குரு பகவான் கோவில்கள்

#சென்னை

திருவலிதாயம் குரு.. சென்னை அருகில் பாடியில் (திருவலிதாயம்) உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும்.

வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார்.

இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார்.

குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு. குரு தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும் வேளையில்தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

சென்னை ரெட்ஹில்ஸ் பெரியபாளையம் சாலையில் அமைந்திருக்கும் திருக்கண்டலத்தில், திருகன்னீஸ்வரர் கோயிலில் பிருகு முனிவரின் பூஜையில் மகிழ்ந்து, இங்குள்ள ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கி அருள்பாலிக்கிறார்.

சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் ஆந்திரா சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்.

திருவலிதாயம் குரு* : சென்னை அருகில் பாடியில் (திருவலிதாயம்) உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும்.

வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார்.

இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனைப்படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார்.

குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு. குரு தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும் வேளையில்தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

சென்னை ரெட்ஹில்ஸ் பெரியபாளையம் சாலையில் அமைந்திருக்கும் திருக்கண்டலத்தில், திருகன்னீஸ்வரர் கோயிலில் பிருகு முனிவரின் பூஜையில் மகிழ்ந்து, இங்குள்ள ஈசன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அன்னை உமையைத் தன் மடியில் தாங்கி அருள்பாலிக்கிறார்.

சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் ஆந்திரா *சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர?

#கோயம்புத்தூர்

கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ.தொலைவில் கோவில் பாளையம் காலகாலேஸ்வரர் திருக்கோயிலில் மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

கோயம்புத்தூரிலிருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள ஆணைகட்டி ஆர்ஷ வித்யா ஆசிரமத்தில் தனிக்கோயில் கொண்டுள்ளார் மேதா தட்சிணாமூர்த்தி.

#மதுரை

குருவித்துறை குரு : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.

அசுரகுருவான சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் கற்றிருந்தார்.

இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார்.

அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்கிராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர். தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான்.

அதன்படி சுக்கிராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான்.

அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்கிராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்கிராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார்.

மகனைக்காணாத குருபகவான், அவனை அசுரலோகத்தில் இருந்து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார்.

சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்

காண்பதற்கரிய தெட்சிணாமூர்த்தி : வழக்கமாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன்தான் தெட்சிணாமூர்த்தி காட்சி தருவார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கைலாசநாதர் கோயிலி

ல் இவர் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார்.

சிவனின் குரு வடிவமான தெட்சிணாமூர்த்தியிடம் ஆங்கீரசர், அத்திரி, காஷ்யபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர் ஆகியோர் உபதேசம் பெற்றனர்.

இவர்கள் பதினான்கு பேரும் அவரிடம் உபதேசம் பெற்ற கோலத்தில் உள்ளனர். இத்தகைய அமைப்பில் தெட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது மிகவும் அரிது.

மலையடிவாரத்தில் அமைந்த இக்கோயிலில், தெட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பு.

இவரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலுக்கு அருகிலேயே ருக்மணி, சத்யபாமாவுடன் கிருஷ்ணர் கோயிலும், மலைக்கு மேலே தங்கமலை ராமர் கோயிலும் உள்ளது

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் காசிவிஸ்வநாதருக்கு அருகில் மேதா தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

இதுதவிர எங்கெல்லாம் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளதோ அங்கிருக்கும் தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிப்பது வழக்கம்.

மதுரை பழங்காநத்தம் பஸ்ஸ்டாண்ட் அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவதட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அருள் பாலிக்கிறார்.

புலித்தோலை ஆடையாக அணிந்து, சப்தரிஷிகள் கீழே நிற்க முடிந்த தலையில் கங்கையுடன், வலது கை அபயமுத்திரையுடன் ஜபமாலை, இடது கையில் ஏடு, வலது மேல்கையில் நாகம், இடது மேல்கையில் அக்னி என சிவனே தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மதுரை ஆரப்பாளையம் புட்டுசொக்கநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி யோகாசன தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

#திருச்சி

சப்த குரு தரிசனம் : குருவைப் பற்றிய ஸ்ரீகாண்டேயா என்ற ஸ்லோகம், தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தெட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளதாகக் குறிப்பிடுகிறது.

இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோயிலில் தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான இக்கோயிலில், பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.

நவக்கிரக குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன்
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி, தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரமர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.

திருச்சிக்கு அருகேயுள்ள லால்குடியில் அமைந்துள்ள சிவன் கோயிலிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோயிலிலும் தட்சிணாமூர்த்தி வீணை ஏந்திய நிலையில் வீணா தட்சிணாமூர்த்தியாக இருக்கின்றார்.

#திருவாரூர்

ஆலங்குடி ஞானகுரு : நவக்கிரக தலங்களில் குருவுக்குரியதாக போற்றப்படுவது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்.

இது திருவாரூரிலிருந்து 30கி.மீ., தூரத்தில் உள்ளது. இங்கு குரு பகவான் சிவபெருமானை வழிபட்டுள்ளார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, ஞானம் தரும் குருவாக அருள்பாலிக்கிறார்.

திருத்தல யாத்திரை மேற்கொண்ட சுந்தரர், இத்தலத்திற்கு வந்தார். அப்போது, அருகிலுள்ள வெட்டாற்றில் சிவன், வெள்ளப்பெருக்கு ஏற்படும்படி செய்தார். சுந்தரர் ஆற்றின் மறுகரையில் நின்றார்.

அங்கு வந்த ஓடக்காரர் ஒருவர், தான் அவரை கோயிலுக்கு அழைத்து வருவதாகச் சென்றார். பாதி வழியில் ஓடம் கவிழும் நிலையை உருவாக்கினார். கலங்கிய சுந்தரர் சிவனை வேண்டினார்.

அப்போது, அவருக்கு காட்சி தந்த சிவன், தானே ஓடக்காரனாக வந்ததை உணர்த்தினார். பின், கோயிலுக்கு வந்த சுந்தரருக்கு சிவன், குருவாக இருந்து ஞானஉபதேசம் செய்தார்.

இதனால், இவருக்கு ஞான தெட்சிணாமூர்த்தி என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு விசேஷமாக நடக்கும்.

மன்னார்குடி

பெருகவாழ்ந்தான் வழியில் 15 கி.மீ. தொலைவிலுள்ள கழுகத்தூர் சௌந்தரநாயகி சமேத ஜடாயுபுரீஸ்வரர் கோயிலின் பிராகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால் 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

#தஞ்சாவூர்

மேற்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி : தெட்சிணாமூர்த்தி, சிவன் சன்னதி கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி இருப்பார்.

ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோயிலில் இவரை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம்.

இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியிருப்

பது சிறப்பு. இந்த தெட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.

ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தெட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னதியிலுள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் அருள்பாலிக்கிறார்.

தஞ்சை பாலதண்டாயுதபாணி திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி அம்பிகை சமேதராக அருள்பாலிக்கிறார்.

திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராகக் காட்சியளிக்கிறார். இவர் காலடியின்கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோயிலிலும் காணமுடியாது.

தஞ்சை பாபநாசம் அருகிலுள்ள நல்லூர் கல்யாணசுந்த ரேஸ்வரர் திருக்கோயிலில் இரட்டை தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தஞ்சாவூர் திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயிலில் இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

தஞ்சாவூர் மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

எல்லாக் கோயில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், தஞ்சாவூர் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.

#கடலூர்

சாப்பிட்ட கோலத்தில் தெட்சிணாமூர்த்தி : அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் இருக்கின்றனர். விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன் அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார்.

இதன் அடிப்படையில் இக்கோயிலில் தெட்சிணாமூர்த்தி இக்கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இவரை தவ தெட்சிணாமூர்த்தி என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

கடலூர் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

உமாதேவியாருக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை சிவன் தெட்சிணாமூர்த்தியாக இருந்து உபதேசித்ததால் இது குருமூர்த்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது.

இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. குரு ஸ்தலங்களில் தலைசிறந்ததாக கருதப்படுவதற்கு இதுவே காரணம்.

சில தலங்களில் கையில் வீணை ஏந்தியபடி இசைக்கு அதிபதியாக காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி, கடலூர் திருச்சோபுரம் சோபுரநாதர் கோயிலில் இசையின் வடிவமாகவே அருளுகிறார்.

இவரது சிலையை தட்டிப்பார்த்தால் சப்தஸ்வர ஓசை எழுகிறது. வழக்கமாக வலது கையில் நாகமும், இடது கையில் அக்னியும் ஏந்தியிருக்கும் தெட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் இடது கையில் நாகம், வலது கையில் அக்னி என மாற்றி வைத்துள்ளார்.

சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கி.மீ. தொலைவிலுள்ள சிவபுரி எனும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக்கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் உருவானவர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோயிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.

#நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி பூம்புகார் வழியில் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது.

நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும். இங்கு உள்ள தட்சிணாமூர்த்திக்கு கீழ் சனகாதி முனிவர்களுக்கு பதில் பிரம்மா அமர்ந்த கோலத்தில் உள்ளார். பிரம்மனுக்கு உபதேசம் செய்த இந்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவது சிறப்பு.

மயிலாடுதுறை காவிரிக்கரை வள்ளலார் கோயிலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி. நந்திமீது அமர்ந்தவாறு அருள்பாலிக்கிறார்.

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது குறுக்கை. இங்கு யோக தட்சிணாமூர்த்தி ஆலயம் உள்ளது. இவர் கிரகங்களுக்கே அதிபதியாவார். இவர் யோக நிலையில் காணப்படுவதால் பெரும்பலம் பொருந்தியவர்.

நாகை திருக்குரக்கா குந்தளேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பிய நிலையில் அருள்பாலிக்கிறார்.

#சிவகங்கை..

கிழக்கு நோக்கிய குரு : கிழக்கு நோக்கிய அனுக்கிரஹ தட்சிணாமூர்த்தி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளு

கிறார். இவரது சன்னதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது.

பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னதி அமைந்துள்ளது. இவரது சன்னதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது.

இத்தலத்தில் தெட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும்.

மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர். இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம்.

#இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலிலும், சென்னை திரிசூலம் கோயிலிலும், தட்சிணாமூர்த்தி வீராசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

#தேனி

தேனி வேதபுரி தெட்சிணாமூர்த்தி கோயிலில் ஞானக் கடவுள் தெட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. இத்தலம் பல சிறப்புகளைக் கொண் டுள்ளது. மூலவர் பிரஜ்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங் கள் அஸ்திவாரத்தின் கீழ் முறைப்படி வைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் நமசிவாய பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் வைக்கப் பட்டுள்ளன.

தேனி உத்தமபாளையம் முத்துக்கருப்பண்ணசுவாமி கோயிலில், தெட்சிணாமூர்த்தி, கல்லால மரம், முயலகன், சீடர்கள், கைகளில் உடுக்கை, அக்னி என எதுவும் இல்லாமல் காட்சி தருகிறார்.

இடது காலை மடக்கி யோகப்பட்டை அணிந்து, சின்முத்திரை காட்டும் இவர், மேல் இரு கரங்களில் மலர் வைத்திருக்கிறார். குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், இவரை வழிபட குருவின் நல்லாசி கிடைக்கும்.

தேனி மாவட்டம் கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வலதுகாலை தொங்கவிட்டு, இடதுகால் குத்துக்காலிட்ட நிலையில் கையில் கமண்டலத்துடன் காட்சியளிக்கிறார்.

#திருவள்ளூர்

திருவொற்றியூர் தெட்சிணாமூர்த்தி : கோயில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தெட்சிணாமூர்த்தியை, திருவொற்றியூரில் வடக்கு பார்த்த கோலத்தில் தரிசிக்கலாம்.

பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. இங்கு மூலவராக தெட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக சுவாமி பீடத்தில் நான்கு சனகாதி முனிவர்கள் மட்டுமே இருப்பர்.

ஆனால், இவரது பீடத்தின் கீழ் 18 மகரிஷிகள் உள்ளனர். இவருக்கு இங்கு உற்சவர் வடிவமும் உள்ளது. இச்சிலையின் கீழ் ஒரு யானை வடிவமும் உள்ளது. குரு பெயர்ச்சிக்கு இங்கு விசேஷ பூஜைகளும், ஹோமங்களும் நடக்கும்.

பரிகார ராசியினர் இவரது சன்னதியில் அதிகளவில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் கேசரி, பூந்தி போன்ற இனிப்பு பதார்த்தங்கள் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

#காஞ்சிபுரம்

மூலஸ்தானத்தில் குரு : மகாவிஷ்ணு, ஒரு சந்தர்ப்பத்தில் தனது சக்கராயுதத்தை ததீசி என்ற முனிவர் மீது எய்து விட்டார். இதனால், அவரது சக்கரம் பலமிழந்தது. சக்கரம் வலிமை பெற சிவனை வேண்டினார்.

அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து அருள் செய்தார். காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் வழியில், 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் கோவிந்தவாடி என்று பெயர் பெற்றது. மூலஸ்தானத்தில் தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கி இருக்கிறார்.

இவருக்குப் பின்புறம் கைலாசநாதர் லிங்கம் இருக்கிறது. ஒரே விமானத்தின் கீழ் சிவனும், தெட்சிணாமூர்த்தியுமாக அமைந்த கோயில் இது. இங்கு பஞ்சாசனத்தின் கீழ் காட்சி தரும் தெட்சிணாமூர்த்தி நெற்றியில் கங்கை, பிறைச்சந்திரன் சூடி, நெற்றியில் மூன்றாம் கண்ணுடன் இருப்பது சிறப்பு.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

#விழுப்புரம்

விழுப்புரம் அருகிலுள்ள கோலியனூர் வாலீஸ்வரர் கோயிலில், சப்தகன்னியருடன் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

#வேலூர்

வேலூர் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில் கோயிலின் கொடிமரத்தில் தென்திசையைப் பார்த்தவாறு அமர்ந்து அருட்காட்சி தருகிறார்.

அரக்கோணத்துக்கு 16 கி.மீ. தொலைவிலிருக்கும் தக்கோலம் திருத்தலத்தில் இருக்கும் சாந்த தட்சிணாமூர்த்தி வலக்காலை தொங்கவிட்டுக்கொண்டும், இடக்காலை மேலே வைத்துக்கொண்டு உத்கடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

#ஈரோடு

ஈரோடு சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆலமரத்தின் கீழ் தன் துணைவியை மடியில் அமர்த்தியபடி தெற்கு பார்த்து காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி வலது கால் மடித்து, இடதுகால் தொங்கவிட்ட நிலையில் கால்மாறிய தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

#திருநெல்வேலி

திருநெல்வேலிக்கு அருகில

ுள்ள தென்திருபுவனம் புஷ்பவனநாதர் திருக்கோயிலில், வழக்கத்துக்கு மாறாக வலக்காலை மடித்து இடது தொடைமேல் வைத்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

பெரும்பாலும் சிவாலயங்களில் மட்டுமே இருக்கும் தட்சிணாமூர்த்தி, திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி மன்னார்கோயிலில் உள்ள வேதநாராயணர் கோயில் விமானத்தில் அருள்பாலிக்கிறார்.

#தூத்துக்குடி

நவகைலாய குரு கோயில் : தாமிரபரணி நதிக்கரையில் உரோமசர் வழிபட்ட ஒன்பது சிவாலயங்கள், நவகைலாய தலங்கள் எனப்படுகின்றன.

இதில், திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில், 17 கி.மீ., தூரத்திலுள்ள முறப்பநாட்டில் உள்ள கைலாசநாதர், வியாழ பகவானுக்குரிய அதிபதியாக அருளுகிறார்.

தன்னைத் தரிசித்த உரோமசருக்கு, சிவன் குரு அம்சமாக இருந்து காட்சி கொடுத்ததால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது. சிவனுக்கு, மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலைஅணிவித்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது.

கோயில் அருகில் ஓடும் தாமிரபரணி நதி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இதற்கு தட்சிண கங்கை என்று பெயர். நவகைலாய தலங்களில், நடுநாயகமாக இருப்பதால் இதற்கு, நடு கைலாயம் என்றும் பெயருண்டு.

பிரதான குரு தலம் : குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார்.

அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

இங்குள்ள மேதா தெட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார்.

வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தெட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது.

குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

குரு சிஷ்யன் : 108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது.

நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய (வியாழன்) தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், இத்தலத்தில் சிஷ்யனான மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார்.

தூத்துக்குடி கழுகாசலமூர்த்தி கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

#அரியலூர்

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒரே இடத்தில் அமர்ந்துள்ள மூன்று தட்சிணாமூர்த்திகளையும் வழிபடுவது சிறப்பு.

#திண்டுக்கல்

மானூர் பெரியாவுடையார் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

#கரூர்

குளித்தலை புஷ்பவனேஸ்வரர் கோயிலில் கோஷ்டத்தில் சிம்மம் தாங்கும் குரு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

#கிருஷ்ணகிரி

ஓசூர் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் உள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை சம்ஹாரம் செய்து ஞானத்தை வழங்குகிறார். எனவே இவர் சம்ஹார தெட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.

#நீலகிரி

ஊட்டி காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் அல்லாமல் சின் முத்திரையோடு காட்சி தருகிறார்.

சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும்.

ஆணவம் கண்மம், மாயை ஆகிய தருவதைக் குறிக்கும். சந்நியாசம் வாங்க, உபதேசம், ஞானம் ஆகியவற்றை பெற இந்த யோக தட்சிணாமூர்த்தியை வணங்குவது நலம்.

#புதுக்கோட்டை

திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோயில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகப்பெரிய தட்சிணாமூர்த்தியாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும், மறுபாதி பெண் தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.

திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கையில் வீணையுடன் வீணாதர தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

#விருதுநகர்

சிவகாசி காசிவிஸ்வநாதர் கோயிலில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் போன்ற சனகாதி முனிவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கிய நிலையில் அருள்பாலிக்கின்றனர்.

#திருவண்ணாமலை

பனங்காட்டூர் தாளபுரீஸ்வரர் கோயிலில் கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி தன் இடக்காலை மடக்கி வைத்தபடி வித்தியாசமாக காட்சி தருகிறார்.

#சேலம்

சேலம் காயநிர்மா

லேஸ்வரர் கோயிலில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுடன் அருளும் தெட்சிணாமூர்த்தி, இக்கோயிலில் ஆறு சீடர்களுடன் காட்சி தருகிறார்.

இவர் கோஷ்டத்தில் தனிச் சன்னதியில் இருக்கிறார். தனி விமானமும் உள்ளது. நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவருக்கு அருகே இந்த 6 சீடர்களும் உபதேசம் பெறும் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர்.

இவர்களில் 3 பேர் அமைதியாகவும், மற்ற 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இருக்கின்றனர். தெட்சிணாமூர்த்தியின் இக்கோலம் மிகவும் விசேஷமானதாகும்.

நவகிரக சன்னதிகள் பெரும்பாலும் சிவன் கோயில்களில் தான் இருக்கும். மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் போன்ற மிக முக்கிய பெருமாள் தலங்களில் மட்டுமே நவகிரக சன்னதி இருக்கும்.

ஆனாலும் மதுரை மாவட்டம் சோழவந்தான் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி ஆதிநாத பெருமாள் போன்ற பெருமாள் தலங்கள் சிறந்த குரு ஸ்தலமாக விளங்குவது சிறப்பு.

#புதுச்சேரி

காரைக்கால் யாழ்மூரிநாதர் கோயிலில் சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம்.

இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தெட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தெட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள்.

ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தெட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.

இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.

#கேரளா....

மூலவர் தட்சிணாமூர்த்தி : தட்சிணாமூர்த்தியை மூலவராக கொண்ட கோயில், கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள சுகபுரத்தில் இருக்கிறது.

2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் உள்ள மூலவரின் மீது தான், ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகம் இயற்றினார்.

சுகப்பிரம்ம மகரிஷிக்கு தட்சிணாமூர்த்தி ஞானஉபதேசம் செய்தது இந்த இடத்தில் தான் என தல புராணம் கூறுகிறது.

தமிழகத்தில் சென்னை திருவான்மியூரில் தெட்சிணாமூர்த்தியை மூலவராகக் கொண்ட தனிக்கோயில் இருக்கிறது. இந்த தெட்சிணாமூர்த்தியே தமிழகத்தில் மிக உயரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#ஆந்திரா...

அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள ஹேமாவதியில் ஐயப்பன் போல் ஆசனமிட்டு, யோக மூர்த்தியாகத் திருக்காட்சி தருகிறார்.

கேரளா மாநிலம் சுகபுரத்தில், தட்சிணாமூர்த்திக்கென்றே ஒரு தனி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தை இயற்றியது இங்குதானாம்.

#கர்நாடகா...

நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் உள்ள யோக தெட்சிணாமூர்த்தி, 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம்...
 
Top