கோவிலுக்கு வழிபட செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்

கோவிலுக்கு வழிபட செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்👇

🐘 சிவன் கோவிலில் பைரவரை வழிபட்டால் செய்வினை தோஷங்கள் நம்மை அண்டாது...!
🐘 பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் செய்வினை தோஷங்கள் நம்மை அண்டாது.
🐘 அதர்வண காளிஅம்மனை வழிபட்டால் செய்வினை தோஷங்கள் நம்மை அண்டாது.
🐘 கோயிலுக்குள் நுழையும் முன்பு குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.
🐘 கோயில் அருகில் சென்றதும், கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் ராஜ கோபுர தரிசனம் அவசியம். கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். பெண்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட கூடாது. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்ட வேண்டும்...
🐘 அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...
🐘 கோவிலுக்குள் நுழையும்போது கோவில் வாசல் நிலைப்படிகளை மிதிக்காமல், வலது காலை முன்வைத்து கோவில் வாசல் நிலைப்படிகளை தாண்டி செல்லவேண்டும். கோவிலுக்குள் நுழைந்தவுடன் மூலவருக்கும் அனைத்து பிரகார மூர்த்திகளுக்கும் சேர்த்து கொடிமரத்தில் வணக்கத்தை செலுத்த வேண்டும். நம் வேண்டுதல்களை கொடிமரத்தின் முன் நின்று வேண்டிக் கொள்ள வேண்டும். அதன்பின்பு நமது ஆணவம், அகங்காரம், செய்துள்ள பாவங்களை, கொடிமரத்துக்கு அடுத்துள்ள பலிபீடத்தில் சமர்ப்பித்து மன்னிப்பு வேண்டுவதுடன், வரும் நாட்களில் பாவங்கள் செய்யாதிருக்க மன வலிமை தர வேண்டி வணங்க வேண்டும். நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்களையும் முழுவதுமாக அழித்து விட வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது...
🐘 பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.
🐘 கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது. பாரம்பரிய உடை அணிவது நல்லது. வேஷ்டியும், துண்டும் அணிவது சிறப்பு.
🐘 சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.
🐘 கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.
🐘 ஈரத்துணியுடன் எந்த நல்ல செயல்களும் செய்யக்கூடாது. துவைத்துக் காய்ந்த தூய்மையான ஆடைகளை அணிந்தே வழிபாடு செய்ய வேண்டும்.
🐘வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. நம்மால் இயன்றவரை இறைவனுக்கு பூக்கள், பழங்கள் அல்லது ஒரு கற்பூரமாவது எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.
🐘 சிவனுக்கு வில்வ இலையையும், பெருமாளுக்கு துளசியையும் அர்ச்சனைக்கு வாங்கி செல்வது இன்னும் சிறப்பு. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.
🐘 எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகரை தரிசனம் செய்து, தலையில் ஐந்து கொட்டுகளை கொட்டிக்கொண்டு, ஐந்து தோப்புக்கரணம் போட்டு வழிபட வேண்டும்.
🐘சிவன் கோயிலில் நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.
🐘 தெய்வத்தை வணங்கும்போது அவருக்கு நேரெதிரில் நின்று வணங்கக்கூடாது.
அதற்க்கான காரணங்கள்:
🐘 1. மூலவருக்கும் கொடிமரத்துக்கும் இடையே தெய்வசக்தி ஓட்டம் இருக்கும், அதை வழிமறிப்பதுபோல குறுக்கே நிற்பது பாவச்செயல்.
🐘 2. ஈஸ்வரனை வணங்கும்போது அவருக்கு நேரெதிரில் வணங்காமல் பக்கவாட்டில் நின்று வணங்கும்போது அவருடைய வலது & இடது கடைக்கண் பார்வை அருள் கிட்டும். நேரெதிரில் நின்றால் நெற்றிக்கண் பார்வைக்கு இலக்கு ஆகலாம், எச்சரிக்கையுடன் பக்கவாட்டில் நின்று வணங்குங்கள்.
🐘 3. தெய்வத்துக்கு நடக்கும் அபிசேக, தீப ஆராதனைகளை பக்தர்கள் அனைவரும் கண்டு பலன் பெற முடியும்.
🐘 மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் சமயத்தில் பிரகாரத்தை பிரதக்ஷ்ணம் செய்யக் கூடாது.
🐘🐘 அபிஷேகத்தை பார்த்தால், அலங்காரத்தையும், தீப ஆராதனையையும் பார்த்து விட்டுத் தான் வீடு திரும்ப வேண்டும்.
🐘 கோவிலில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. விளக்கு ஏற்றும்போது விளக்கின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரேதிரி அல்லது இரட்டைத்திரி போட்டு விளக்கேற்றலாம். நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும். உங்கள் வசதி, வேண்டுதலுக்கு ஏற்ப உங்கள் விருப்பப்படி தெய்வங்களை வணங்குங்கள்.
🐘 விநாயகரை ஐந்து முறை, சூரியனை இரண்டு முறை, அம்பாள், விஷ்ணுவை நான்கு முறை, ஆஞ்சநேயரை ஐந்து முறை, ஈஸ்வரிக்கு நான்கு, முருகனுக்கு ஆறு, நவகிரகங்களுக்கு ஒன்பது எல்லா பரிவார மூர்த்திகளையும் சேர்த்து வலம் வந்தால் மூன்று எண்ணிக்கையில் பிரதக்ஷ்ணம் செய்ய வேண்டும். முதியவர்கள் மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்களாக இருந்தால் ஒரு முறை மட்டும் பிரதக்ஷ்ணம் செய்தால் போதும்.
🐘பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது. பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.
🐘 கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும். நடந்துகொண்டே நெற்றியில் விபூதி குங்குமம் இடக்கூடாது.
🐘 கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.
வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
🐘 கோயிலுக்குள் மனிதர்களை வணங்கக் கூடாது.
🐘 விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.
நந்தியை தொட்டு வணங்கக் கூடாது. நந்தியின் காதில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
🐘 வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.
🐘தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
🐘கோயிலுக்குள் உறங்கக் கூடாது.
🐘 ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக் கூடாது.
🐘 ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்ற மந்திரங்கள் அல்லது அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரை சொல்லி நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும். துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.
🐘அந்த சன்னதியின் விமான கோபுரத்தை வணங்க வேண்டும்.
🐘 சாஷ்டாங்க நமஸ்காரம் மூலவருக்கோ பிரகார மூர்த்திகளுக்கோ தனித்தனியாக செய்யக்கூடாது. கொடிமரத்தைத் தாண்டித் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடிமரத்தைத் தாண்டி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.
இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் முழு உடம்பும் தரையில் படும்படி விழுந்து வணங்க வேண்டும். பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.
🐘விஷ்ணு கோயிலில் வழிபாட்டுக்கு பின்பு கோவிலில் அமராமல் வீட்டிற்குக் கிளம்பி செல்ல வேண்டும்.
🐘 சிவன் கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.
🐘கோயிலில் இருந்து திரும்பி வரும் போதும் ராஜ கோபுர தரிசனம் செய்து கும்பிட வேண்டும்.
🐘 கோயிலில் இருந்து வேறு யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது. நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
🐘 கோயிலுக்குச் சென்று வந்து வீட்டில் நுழையும் போது கால்களைக் கழுவக் கூடாது...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
Top