தாரமங்கலம்

90-அடி உயர ராஜகோபுரமும்,
20-அடி வாசலும் கொண்ட இந்த 12-ஆம் நூற்றாண்டு பழமையான
*உலகப்புகழ்* *பெற்ற*
*நம் தமிழர்களின்* *சிறப்புமிக்க சிற்பக்கட்டிடகலைக்குச்* *சான்றாக விளங்கும்*
*இத்தலத்தில்*
நம் இனிய ஈசன்,
ஶ்ரீ கைலாசநாதர் எனும் திருப்பெயருடனும்,
தனி சன்னதியில்
அம்பிகை
ஶ்ரீ சிவகாமசுந்தரி எனும் அருட்பெயருடனும்
திருஅருட்காட்சியளிக்கின்றனர்.

(🙏🏻சிறப்புக்கள் பல பெற்ற இச்சிவத்தலத்தைப்
பற்றி ஒரு சில பதிவுகள் மட்டும்)

🤔இந்த ஊருக்கு தாரமங்கலம் என பெயர்வரக்காரணம் சில உண்டு என்றாலும்,
ஒரு சுவாரஸ்யமான காரணம்;
🙏🏻நம் சிவபெருமானுக்கும்,
🙏🏻பார்வதிதேவிக்கும்
இங்கு திருமணம் நடந்தது என்றும்,
*🙏🏻திருமால்*
தன் அன்பு தங்கை பார்வதியை சிவபெருமானுக்கு இத்தலத்தில்,
தாரை வார்த்துக்கொடுத்து
மணவிழாவினை நடத்தியதால் (இவ்வூருக்கு) 'தாரமங்கலம்' எனும் திருப்பெயர் வந்ததென்றும் கூறுவர்.

(🤔கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, நம் தமிழகத்தில் புதிதாக கோயில் கட்டுவதற்காகவோ அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ கோயில் நிர்வாகிகளிடம், சிலை வடிக்கும் சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும்போது,
தாரமங்கலம், தாடிக்கொம்பு, பேரூர், தாராசுரம், பெரியகோயில், பெரியபாளையம் உள்ளிட்ட சில கோயில்களில் உள்ள சிற்பங்கள் நீங்களாக மற்ற கோயில்களில் உள்ளதை போன்ற சிற்பங்களை நாங்கள் செய்து கொடுக்கிறோம்
என்று சொல்லித்தான்
இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்களாம்)

உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக சிறு துளைகளை விட்டு செதுக்கிய மனிதன் முகமான சிலை இந்த ஆலயத்தில் மட்டும் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் விநாயகரின் தலையில் ஊற்றும் தண்ணீர் நம் கண்களுக்கு புலப்படாமல் வழிந்தோடி கிணற்றுக்குள் விழும் அற்புதமான வடிகால் முறை, இத்தலத்தின் கீழ்பகுதியில் காற்று புக முடியாத அறைக்குள் வீற்றிருக்கும்
ஶ்ரீ பாதாள லிங்கேஸ்வரர்,
18-ஆயுதங்களை ஏந்திய நடராஜர் சிற்பம்,
சிங்கத்தின் வாயில் (வெளியே எடுக்க முடியாத) உருளும் கல்,
ராமன் வாலியை வதைக்கும் சிற்பம் போன்று பலப்பல வியந்து சிலிர்க்கவைக்கும் சிற்பங்கங்களைப்பற்றி
இன்னும் பதிவு செய்துகொண்டே போகலாம் அவ்வளவு சிறப்பு. இந்த சிறப்புமிகு சிவாலயத்தை கட்ட காரணமாக இருந்த அத்தனை மன்னாதி மன்னர்களுக்கும், கட்டிய கட்டிட கலைஞர்களுக்கும்
🙏🏻🙏🏻🙏🏻.
சந்தர்ப்பம் கிடைத்தால் இத்தலத்திற்கு சென்று வியப்புற்று வழிபட்டு வாருங்கள்.

🌕சந்திர பகவானும்,
☀️சூரிய பகவானும்
🙏🏻இத்தல இறைவனை வழிபட்டுச்செல்வதாக ஐதீகம்.

🤔🙏🏻இன்றய நன்னாளான மாசித்திங்கள் முதல் புதன்கிழமை வரை
(தமிழ் தேதி மாசி 9,10,11*ஆங்கில தேதி பிப்ரவரி 21,22,23*)
மாலை 5-மணிக்கு மேல்
☀️சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள்
(இறைவனின் முன்) வீற்றிருக்கும் நந்தியம்பெருமானின் கொம்பு வழியே சென்று
சிவலிங்கத்தின் மீது
மூன்றாம் பிறை போல விழுவது இத்தலத்தின் தெய்வச்சிறப்பு என்பதும், இந்த அபூர்வ சூரிய தரிசனத்திருக்காட்சியை காண சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர் என்பதும்,
இந்த நாட்களில்
சிறப்பு மிக்க ஆலயத்தையும்,
உள்ளே அமைத்துள்ள
பிரமிக்க வைக்கும் வரலாற்று சிறப்புமிக்க சிற்ப வடிவங்களையும் செதுக்கிய
நம் முற்கால தமிழர்களை நினைவு
கூறும் திருநாளாகவும்
இத்தலம் அமைந்துள்ள
தாரை நகர் மக்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள் என்பதும் இத்தலச்சிறப்புக்களில் ஒன்று.

🙏🏻சூரியன் வழிபடும் இன்றைய மாசித்திங்கள் நன்னாளில்,
இத்தல இறைவனை நினைத்து வழிபாடு செய்தாலே,
நம்முள்ளே உள்ள தீவினைகளை அழித்து (அல்ல) குறைத்து, நல்வினைகளை பெருக்கிடுவார் என்பது ஐதீகம்.

🙏🏻ஓம் நமச்சிவாய நமக:
 
Top