சூரிய க்ரஹணத்திற்கு ஒப்பான புண்ய காலம்

ரத சப்தமியன்று அதிகாலையிலேயே தலை, இரண்டு புஜங்கள் ஆகிய இடங்களில் ஏழு எருக்கம் இலைகளை அக்ஷதையுடன் (பெண்கள் சிறிது மஞ்சள் தூளையும் கலந்து) ஸ்நானம் செய்வது வழக்கம். இதனால் நாம் ஏழு பிறவிகளிலும் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். ஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் :
1. ஸப்த ஸப்த ப்ரியே தேவீ ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்|

2. யத் யத் கர்மக்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச சோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ|

3. நௌமி ஸப்தமி தேவித்வாம் ஸப்த லோகைக மாதரம்
ஸப்தார்க பத்ர ஸ்னானேன மம பாபம்
வ்யபோஹய|

4. ஏதத் ஜன்ம க்ரிதம் பாபம் யச்ச ஜன்மாந்திரார்ஜிதம்
மனோ வாக்காயஜம் பாபம் ஜ்ஞாதாஜ் ஞாதேசயே புன:
இதி ஸப்தவிதம் பாபம் ஸ்னானான்மே ஸப்த ஸப்திகே
ஸப்த வ்யாதி ஸமாயுக்தம் ஹர மாகரி ஸப்தமி
புருஷர்கள் ஸ்னானம் செய்த பிறகு சூரியனுக்குக் கொடுக்க வேண்டிய அர்க்ய மந்திரம்:
ஸப்த ஸப்தி ரதாரூட | ஸப்த லோக ப்ரகாஶக|
திவாகர| க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே|
ஸப்த ஸப்திவஹ ப்ரீத ஸப்த லோக ப்ரதீபன
ஸப்தமீ ஸஹிதோ தேவ, க்ருஹாணார்க்யம் திவாகர|
திவாகராய நம....... ... இத மர்க்யம், இத மர்க்யம்இத மர்க்யம் ....3 தடவை அர்க்யம் கொடுக்கவும்.
 
Top