பரமஹம்சர் - விளக்கும் எளிய கதை

🌹🌺 "பக்தி' என்னும் படிப்பைப் படித்துவிட்டு வாருங்கள். காளி தேவிக் கண்ணுக்குத் தெரிவாள்,'' என்ற பரமஹம்சர் - விளக்கும் எளிய கதை 🌹🌺
-------------------------------------------------------------------

🌺🌹பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தட்சிணேஸ்வரம் காளிகோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்தார்.

🌺பக்தர் ஒருவர் அவரிடம், ""ஐயா! நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?,'' என்று கேட்டார்.

🌺ஓ! பார்த்திருக்கிறேனே! இன்று காலையில் கூட அவளிடம் பேசிக் கொண்டிருந்தேன்,''.

🌺நீங்கள் சொல்வது உண்மையானால், அவளை எனக்காக வரவழையுங்கள்,'' என்றார் பக்தர்.

🌺ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரிடம்""நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

🌺டாக்டர்'' என்றார் வந்தவர்.
அப்படியானால் இப்போதே என்னை டாக்டராக்குங்கள் பார்க்கலாம்,'' என்றார் ராமகிருஷ்ணர்.

🌺எப்படி முடியும்? படித்தால் தான் முடியும்,'' என்றார் வந்தவர்.

🌺படித்தால் தான் மருத்துவராக முடியும் என்பது போல, காளியைக் காணவும் "பக்தி' என்னும் படிப்பு வேண்டும். அதைப் படித்துவிட்டு வாருங்கள். கண்ணுக்குத் தெரிவாள்,'' என்றார் ராமகிருஷ்ணர்.

🌺மந்திர உச்சடானம் 🌹
ஓம் ஸ்தாபகாய ச தர்மஸ்ய சர்வ தர்ம ஸ்வரூபினே ;
அவதார வரிஷ்டாய ராமகிருஷ்ணாய தே நம:

விளக்கம்

🌺சத்திய யுக தர்ம நிலைபெற வந்தவரே
🌺எல்லா தர்மங்களின் உண்மை நிலையை உணர்ந்து உலகுக்கு சொன்னவரே
🌺மானிட பிறப்பில் தலை சிறந்தவரே
🌺ஸ்ரீ ராமகிருஷ்ணரே உமை வணங்குகிறேன் என சுவாமி விவேகானந்தர் பாடுகிறார்

🌺அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும்.

🌺உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் மேலான பரந்தமான் மீதான பக்தி எனும் உயர்ந்த பொருள் உமக்குக் கிடைக்கும்.🌹🌺
--------------------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *🌹🌺🌹🌻🙏

🙏🌹🌺 *Jai Sri Rama Krishna Gurumaharajki Jai* 🌹🌺🙏
 
Top