4, 13, 22, 31 ல் பிறந்தவர்களின் ரகசியம்

🌹நல்ல ஒழுக்கமும், பழக்கமும் சிலருக்கு பிறப்பிலேயே இருக்கும். அதனை தங்களின் பிறந்த எண்களை வைத்து அறிந்து கொள்ள முடியும். 4, 13, 22, 31-ம் தேதிகளில் பிறந்தவர்கள் 4 எண்ணிற்குரியவர்கள். இவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குரியவர்கள். 4-ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்குரியவர்களின் குண அமைப்பை இங்கு பார்ப்போம்.

*👍🏼குண அமைப்பு :*

🍁 நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் அதிக பிடிவாத குணம் இருக்கும்.

🍁 பிறருடைய அந்தஸ்தையோ, வளத்தையோ, செல்வத்தையோ, பின்னால் இருக்கும் பலத்தையோ பற்றி சற்றும் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.

🍁 ஒளிவு மறைவற்ற இவர்களின் அதிகாரமான பேச்சால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். இவர்களை புரிந்து கொள்பவர்களால் மட்டுமே இவர்களை அனுசரித்துச் செல்ல முடியும். புகழிலோ, பொருளிலோ அதிகம் ஆசை இருக்காது.

🍁 எல்லோரும் தன் கருத்துக்களை புரிந்து கொண்டு பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொதுநல காரியங்களுக்காக தன் உயிரையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். எந்தக் காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பார்கள்.

*💎அதிர்ஷ்ட கல் :*

🍁 நான்காம் எண்ணிற்குரியவர்கள் கோமேதகத்தை அணிய வேண்டும். இந்த கல்லை அணிவதால் உடல் நலம் சிறப்படையும். எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழிலில் மேன்மை, செல்வம், செல்வாக்கு உயரும்.

*👉🏽பரிகாரங்கள் :*

🍁 ராகு காலங்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற நாட்களில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் எதுவும் நன்மையாகவே அமையும்.

*🌹அதிர்ஷ்டம் தருபவை :*

🍁 அதிர்ஷ்ட தேதி, - 1, 10, 19, 28

🍁 அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

🍁 அதிர்ஷ்ட திசை - கிழக்கு

🍁 அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு

🍁 அதிர்ஷ்ட கல் - கோமேதகம்

🍁 அதிர்ஷ்ட தெய்வம் - துர்க்கை

4-ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்களின் குணமறிந்து செயல்பட்டால் எதுவும் நன்மையாகவே அமையும்.
 
Top