ராசிகளும் பழமொழியும்

மேசம்- ஆடோடு மோதேல்- மேஷ ராசிக்காரர்களுடன் மோதலில் ஈடுபடாதீர்

ரிஷபம்-மாடோடு எதிரிடேல் -ரிஷபராசிக்காரர்களுடன் எதிர் நின்று சண்டை போடாதீர்கள்

மிதுனம்-ரெட்டையன் வார்த்தை வெட்டிக்காடு வரை - மிதுன ராசிக்காரர்கள் வார்த்தை சுடுகாடுவரை கொண்டு செல்லும்

கடகம்-நண்டானுக்கு இடங்கொடேல் - கடகராசிக்காரர்களுக்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கி விடுவார்கள்.

சிம்மம்-சிம்மத்தாருடம் சினம் கொள்ளாதே -சிம்ம ராசிக்காரர்களிடம் உன் கோபத்தை செலுத்தாதே

கன்னி மகனை கைவிடேல் - கன்னி ராசிக்காரர்களை கைவிட்டு விடாதே.

துலாம் -கோலோன் ஓயான்- துலாராசிக்காரன் தனக்குரிய பங்கு கிடைக்கும்வரை ஓயமாட்டான்

விருச்சிகம்-தேளோன் தோள்கொடுப்பான்- விருச்சிக ராசிக்காரர்கள் நண்பர்களுக்கு தோள் கொடுப்பவர்கள்

தனுசு-வில்லோன் வல்லோன்- தனுசு ராசிக்காரர்கள் வல்லவர்கள் அவர்களை சொல்லால் மட்டுமே வளைக்க முடியும்.

மகரத்தார் நகரத்தை ஆள்வார்- மகர ராசிக்காரர்கள் நகரத்தை ஆளுமை செய்பவர்கள்.

கும்பத்தான் குறைகளைவான் -கும்ப ராசிக்காரர்கள் குறைகளை களைபவர்கள்.

மீனோன் மேனோன்- மீன ராசிக்காரர்கள் மேன்மையான குணங்களை உடையவர்கள்.
 
Top