கடனாகக் கொடுத்து ஏமாந்த பணத்தை விரைவில் வீடு தேடி வர வைக்க

*சிவபெருமானின் அம்சமான ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவரை நினைத்து இந்த ஒரு விளக்கை வீட்டில் ஏற்றினால் போதும்*

கொடுத்த பணத்தைத் திரும்பவும் கேட்டாலே அது பிரச்சினை தான். கடனை கொடுக்கும்போது நாம் தெய்வமாக தெரிவோம். கடனை திருப்பி கேட்கும் போது நாம் ராட்சஸன் ஆக மாறி விடுவோம். அது ஏனோ தெரியவில்லை. கடனாக உதவிக்காக கொடுத்த பணத்தை நாம் கேட்கின்றோம். என்னமோ அவர்களுடைய சொந்த பணத்தை கேட்பது போல கடன் வாங்கியவர்கள் கோபப்படுவார்கள். என்ன செய்வது கடனை கொடுத்துவிட்டோம். அதை எப்படியாவது நல்ல முறையில் திருப்பி நாம் வாங்கி தானே ஆக வேண்டும். நீங்கள் உங்களுடைய பணத்தை யாருக்கேனும் கடன் கொடுத்து ஏமாந்து இருந்தால், உங்களுடைய நகை, விலையுயர்ந்த பொருள் எதையாவது அடுத்தவர்களிடம் கொடுத்து ஏமாந்து இருந்தால், அந்த பொருட்களை எல்லாம் திரும்பவும் மீட்டு எடுக்க இந்த ஒரு பரிகாரம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

முழுக்க முழுக்க சிவபெருமானின் அம்சமான ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவரை நினைத்து செய்யக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம் இது. எம்பெருமானை நம்பி இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் கை மேல் பலன் உண்டு. உங்களிடம் யார் கை நீட்டி பணத்தை வாங்கிறார்களோ, அவர்களே பிரச்சனை இல்லாமல் அந்த கடன் தொகையை திருப்பி உங்கள் வீடு தேடி வந்து திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.

முதலில் ஒரு வில்வ இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வில்வ இலையில் ஒரு பேனாவை வைத்து சிறிய அளவில் இப்படி எழுதிக் கொடுங்கள். உதாரணத்திற்கு ஒரு லட்ச ரூபாய் கடன் இன்னாரிடம் இருந்து திருப்பி வரவேண்டும் என்றால், உதாரணமாக ‘50,000 ரூபாய் கடனை மன்னன் (பெயர்) எனக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அந்த வில்வ இலையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் ஒரு மண் அகல் தீபத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ருத்ராட்சத்தை அந்த விளக்கில் போட வேண்டும். அதன் பின்பு எழுதி தயாராக வைத்திருக்கும் வில்வ இலையையும் அந்த அகல் விளக்கில் போட வேண்டும். அதன் பின்பு நல்லெண்ணெயை அந்த அகல் விளக்கில் ஊற்றி திரி போட்டு, தீபம் ஏற்றி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த தீபத்தின் முன்பு அமர்ந்து எம்பெருமானிடம் கடன் தொகை மீண்டும் வசூலாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்துகொண்டால், ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய கடன் தொகை, நீங்கள் இழந்த பொருள் உங்கள் வீடு தேடி வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த பரிகாரத்தை எந்த கிழமைகளில் எத்தனை நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை அமாவாசை அன்று, பௌர்ணமி அன்று, பிரதோஷம், அஷ்டமி தினத்தன்று, நம்முடைய வீட்டில் செய்யலாம். அப்படி இல்லை என்றால் வாரம் ஒருநாள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அது சிவபெருமானுக்கு உகந்த திங்கட்கிழமை ஆக இருந்தாலும் சரி. அல்லது ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவரக்கு உகந்த வெள்ளிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தாலும் சரி. அது அவரவர் விருப்பம். உங்களுக்கு இந்த தீபத்தை எப்போது ஏற்ற நேரம் இருக்கிறதோ அப்போது உங்களுடைய பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்றி வைத்து ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவரை வழிபாடு செய்யலாம்.

வழிபாடு முடிந்தவுடன் எண்ணெயில் இருக்கும் ருத்ராட்சத்தை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு, மீண்டும் இந்த தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறை எண்ணெயில் போட்டு அந்த இலையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. பழைய இலையை கால் படாத இடத்தில் போட்டு விட்டு, மீண்டும் புதிய இலையை தான் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் மீண்டும் உங்கள் கையில் வந்து சேரும் வரை, இந்த தீபத்தை வீட்டில் ஏற்றுவது நல்ல பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பணப் பிரச்சினைக்கு மட்டும்தான் இந்த பரிகாரம் என்று கிடையாது. சில பேருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காமல் இருக்கும். சில பேருக்கு திருமணம் நடக்காமல் இருக்கும். சிலபேர் குழந்தைப்பேறு கிடைக்காமல் இருக்கும். சில பேருக்கு பண கஷ்டம் இருக்கும். சில பேருக்கு மன கஷ்டம் இருக்கும். உங்களுக்கு எந்த கஷ்டம் இருந்தாலும் சரி அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று வில்வ இலையில் ஒரு வரியில் எழுதி, இந்த தீபத்தில் போட்டு ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவரை பிரார்த்தனை செய்து பாருங்கள்.

உங்களுடைய வேண்டுதல் அந்த எம்பெருமானின் காதில் சீக்கிரம் விழும். உங்களுடைய கஷ்டத்திற்கு ஒரு சிறந்த தீர்வினை அவன் சீக்கிரத்தில் காண்பித்து கொடுப்பார்.
🙏🌹💐ஹனுமன் ஆர் கே சாமி🌹💐🙏
 
Top