நியாயத்தையும் நிலைநாட்ட மனிதர்களை கெட்ட பாதையிலிருந்து நல்வழிக்கு கொண்டு வர அவதரித்தவர் தான் சனி பகவானாவார்.

அதே சமயம் சனி பகவான் அசிங்கத்திற்கும் அவமானத்திற்கும் அதிபதி ஆவர்.சூரியன் அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும் தலைகணத்திற்கும் அதிபதி ஆவார்.
எப்போதுமே சூரிய பகவானுக்கும் சனி பகவானுக்கும் ஆகவே ஆகாது.
எதிரும் புதிரும் ஆகவே எப்போதும் இருவரும் இருப்பார்கள்.

ஏனென்றால் சனி பகவானுக்கு அதிகாரத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவது அகங்காரத்தில் ஆடுவது இது எல்லாம் பிடிக்காது.ஆனால் சூரியனுக்கு தலை கணத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவது அதிகாரம் செய்வதுதான் பிடிக்கும்.
அதனால்தான் ஜோதிடத்தில் சூரியனுக்கு சனி பகவான் பகைவர் என்று சொல்கின்றனர்.அதற்கு இதுதான் காரணம்.

அதனால்தான் ஜோதிடத்தில் சூரிய பகவான் எந்த இடத்தில் உச்சம் ஆகிறாறோ அந்த இடத்தில் சனி பகவான் நீச்சம் ஆகிறார் சனி பகவான் எந்த பாவத்தில் உச்சம் ஆகிறாறோ அந்த வீட்டில் சூரிய பகவான் நீச்சம் ஆகிறார்.அதற்கு இதுதான் காரணம்.

அதனால்தான் காலபுருஷ தத்துவத்தில் மேஷத்தில் சூரிய பகவான் உச்சம் ஆகிறார் அதே பாவத்தில் சனி பகவான் நீச்சம் ஆகிறார் அதேசமயம் துலாத்தில் சனி பகவான் உச்சம் ஆகிறார்.அதே பாவத்தில் சூரிய பகவான் நீச்சம் ஆகிறார்.எப்போதுமே காலபுருஷ தத்துவத்தின்படி படையில் சனி பகவானும் சூரிய பகவானும் ஒருவரை ஒருவர் எப்போதும் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

இருவருக்குமே ஏழாம் பார்வை இருக்கிறது எனவே சனிபகவானின் பார்வையிலிருந்து சூரியபகவான் எப்போதுமே விலக மாட்டார் நான் சொல்வது காலபுருஷ தத்துவத்தின்படி ஒருவருக்கொருவர் எப்போதுமே பார்த்துக் கொண்டே இருப்பார்கள் இதுதான் சூரியனுக்கும் சனிக்கும் இருக்கும்
தொடர்பாகும்.

கால பைரவருக்கும் சனிபகவானுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.

பிரம்ம தேவருக்கும் சிவபெருமானுக்கும் இடையில் மிகப்பெரிய வாக்குவாதம் எழுந்தது நான் பெரியவனா இல்லை நீ பெரியவனா இதுபோன்ற பிரச்சினை வந்தது.

பிரம்ம தேவருக்கு முதலில் 5 தலைகள் இருந்தது.அந்த ஐந்தாவது தலையை தான் கர்வம் கொண்ட அகங்காரம் கொண்ட குணங்களைக்
கொண்ட தலையாகும்.

சிவபெருமானைப் பற்றி பிரம்மதேவர் அகங்காரதிலும் ஆணவதிலும் சில தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிக்கொண்டே இருந்தார் உடனே கோபமடைந்த சிவபெருமான் காலபைரவரை வரவழைத்தார்.

கால பைரவரிடம் சிவபெருமான்
என்னுடைய கட்டளைக்கிணங்க என்னுடைய ஆணைக்கிணங்க நீ சென்று பிரம்மதேவனின் அந்த அகங்காரம் கொண்ட ஐந்தாவது தலையை பிடுங்கி எடுத்து விடு என்று ஆணையிட்டார்.

ஆனால் காலபைரவர் செய்த தவறு என்னவென்றால் பிரம்மதேவனின் ஐந்தாவது தலையை பிடுங்கும் போது சிவபெருமான் இட்ட கட்டளையை ஏற்று நான் உங்களை தண்டிக்கிறேன் என்று சொல்லவில்லை காலபைரவர் என்ன செய்தார் என்றால் என்னுடைய பலத்தை பார் என்று சொல்லி ஆணவத்தில் அந்த ஐந்தாவது தலையை வெட்டிவிட்டார்.

அப்படி காலபைரவர் ஆணவத்துடன் பிரம்மதேவரின் ஐந்தாவது தலையை வெட்டும் போது சனி பகவான் காலபைரவரை பார்த்து விடுகிறார்.
அதனால் வெட்டப்பட்ட அந்தக் தலை கால பைரவரின் கையில் ஒட்டிக்கொண்டது

சனி பகவான் காலபைரவரை பார்த்து என்ன சொன்னார் என்றால் நான் மனிதர்களையே அகங்காரத்தில் ஆடக்கூடாது ஆணவத்தில் ஆடக்கூடாது என்று சொல்கிறேன் நீ ஒரு கடவுளாக இருந்து கொண்டு எப்படி நீ அகங்காரத்தில் ஆணவத்தில் ஆடினாய் அதற்கான தண்டனையை நீ அனுபவித்து தான் ஆக வேண்டும் நீ எப்போது உன் அகங்காரத்தை ஆணவத்தை உடைக்கிறாயோ அப்போதுதான் இந்த சாபத்திலிருந்து உனக்கு விமோசனம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு சனி பகவான் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

கடைசியில் கால பைரவர் தன்னுடைய கையில் ஒட்டிக் கொண்ட திருவடி உடன் அனைத்து தேவர்களிடமும் அனைத்து கடவுளிடமும் சென்று பிச்சை எடுத்தார்.அதன் மூலம் தன்னுடைய ஆணவத்தையும் தான் செய்த குற்றத்தையும் உணர்ந்து அனைத்தையும் விட்டு திருந்தினார்.

அப்போதுதான் காலபைரவருக்கு சாப விமோசனம் கிடைத்தது கடவுளுக்கே இப்படி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் சிந்தித்துப் பாருங்கள்.

நவகிரகங்களில் சனி பகவானுக்கு தான் ஒரு மனிதனுக்கு தேவையான மிக முக்கியமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொழில் ,ஆயுள், கடமை கண்ணியம்
கர்மகாரகன்
இது அனைத்தும் சனி பகவானின் காரகத்துவம் ஆகும்.

ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமானவைகள் இதுதான்.
அதனால்தான் இது அனைத்தும் சனியின் கட்டுப்பாட்டில் கொடுத்திருக்கிறார்கள்.

அதிலும் முக்கியமாக சனியன் காரகத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களும் நாம் வாழ்க்கையில் செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் கண்டிப்பாக இருக்கும்.
தொழில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் செய்தே ஆக வேண்டும் அது யாராக இருந்தாலும் சரி

ஏன் இது அனைத்தும் சனியின் காரகத்துவதிற்கு கொடுத்தார்கள் என்றால் ஒரு மனிதன் தொழில் சார்ந்த விஷயங்களில் அகங்காரத்திலும் ஆணவதிலும் ஆடக் கூடாது என்பதற்காகத்தான்.
தொழிலில் வருமானம் அதிகமாக வரும் போது தலைக்கனம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சனியின் காரகத்துவத்திற்கு தொழில் ஸ்தானத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அதனால்தான் காலபுருஷ தத்துவத்தின் அடிபடையில் தொழில் ஸ்தானத்தை குறிக்கக்கூடிய பத்தாம் பாவம் ஆகிய மகரம் என்னும் வீடும் லாப ஸ்தானத்தை குறிக்கக்கூடிய பதினோராம் பாவம் ஆகிய கும்பம் எனும் வீடும் சனி பகவானின் வீடுகளாக வருகிறது.

யாரெல்லாம் தொழிலில் ஏமாற்றுகிறார்களோ தொழில் அடுத்தவர்களுக்கு துரோகம் செய்கிறார்களோ தொழிலில் தர்மத்தையும் நியாயத்தையும் சரியாக கடைப்பிடிக்காமல் இருக்கிறார்களோ அவர்களை தண்டிப்பதற்காக தான் சனி பகவானுக்கு தொழில் ஸ்தானம் எனும் பத்தாம் பாவமும்,லாப ஸ்தானம் எனும் பதினோராம் பாவமும் கர்ம ஸ்தானம் சனி பகவானுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


சனிபகவான் தான் தொழிலுக்கும் அதிபதி ஆயுளுக்கும் அதிபதி
அதாவது யாருடைய குடும்பத்தில் எல்லாம் தொழிலில் நன்றாக கொடிகட்டிப் பறக்கிறார்களோ அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் ஆயுள் அவ்வளவாக இருக்காது.

அதே சமயம் யாருடைய குடும்பத்தில் எல்லாம் அனைவருக்கும் ஆயுள் நன்றாக இருக்கிறதோ அவர்கள் குடும்பத்தில் தொழில் நன்றாக இருக்காது


யாரையெல்லாம் சனி பகவான் பிடிப்பார் சனிபகவானுடைய காரகத்துவங்களை பார்க்கலாம் சனி பகவான் அடிமை மனோபாவம்,தாழ்வு மனப்பான்மை, பயத்தை கொடுக்கக்கூடியவர்,பாதுகாப்பற்ற ஒரு மனோபாவத்தை கொடுக்கக் கூடிய
அசிங்கத்தையும் ,அவமானத்தையும்,
கொடுக்கக் கூடியவர்,இது எல்லாம் சனியின் காரகத்துவம் ஆகும்.

அதாவது யாரெல்லாம் அகங்காரத்தில் ஆணவத்தில் ஆடுகிறார்களோ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களோ,
கடமை, நேர்மை, கண்ணியத்துடன் வாழாமல் இருக்கிறார்களோ,
அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கிறார்களோ அவர்களைத் தான் சனிபகவான் பிடிப்பார்.

இது போன்று செய்பவர்களை சனி பகவான் முதலில் அவர்களுடைய தொழில் கை வைப்பார் அதாவது தொழிலில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துவார்.அல்லது அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்.இல்லையென்றால் ஆயுளில் கை வைத்து விடுவார்.

இதை நாம் நிகழ்காலத்தில் எப்படி ஒப்பிடலாம் என்றால் மிகப் பெரிய தொழில் அதிபர்கள் அல்லது ஊரில் இருக்கும் மிகப்பெரிய முக்கியமான மனிதர்கள் தங்களுக்கு ஒரு அசிங்கம் ஒரு அவமானம் வந்து விட்டால் அது தொழிலாக இருக்கலாம் சொந்த பிரச்சினையாக இருக்கலாம் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம்.

இதற்குக் காரணம் சனி பகவான் தான் ஆவார்.ஏனென்றால் இவர்கள் இத்தனை காலம் வைராக்கியத்துடன் கொண்டிருந்த அந்த ஒரு கொள்கை மற்றும் ஒரு பெயர் ,புகழ், அந்தஸ்து,
மரியாதை, இது எல்லாம் இவர்களை விட்டுப் போய் விடும் அவர்களால் அந்த மன வலியை தாங்கி வாழ முடியாது

ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு போதும் அகங்காரத்தில் ஆணவதில் தலை கணதில் இருக்கக்கூடாது,வாழக் கூடாது அப்படி இருந்தால் சனி பகவான் முதலில் அவர்களைத்தான் பிடிப்பார் பிறகு தன்னுடைய வேலையை காட்டி விடுவார்.

சனி பகவான் ஒருவரை பிடித்தவர் என்றால் அவர்களை இரண்டு விஷயங்களில் துன்புறுத்துவது தொழிலில் மற்றொன்று ஆயுளில்
மிக முக்கியமாக சனியின் காரகத்துவமான கடை நிலை ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், குறைந்த ஊதியத்தில் வேலை பார்ப்பவர்கள், அடிமை வேலை செய்பவர்கள்,
சாக்கடை சுத்தம் செய்பவர்கள் கொத்தடிமைகள்,தாழ்த்தப்பட்ட மக்கள்,பழங்குடிமக்கள்,சிறுபான்மையின மக்கள்,உடல் ஊனமுற்றவர்கள் அங்கஹீனம் கொண்டவர்கள்,
பிச்சைக்காரர்கள்.இவர்கள் மனம் புண்படும் வகையில் ஒரு தவறையோ ஒரு கேலி கிண்டலயோ,
ஒரு துரோகத்தையும் என்றைக்குமே செய்யவே கூடாது.

மீறி செய்தார்கள் என்றால் சனி பகவான் அவ்வளவுதான் அவர்களை விட்டு வைக்க மாட்டார் உடனடியாக பிடித்துவிடுவார் பிறகு அவர்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்தையும் தொழிலிலும் ஆயுளிலும் கண்டிப்பாக கை வைத்து விடுவார்.எனவே யாரும் இவர்களை சார்ந்து எந்த ஒரு தவறையும் ஒரு துரோகத்தையும் ஒரு கேலி செய்ய வேண்டாம் சனி பகவானுக்கு அகங்காரம் ஆணவம் என்பது பிடிக்காது.நம்மை சனி பகவான் பிடிக்கக் கூடாது அல்லது சனியின் தாக்கத்திலிருந்து நாம் பாதிக்கக்கூடாது என்று நினைக்க வேண்டும் என்றால்.முதலில் நாம் அகங்காரத்தில் ஆடுவது ஆணவத்தில் ஆடுவதை விட்டுவிட வேண்டும் அப்போதுதான் சனி பகவான் நம்மை விடுவார்.

யாரெல்லாம் தன்னடக்கத்துடன் நாவடகத்துடன் சொல்லடக்கத்துடன் பொறுமையுடன் நிதானத்துடன் அமைதியுடன் மரியாதையுடன் இருக்கிறார்களோ அல்லது வாழ்கிறார்களோ அவர்களை சனி பகவான் காலத்திற்கும் அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள் அவர்கள் கேட்கும் அனைத்தையும் வாரி வாரி வழங்குவார்.இவர்கள்தான் சனிபகவானுடைய அருள் பெற்றவர்கள்
இன்னும் சனி பகவானைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம் அவ்வளவு விஷயங்கள் எழுதி கொண்டு போகலாம்
 
Top