உடுப்பி கிருஷ்ணா

பறந்த தாமரைஇதழ் விழிகளுடன் பக்தவத்சலன்..
பாதமே துணை என்று படுத்துக் கிடக்கும் பசு..
பரமாத்மனின் அழகு ஸ்வரூபம்..
பாமரரின் நெஞ்சிலும் நிலைத்து நிற்கும் நிஜம்...

கண்ணிலே காணாத கரும் நல் வையிரம்..
கரத்திலே மத்தோடு நிற்கின்றதே..
கர்மவினை யெல்லாம் தீர்ந்திடுமே..
கடைந்தெடுக்கும் கௌபீனதாரி இடைப்பயலே..

அணைத்திட துடிக்குதே தாயுள்ளம்..
அரவிந்ததளாயதாக்ஷனை..
அருமருந்தாம் தனிமருந்திவன்..
அனைத்துலகுக்கும் அப்பாற்பட்டவன்..
ஆதவனின் பலகோடி ப்ரகசமாய் தனித்து நிற்கும் மனம் கவர் கள்வன்..

முன்னுச்சி அழகாய் வகிடெடுத்து பின்னி கொண்டையிட்டு பீலி சொருகி..
முழு மகர குண்டலங்கள் ஆடிட...
முத்தாய் ஒளிரும் முரளிதரனவன்..
முழுமதியையும் பழிக்கும் முகத்தோன் முகுந்தன்..

கிருஷ்ணனை கண்டிடின் கர்மவினைகள் தொலைந்தே போகுமே..
கிருஷ்ண மேனியின் அழகை சொல்லிடப் போமோ..
 
Top