8000 ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் கூறிய மூச்சு தத்துவம்

எங்கெல்லாம் பாம்பு படங்கள், சிலைகள் உள்ளனவோ அவைகள் எல்லாம் மூச்சுக்காற்றைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகும்.
நமது மூச்சுக்காற்றையே பாம்பாக உருவகப்படுத்தினார்கள்.
இரண்டு கண்கள், காதுகள் இருந்தாலும் பார்க்கும் பார்வையும், கேட்கும் சத்தமும் ஒன்றாகவே உள்ளன. பின் ஏன் இரண்டு?
ஆனால் மூக்கிற்கு ஏன் இரண்டு துவாரங்கள்? இரண்டு துவாரங்களுமே ஒரே செய்கையினை செய்கிறதா? என்று ஆராய்ந்தால், இரண்டு துவாரங்களும் வெவ்வேறு இரண்டுவித செய்கையினை செய்வதை அறியலாம். மேலும் மூன்றாவதாக ஒரு செயலையும் செய்வதைக் காணலாம்..

1. மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு “சந்திரகலை” என்றொரு பெயரும் உண்டு...

2. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு...

3. இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்...

ஆக இம்மூன்று செயல்களையும் நமது நாசி செய்துவருகிறது. இதனை ‘சரவோட்டம்’ என்பார்கள்.
ஆட்காட்டி விரல்களை மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.
இந்த சர ஓட்டம் இயற்கையாகவே சுமார் ஒன்றறை மணித்துளிகளுக்கு ஒருமுறை மாறி மாறி இயங்கும். இம்மாற்றத்தை நமது விருப்பத்திற்கு இனங்க மாற்றுவதுதான் ‘மூச்சு கலை’ என்கிறோம்...

நீண்டநாள் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசம் செய்யவேண்டும்.
1நிமிடத்திற்கு 15 மூச்சும்,
1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்,
1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.
உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும்...

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.
ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும்,
நடக்கும் போது 18 மூச்சும்,
ஒடும்போது 25 மூச்சும்,
தூங்கும் போது 32 மூச்சும், கோபம் போன்ற உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும்
1 நிமிடத்தில் ஓடுகின்றன.
இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது...

இவ்வுலகில் மிக அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் ஆமை. அது ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கும். இதன் ஆயுள் சராசரியாக 200 வருடங்களுக்கும் மேல்.
மூச்சின் ஆதாரம் — நுரையீரல்.
என்ன செய்ய வேண்டும்?
காற்றோட்டமான அறை,
ஏசி பயன்பாடில்லா வீடு,
செயற்கை குளிர் பாணங்கள் பண்டங்கள் தவிர்த்தல், (ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ்)
கடினமாக செரிக்கும் உணவுகளை தவிர்த்தல்,
முன் தூங்கி முன் எழுதல்,
கோபம் போன்ற உணர்ச்சிகளை தவிர்த்து உணர்வில் நிலைத்தல் போன்றவை நம் ஆயுட்காலத்தை நீட்டிக்கும்...

பசித்துப்புசி!
பேச்சைக்குறை!
மூச்சைக்கவனி!..
 
Top