நவ கைலாய தலங்கள்

நவகைலாயம் வரலாறு :

தென் தமிழகத்தின் எல்லையாக திகழ்வது பொதிகை மலை, அங்கு அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் மீண்டும் பிறவா வரம் வேண்டி (முக்தி வேண்டி) சிவ பெருமானை வணங்கினர். இதை அறிந்த அகத்திய முனிவர் "தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு, பின்னர் நவக்கோள் வரிசையில் சிவனை வணங்கவேண்டும்’’ என்றார். நவகோள்களை அறிவதற்காக ஒன்பது மலர்களை ஆற்றில் விட்டு, இவை எந்தெந்த கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவ லிங்கத்தை வைத்து வழிபடுமாறு வேண்டினார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்தார்.அதில்

முதல் மலர் பாபநாசத்திலும் (சூரிய தலம்)
இரண்டாவது மலர்சேரன்மாதேவியிலும் (சந்திரன்)
மூன்றாவது மலர் கோடகநல்லூரிலும்(செவ்வாய்)
நான்காவது மலர் குன்னத்தூரிலும் (ராகு)
ஐந்தாவது மலர்முறப்பநாட்டிலும் (குரு)
ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும் (சனி)
ஏழாவது மலர் தென் திருப்பேரையிலும் (புதன்)
எட்டாவது மலர்ராஜபதியிலும் (கேது)
ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலத்திலும் (சுக்கிரன்)

கரை ஒதுங்கியது. அந்த இடங்கள் தான் நவ கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.
-பகிர்வு
 
Top