அஹஸ்

பொதுவாக ஒரு நாளின் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள காலத்திற்கு அஹஸ் என்று பெயர்

இந்த அஹஸ் காலத்தை ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது.

முதல் பாகம் - ப்ராத காலம்
ப்ராத சந்தியாவந்தனம்

இரண்டாவது - சங்கவ காலம்
பகவத் ஆராதனகாலம்

மூன்றாவது - மாத்யானிஹ காலம்
மாத்யானீக காலம்

நாலாவது - அபரான்ன காலம்
சிரார்த்த/ தர்ப்பண காலம்

ஐந்தாவது - ஸாயங் காலம்
சாயம் சந்தியாகாலம்

ஒரு நாளில் அபரான்ன காலத்தில் உள்ள திதியே அன்றய தினத்தின் ஸ்ராத்த திதி என கணக்கிட படுகிறது.

நேற்றய தினத்தில் அபரான்ன காலத்தில் தான் அமாவாஸை திதி இருந்தது

இன்றய தினம் அதே அபரான்ன காலத்தில் சுக்ல ப்ரதமை வந்து விடுகிறது. எனவே நேற்றய தினம் தான் அமாவாஸை தர்ப்பணம் செய்யதிருக்க வேண்டும்.

பொதுவாக சங்கல்பம் செய்யும் போது சங்கல்பம் செய்யும் நேரத்தின் போது இருக்கும் தாரை திதி நட்சத்திரம் யோஹம் கரணம் இவற்றை சொல்லி இப்படியான நேரங்கள் கூடிய நாளில் இந்த காரியத்தை செய்கிறேன் என்று சொல்வோம்

மாதா மாதம் வரும் அமாவாசை அன்றும் ஒவ்வொருவரும் தம் பிதுர்களுக்கும் முன்னோர்களுக்கும் சிரார்த்தம் செய்யவேணும்.

மாதாமாதம் இந்த அமாவாசை திதி அன்று நாம் செய்ய வேண்டிய சிரார்த்தத்துக்கு தர்ஸ சிரார்த்தம் என்று பெயர்

நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதால் ஸ்ராத்தத்திற்குப் பதிலாக கருப்பு எள்ளும் நீரும் விட்டு தர்ப்பணம் செய்கிறோம்.

அதனால் தான் தர்ப்பணத்தில் தர்ஸ சிரார்த்தம் தில தர்ப்பண ரூபேன அத்ய கரிஷ்யே என்று சங்கல்பத்தில் சொல்கிறோம்.

எனவே பொதுவாக ஒருநாளின் சிரார்த்த திதி என்பது அந்த நாளில் அபராண்ண காலத்தில் பிற்பகல் 1.30 - 3.00 மணி வரை எந்த திதி உள்ளதோ அதுவே ஆகும்.

இன்னும் சொல்லபோனால் பிராமணார்த்த போக்தாகளுக்கு போஜனத்தை அந்த வேளையில் (1.30-3.00) தான் ஆரம்பித்து செய்ய வேண்டும்

ஆனால் இன்றய அவசர உலகில் பல வித காரணங்களால் சிரார்த்தம் தர்ப்பணம் இவற்றை சிரார்த்த திதி என்று பஞ்சாங்கத்தில் என்று போட்டிருக்கிறதோ அன்று ஒரு 8.30 மணிக்கு மேல் நம் சௌகரியப்படி செய்யறோம் ஆத்து வாத்யார்களும் செய்தும் வைக்கிறார்கள் இதனால் நாமும் செய்துவிட்டோம் என்ற மனதிருப்தி தானே தவிர ப்ரயோசனமாக இது சொல்லபடவில்லை

அதாவது மாத்யானீக காலமான காலை மணி 10.30-மதியம் 1.00 மணியான காலத்தில் செய்யலாம். அந்த நேரத்துக்குள் பகவத் ஆராதனம் மாத்யானீகம் செய்து பின் தர்ப்பணம் செய்யலாம்.

முக்கியமான விஷயம் தர்ப்பணமோ அல்லது பிதுர் சிரார்த்தமோ நம் நித்ய கர்மானுஷ்டங்களான ப்ராத சந்தியாவந்தனம் பகவத் ஆராதனம் மாத்யானிகம் செய்துவிட்டு முடிந்தால் மறுபடியும் குளித்து விட்டு அல்லது கைகால் அலம்பி ப்ரோட்சித்து கொண்டு அன்று காலையில் நனைத்து உலரப்போட்ட வஸ்திரங்களை கட்டிக்கொண்டு தான் செய்ய வேண்டும் இதுதான் விதி எக்காரணம் கொண்டும் புது வஸ்திரம் கட்டிகொண்டு தர்ப்பணம் சிரார்த்தம் செய்ய கூடாது.

இன்னும் ஒரு முக்கிய செய்தி. பொதுவாக அமாவாசை தர்ப்பணத்தன்று காலை காபி, டீ போன்ற லாஹிரி பானம் ஒன்றும் குடிக்கக் கூடாது.

அதுபோல், முறையாக தர்ப்பணம் முடிந்துதான் பகவத் பிரசாதமாக ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும் ( ஒருவேளை தான் உணவு)

இரவு ஒன்றும் சாப்பிடக்கூடாது. உடல்நிலை அல்லது காலநிலையை கொண்டு சிறியதாக பலகாரம் சாப்பிடலாம் ( பழங்கள் கொண்ட ஆகாரம்) தவறில்லை

கூடுமானவரை அமாவாசை தர்பணத்தை அந்த நாளில் காலை 11.00 மணிக்கு மேல் செய்து பிரசாதம் ஸ்வீகரித்து பின்பு அலுவலகம் செல்வோம்.
 
Top