ஆங்கில முதல் எழுத்தின் பலன்கள்

சகல அஷ்ரங்களுக்கும் ஆதாரம் ஓம் என்ற பிரணவ ஒலியே . ஆங்கிலத்தின் இந்த முதல் எழுத்து ´அ ‘ என்பதன் முதல் ஆஷ்ரம் ஆகும் . சிறு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் சமயம் தாயார் ஆன்ணு வாயைத் திற என்கிறாள் . நம்மை அறியாமால் நம் உடலில் அடி பட்டலம் காயம் ஏற்படுமானால் ‘ஆ ‘ வலிக்கிறது என்கிறோம் ,’ ஆ ‘என்ற சப்தமமே முதலில் வருகிறது .
A . என்ற எழுத்து எல்லா எழுததுக்கும் முதல் எழுத்து .இந்த எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர் படிப் படியாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆர்வமும் ,மன வலிமையும் ,எடுத்த செயலை சாதிக்கும் மன உறுதியும் தர வல்லது .ஆக்கும் சக்தியும் ,நல்ல எண்ணம் ,நேர்மையுடன்
இருப்பார்கள் .
B . ஒரு நேர் கோட்டில் வலப்பக்கமாக இரு பூஜ்யங்களைக் கொண்டது ,வெளியே காணபடுவது எல்லாம் பூஜ்யம். நமது உடலும் ஒரு பூஜ்யம். தான் இதற்கு ஆதாரம் ஒன்று ஆகிய பிரம்மம் இந்த தத்துவததை. அந்த நேர் கொடு குறிக்கும். போதும் என்ற மனமும் ,மற்ற்வர்களுடன் கலந்து உணர்வுகளை பகிர்ந்து ,கொள்ள முடியாது,, தன்னை தனிமைப்படுத்தி ஒதுங்கிக் கொள்வார் .புது இடம் ,புதிய சூழ்நிலைகளில் சங்கோஜம் அடைவார். சிறு குழந்தைகள் போல் வெட்கம் படும் குணம் உண்டு .சிலருக்கு
அறிவாளி என்ற புகழ் கிட்டும்
c கற்பனை சக்தியும் ,சதா மனக்கோட்டை கட்டும் குணம் ஓரளவு காணப்படும். சுறுசுறுப்பும்,உற்சாகமும் ,இருக்கும் ,C என்பது வன்மையும் ,ஆண்மையையும் குறிக்கும் ,ஆளக்கூடிய பலத்தையும் குறிக்கும் .முன்னேறுவதில் தீவிர ஆர்வம் இருக்கும் ,செயல் ஆற்றும். திறமையும்,மேதாவித்தனத்தை கொண்டவர்கள் .சக்தியை சிதற அடிப்பார்கள் சுகானுபவக்களில் நிதானம் தேவை
D . இந்த எழுத்து நேர்மையான நடத்தை ,துணிகரமான செயல் ,தீவிரமான,சலியாத உடல் உழைப்பு ,இக்கட்டான சூழ்நிலைகளில் வெற்றி காண்பது ,உற்சாகமும் ,ஆர்றலும் உண்டுபண்ணும். ,நெருங்கிய நட்பு இல்லாமல் இருப்பது இந்த எழுத்தின் ஆற்றல் ஆகும்
E ,. இந்த எழுத்து ஆராய்ந்து விசயன்களை சீர் தூக்கிப் பார்த்து முடிவிற்கு வருவார்கள் ,எதிர்க் காலத்தைக் உள்நோக்கி பார்க்கும் தன்மை உண்டு ,சூழ் நிலைகளுக்கு ஏற்ப ஓத்துப் போகுதல் ,பல அரிய யோசனைகளும் , முடிவுகளும் ,திடீரென தோன்றும் .மற்றவர்களை எளிதில் வசப் படுத்துவார்கள
F இந்த எழுத்து பக்தி ,பூஜை ,இவற்றில் ஆர்வத்தையும் ,சரீர பலமும் ,மனோ பலமும் ,மிக அதிகம் .பிடிவாதம் ,நிர்வாகத்திறமை ,நண்பர்களிடம் விசுவாசம் ,சுருக்கமாகப் பேசுவது ,வெற்றியில் மாறாத நம்பிக்கைக் கொள்ளவது இதன் தன்மை ஆகும் .
G. பிறரை ஆளுவதில் சாமார்த்தியம் மிக்கவர் ,எல்லா தியாகங்களும் ,சோதனைகளுக்கும் உட் படுவர் .மித மிஞ்சிய தன்னம்பிக்கையும், திட்டமிட்டு காரியம் முடிக்கும் சக்தியும் உள்ள தீர்க்கதரிசி
H இந்த எழுத்து இரு நேர் கோடுகள் இடையில் ஒரு நேர் கோட்டால் இணைக்கப்பட்டதைக் காணலாம் .ஜீவாத்மா ,பரமாத்மா ,இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை என்பதைக் குறிக்கும் .சுயமாக தலை
நிமிரிந்து நிற்கும் தன்மை உடையது ..பார்வைக்கு கடுமையாக காணப்பட்டாலும் , குழந்தை உள்ளம் கொண்டவர்கள் நடக்க போகிற காரியங்களை முன் கூட்டியே ஊகிக்கும் சக்தி கொண்டவர் ,சர்வ ஜாக்கிரதை உள்ளவர் ,தாராளமாக நோக்கமும் இல்லாமல் ,வீண் செலவும் , சக்தி விரையமும் ஏற்படும் .
I நான் என்னுடைய என்ற சுய நலத்தை சுட்டிக் கட்டும் எழுத்து .ஒரு முகப் பட்ட தன்மை ,விடா முயற்சி ,உணர்ச்சி வசப்படுதல்,நிர்மாணிக்கும் சக்தி ,பிறரை ஆகர்ஷணம் செய்யும் வல்லமை உண்டு .பெயரில் முதல் எழுத்து ஆக வந்தால் பலர் உதவிக்கு வருவார்கள் .ஒரு முறைக்கு மேல் இந்த எழுத்து பெயரில் வந்தால் நரம்பு , வாத ,சம்பந்தமான நோய் உண்டாகும் .
J இந்த எழுத்து இரட்டை மனப்பான்மையைக் குறிக்கும் ,ஸ்தீரி குணமும் புருஷ குணமும் ,கலந்து நிற்க்கும் , தீவிரவாதி ஆனாலும் அன்பு மிக்கவர்.ஆண்கள் ஆனால் பெண்கள் ஒரு விஷயத்தை என்ன நினைப்பார்கள் என்பதை முன் கூட்டியே கூறிவிடுவார்கள் . மிகுந்த தன்னம்பிக்கையும் ,நல்ல நிர்வாக சக்தியும் ,நற் காரியங்களில் ஊக்கமும் உற்சாகமும் ,புகழையும் ,பதவிவும் விரும்புவர் .பிறர் கருத்தை ஏறறுக் கொள்ளாத சுய
கருத்து உள்ளவர் , பிறர் தன்னைப் பின் பற்றுவதை விரும்புவார் .துணிச்சலான வழிகாட்டி ,கலைகளில் ஆர்வமும் வெற்றியையும் தரும்
K உள் உணர்வு வலிமை உண்டு அடிக்கடி மண மாறுதல்கள் உண்டு ,விதியின் பயனால் பிரபலமானபிரமுகராக ஆவதும் உண்டு ,பல கலைகளில் கற்பதில் ஆர்வம் ,நிலையான காரியங்களில் பிரியமும் முன்னேறமும் ,தன் இனத்தாரை காப்பதில் ஆர்வமும் மேன்மையனவர் என்றும் உலகிற்கு நன்மை செய்வார்.
L இந்த எழுத்து தத்துவமும் , பொது அறிவும் ,ஒருங்கே அமையப்பெற்ற உள்ளது .பிரச்சனைகளை தீவிரமாக ஆராய்ச்சி செய்து அறியும் தன்மை பிறரை தன வசப்படுத்தி வேலை வாங்குவதில் சாமர்த்தியம் ,நினைத்ததை நடத்திக் காட்டுவார்கள் காரியவாதிகள் என்றும் கூறலாம்
 
Top