மயானக்கொள்ளை என்ற திருவிழா நடப்பதன் தாத்பரியம் என்ன?

மாசி மாத அமாவாசை நாளில் மயானக்கொள்ளை என்ற திருவிழா நடைபெறும். அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். மாசி மாத அமாவாசை நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர். கும்பம் என்பது அமரத்துவத்தைத் தரக்கூடிய அமிர்தகடத்தைக் குறிக்கும். அமிர்தம் நிறைந்த இந்த கும்பத்தினை தனது மாதமாகக் கொண்டு சூரியன் சஞ்சரிக்கும் காலத்தில், சந்திரன் அந்த ராசியில் வந்து இணையும் அமாவாசை நேரம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

இந்த நேரத்தில் அம்பிகையின் அருளால் கர்மா செய்ய ஆளின்றி மேலுலகம் செல்ல இயலாமல் தவிக்கும் ஆன்மாக்களுக்கு மோட்சம் கிட்டும் என்பது நம் நம்பிக்கை. கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதியினைத் தருகிறாள் என்ற நம்பிக்கையில் இந்த மயானக்கொள்ளை விழா கொண்டாடப்படுகிறது.
 
Top