மாந்திரீக முறையில் குலதெய்வத்தை கண்டறிதல்

அமாவசை அடுத்து வரும் புதன்கிழமை (வளர்பிறை புதன்கிழமை) அன்று பாம்பு புற்று இருக்கும் இடத்திற்க்கு சென்று புற்று மண் எடுத்து சிறிது சுத்தமான தண்ணீர் விட்டு பிள்ளையார் பிடித்து பூஜை அறையில் வைத்து வெற்றிலை பாக்கு, தட்சணை, ஒரு வெண்ணிற துண்டு (டவள்) வஸ்திரமாக வைத்து படையலாக ஒரு மண் அகலில் நெய் தீபம் ஏற்றி தேங்காய், பழம், பொரிகடலை மட்டும் வைக்கவும்

முன்னோர் வழிபாடு

மனதை கட்டுபடுத்தி நம் குலதெய்வத்தை எங்கு இருந்தாலும் காட்டுங்கள் இனி நான் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வேன் என்று உறுதியளித்து முன்னோர்களை வணங்கி வேண்டிக் கொள்ளவும்.

மந்திரம் உரு செய்தல்

என் குலதெய்வமே நீ எங்கு இருந்தாலும் வந்து எனக்கு அனுகிரம் புரி என்று நினைத்து கீழ் கண்ட மந்திரத்தை ஜெபம் செய்யவும்.

"சங் வங் சிவாய நம"

இம்மந்திரத்தை தினமும் 108 முறை உரு காலை மற்றும் மாலை செய்யவும் இவ்வாறு உறு செய்ய செய்ய 1008 உரு முடிந்தவுடன் அந்த மந்திர அதிர்வு நம் குலதெய்வத்தை ஆகர்ஷணம் செய்து 21 நாட்களுக்குள் நம் கனவில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமக்கு தூக்கத்தில் காட்சி தந்தும் தான் இருக்கும் இடமும் வழிபாட்டு முறை அதற்கு உண்டான பூஜை முறைகளை கூறும்.

குலதெய்வ வழிபாட்டு முறைகள்அம்சபீடம் வழிபாட்டு முறைபல சந்தர்ப்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாத நிலையோ அல்லது கோவில் சிதிலமடைந்த நிலையோ இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் குலதெய்வத்தின் அம்சபீடம் வைத்து வீட்டிலேயே வழிபடுவது பலன் தரும். தந்த்ர சாஸ்திரத்திலும் ஆகமசாஸ்திரத்தின் சதாபத்ய அனுஷ்டனத்திலும் தெய்வ சக்திகளை யந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து வழிபடும் முறைகள் சொல்லப்பட்டுள்ளன.
யந்திரரூபத்தில் பிரதிஷ்டை வழிபாட்டு முறைகுலதெய்வம் தெரியாதவர்கள் பிராணதேவதா பிரசன்ன முறையில் தங்கள் குல தெய்வத்தின் அம்சங்களை அறிந்துக்கொண்டு அந்த அம்சங்களுக்குறைய அட்சர அம்சங்களுடன் குலதெய்வத்தை யந்திரரூபத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யலாம்.
யந்திர பீடம் வழிபாட்டு முறைகுலதெய்வம் தெரிந்தும் அதன் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் குலதெய்வத்தின் ஸ்மர்த் பிரசாதத்துடன் (மண், விக்ரகம், கனி, கும்குமம் போன்றவை) அட்சர அம்சத்தை யந்திர பீடமாக்கி வீட்டில் வைத்து வழிபடலாம்.
 
Top