கோவர்த்தனன்

இச்சையால் கோவர்தன மலைக்கு பூஜையை செய்ய வேண்டினான் கண்ணன்.
இந்திர பூஜையை எதிர்த்து மறுத்தான் கோவிந்தன்
இமை மூடாது கடும் மழை பெய்து சினம் கொண்டு இந்திரன் கோவர்தனத்தை நீரிலே மூழ்கடிக்கையிலே
இலகுவாக கோவர்தன மலையை ஒரு விரலால் தூக்கி நின்று கோகுலம் காத்த கோவர்த்தனன்

கோகுலத்தாரும் ஆனிறைகளும் புல் பூச்சிகளும் கண்ணனின் அருகாமையிலே நிறைந்து சந்தோஷமாக ஆடிப்பாடி திரிந்தனர்
கோகுலமே அருள் மழையிலே நனைந்திருந்த வேளையிலே
கோவிந்தன் இவனே என கண்டு கொண்ட இந்திரன்
கோபமும் கர்வமுமழிந்து ஐராவதத்தோடு பாதம் பணிந்திட்டானே.

கோவர்தன மலையே அபிஷேகம் கண்ணனுக்கு செய்விக்கின்றது கண்ணனின் கரம்படும் ஆனந்தத்திலே.
கோலவிழி காட்டி கோலாகலமாக கண்ணன் நிற்கையிலே
கோபம் கொண்ட ஆதிசேஷனும் முன்உச்சியிலே சுருண்டு கண்ணன் முகம் பார்த்து ஏங்கி நிற்கின்றான்.
கோபாலன் கோவிந்தன் நம் ஊழ்வினை மலை தூக்கிக்காப்பவன் அழகிய மன்னன் திருப்பாத சரணம்

நீலமேக ஸ்யாமளன் பீதாம்பர ஆடையிலே நிறைந்தே நிற்கின்றான்
நித்திலத்திலே காணவொட்டா
வாத்ஸல்யத்திலே அனைவரையும் அணைத்தே நிற்கின்றான்
நிர்மலனின் நாபிக்கமலத்திலே ஆயிரம் கண் கொண்டவன் மனம் நிறைந்து கர்வமழிந்து அதிசயித்து காண்கின்றான் திருவடியினை

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
🙏🌹🙏

VijiVas
22- 02- 2022
 
Top