களத்திர பொதுவிதிகள்

1,7ம் அதிபதிகள் ஏழாம் அதிபதின் ஆட்சிவீட்டில் கூட ஒரே திருமணம்.
2, 7, சுக்கிரன் கூடி 6, 8, 12ல் இருப்பதும்; 2, 7, சுக்கிரன் பாவியருடன் கூடி மேற்சொன்ன இடங்களுடன் 1, 3ல் இருப்பினும் தாரதோசம்.
-.
ஏழு சுத்தமாகி சுக்கிரனும் ஏழாம் அதிபதியும் ராகுகேது தவிர்ந்த ஏனையவொருவருடன் கூட ஒரே திருமணம்.
-
7ல் பாவிகள் இருந்தால் மனைவிக்கு உடல்நலகேட்டினை கொடுத்து விடும். ராகு இருக்கும் பட்சத்தில் மனைவிக்கு சிசு கலையலாம். சூரிய ராகு சேர்க்கை 2ல் இருந்தாலும் மனைவிக்கு தீராத பிரச்சனை.
-
ராகு, செவ்வாய் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
ராகு, சனி 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
ராகு, சூரியன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
ராகு, சுக்கிரன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
கேது, செவ்வாய் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
-
கேது, சனி 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
கேது, சூரியன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
கேது, சுக்கிரன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
சனி, சூரியன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
செவ்வாய், சூரியன் 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
செவ்வாய், சனி 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்
-.
புதன், சனி 7ல் இணைந்து இருந்தால் தாரதோஷம்.
கிரகணமடைந்த கிரகங்கள் ஏழில் இருந்தால் திருமணம் ரீதியான பொதுவாழ்க்கை சிறக்காது அல்லது புத்திர சோகம் இருக்கும்.
-
11ம் வீடு சரமாகி அங்கு களத்திராதிபதி இருந்தால் தீமையும்; 11ம் வீடு ஸ்திர, உபயமாகி அங்கு களத்திராதிபதி இருந்தால் நன்மையும் உண்டாம்.
-
7, 11ம் அதிபதிகள் பலம்பெற்று திரிகோணத்தில் தொடர்புற்ற சுபர்நோக்க முதல் மனைவி இருக்கும் நிலையில் இன்னொரு திருமணம் செய்வார் (அ) நாடுவார்.
இவை களத்திர பொதுவிதிகளாகும்
 
Top