12 லக்கினத்திற்கும் சாதகமான யோக தசாக் காலம்

ஜோதிட சாகரம்

*மேஷ லக்கினம்*

மேஷ லக்கினத்திற்கு செவ்வாய் தசா மற்றும் சூரிய தசா மற்றும் குரு தசா ஆகிய தசா காலங்கள் யோகமாக அமையும்.

*ரிஷப லக்னம்*
ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் தசா புதன் தசா காலங்கள் நன்மையானதாகவும் சனி தசா யோகமானதாக அமையும்.

*மிதுன லக்கினம்*
மிதுன லக்னத்திற்கு புதன் தசா சுக்கிர தசா மற்றும் சனி ஆகியவை யோகமானதாக அமையும்.

*கடக லக்கனம்*
கடக லக்கினத்திற்கு சந்திரன் மகாதசா மற்றும் செவ்வாய் மகாதசாவும் குரு தசா ஆகியவை யோகமானதாக அமையும் .

*சிம்ம லக்கனம்*

சூரியன் மகா தசா குரு மகாதசா மற்றும் செவ்வாய் தசா இந்த காலங்களில் யோகமானதாக அமையும்.

*கன்னி லக்கனம்*

கன்னி லக்னத்திற்கு புதன் தசா காலம் சனி தசா நன்மை தரும் மேலும் சுக்கிர மகாதசா யோகமாக அமையும் .

*துலாம் லக்கனம்*

துலாம் லக்னத்திற்கு சுக்கிர தசா சனி தசா மற்றும் புதன் தசா யோகமாக அமையும்.

*விருச்சிக லக்கனம்*

விருச்சிக லக்னத்திற்கு குரு தசா செவ்வாய் தசா மற்றும் சந்திரன் தசா யோகம் உள்ளதாக அமையும் .

*தனுசு லக்கனம்*

தனுசு லக்னத்திற்கு குரு தசா மற்றும் செவ்வாய் தசா நன்மையானதாகவும் சூரிய தசா யோகத்தை தருவதாகவே இருக்கும் .

*மகர லக்கனம்*

மகர லக்னத்திற்கு சனி தசா சுக்கிர தசா ஆகியவை நன்மை ஆனதாகவும் புதன் தசா யோகம் உள்ளதாகவும் இருக்கும்.

*கும்ப லக்கனம்*

கும்ப லக்கினத்திற்கு சனி முற்றும் புதன் தசா நன்மையானதாகவும் சுக்கிர தசா யோகம் உள்ளதாகவும் அமையும் .

*மீன லக்கினம்*

மீன லக்கினத்திற்கு குரு தசா மற்றும் சந்திர தசா நன்மை ஆனதாகவும் செவ்வாய் தசா யோகம் ஆனதாகவும் அமையும் ..

*சில கவனிக்க வேண்டிய முக்கிய தசா விதிகள்*

மேற்கூறிய விஷயங்களில் லக்கினாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியும் மாரக பாதகாதிபதிகளாக வருவதில்லை ஆனால் ரிஷபம் சிம்மம் கும்பம் ஆகிய லக்னங்களுக்கு ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதியாக வருவதால் அந்த குறிப்பிட்ட கிரகங்கள் இருக்கும் பாவகத்தை பொறுத்து நல்ல மற்றும் தீய விளைவுகளை தசா காலங்களில் தரும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ......
அதேபோல் என்னதான் லக்னத்திற்கு சுப கிரகங்களின் தசா நடந்தாலும் அந்த கிரகங்கள் மறைவு ஸ்தானங்களில் இல்லாமலும் ராகு கேதுவுடன் கிரகண அமைப்பில் இல்லாமலும் வக்கிரம் மற்றும் அஸ்தங்கம் பெறாமலும் நீசம் அடையாமல் இருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்து தசா நடத்தினால் நன்மையே .....இதில் லக்னத்திற்கான சுபகிரகங்கள் நித்திய நாம யோகியாகவும் ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்று அல்லது நட்பு வீடுகளில் இருந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நவாம்ச பலம் புஷ்கர நவாம்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் இந்த லக்ன சுபர்கள் இளம் வயதில் தசா நடத்தினால் குடும்பம் கல்வி வசதி வாய்ப்புகளில் சிறந்தவராக வலம் வர முடியும்.
 
Top