அடால்ப் ஹிட்லர்

‘இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!’ என்று கூறி உலகத்தை தனது சர்வாதிகாரத்தால் ஆண்ட அடால்ப் ஹிட்லரின் நினைவு தினம் இன்று.

♦ சிறையில் இருந்தபோது ‘எனது போராட்டம்’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார். இதில், உலகை வழி நடத்த தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டுமே என்று எழுதினார் ஹிட்லர்.

♦ 1928இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது. ஆனால், ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.

♦ தன்னுடைய கட்சியின் பெயரை ‘நாசி கட்சி’ என்று பெயர் மாற்றி, நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழி வகுத்தார்.

♦ ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார். 1933 ஜனவரி 30ஆம் தேதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.

♦ பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜெர்மனின் சர்வாதிகாரியாக மாறினார்.

♦ ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டபோது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டு விட்டன.

♦ ‘விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப்போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். எதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்’ என்று எச்சரித்தவர்.

♦ ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது இவரது காலத்தில்தான்.

♦ ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்ததற்கு காரணம் என்னவெனில் மாசு அடையக்கூடாது என்று அவர் கொண்டு வந்த சட்டம்தான்.

♦ ஹிட்லரின் ஆட்சிக்காலம் பன்னிரண்டு ஆண்டுகள். அதில் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.

♦ சாப்ளினின் முதல் பேசும் படம் ‘தி கிரேட் டிக்டேட்டர்’. அதில் ஹிட்லராகவும் யூத இனத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளியாகவும் இரண்டு வேடங்களில் நடித்து சாப்ளின் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பார்.

♦ ஒருமுறை காந்தி தனது நண்பருக்கு, மடல் எழுதுகிறார். அந்த மடலில்... ‘அன்பு தோழனே போரிட வேண்டாம், போரை நிறுத்திவிடு’ என கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்த நண்பன் வேறு யாருமில்லை... ஹிட்லர் தான்!
 
Top