ஹோலிகா தகனம்

“ஹோலி” கொண்டாடத்தை கூறும் புராண கதை:

இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ண -

இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான்.

இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி,
தன்னையே கடவுள் என பூஜிக்கும் படி வற்புறுத்தினான்.

இரணியன் தன் சகோதரி - நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகாவின் உதவியை நாடினான்.

தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொடுட்டு இரணியன் பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் அமரும் படி கூறினான்.

மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன்.

மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான்.

ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி,
அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள்.
🙏🙏🙏
 
Top