கோவை வடவள்ளி -- ஓர் சிறப்பு வரலாறு

வடவள்ளி, கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் வழியில் உள்ளது.

உண்மையில் இதன் பெயர் வடவழி. அதாவது வடக்கு வழி. காலப் போக்கில் இது வடவள்ளி ஆகிவிட்டது. இன்னும் பழைய பத்திரங்கள், ஏடுகளில் இது வடவழி என்றே வழங்கப்படுகிறது.

ஆனால் அது மறுவி வடவள்ளி என மாறிவிட்டது.

சரி, அது என்ன வடவழி.

கோவையில் பேருர் எனும் ஊரில் சிவன் கோவில் உள்ளது. பட்டிஸ்வரன் எனும் பேரில் வணங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழனால் கட்டப்பட்டது. அதைத் தொடந்து கோசல மன்னர்களாலும், விஜய நகரப் பேரரசினாலும் அந்த கோவில் முழுமை பெற்றது.

அந்த காலகட்டத்தில் பேருர் மற்றும் அதன் சுற்றிய பகுதிகள் மிகப் பெரிய வனம். இதன் குறிப்பு தேவாரப்பாடல்களிலும் உள்ளது.

இந்த கோவில் கட்டுவதற்கு தேவையான கற்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது அந்த ஊரிலிருந்து வடக்குப் பகுதியில் கணவாய் (கணுவாய்) எனும் மலைப் பகுதியிலிருந்து தான் கற்களைக் கொண்டு வரமுடியும். அந்த மலையை அடைய வடவழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த மலையிலிருந்து கொண்டு வந்த கற்களை தரம் பிரித்து எடுத்துச் செல்ல சிற்பிகள் அமைத்து தங்கிய ஊர்தான் வடவழி.

இது பேருர் வரலாற்று குறிப்பில் இருக்கிறது.
 
Top