பாம்புக் கடி மந்திரம்

கேள்வி: வெறும்
புத்தி பூர்வமான புரிதல் மட்டும் எப்படி போதுமானதாக இருக்க முடியும்?

ஸ்ரீ பகவத்: நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம். அது ஒரு கதையாகவும் இருக்கலாம் அல்லது உண்மையாகவும் இருக்கலாம்.

மந்திரவாதி ஒருவர் மந்திரத்தை சொல்லி பாம்புக் கடி விஷயத்தை இறக்கி வந்தார்.

இளைஞன் ஒருவன் அவரிடம் அந்த மந்திரத்தைச் சொல்லித் தருமாறு பல காலமாக கேட்டு வந்தான். பல காலமாக அவர் அவனைத் தட்டிக்கழித்து வந்தார்.

அவன் அவரை விடுவதாக இல்லை. அவர் அவனுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் "தொந்தரவு பண்ணாமல் தூரப்போ" என்று தன்னுடைய தாய்மொழியான தெலுங்கு மொழியில் கத்தினார்.

தெலுங்கு தெரியாத அந்த இளைஞனுக்கு அது என்னவென்று புரியவில்லை. அதுதான் பாம்புக்கடி மந்திரம் என நினைத்து அந்த மந்திரவாதியிடம் இதுதான் பாம்புக்கடி மந்திரமா? என்று கேட்டான். அவரும் இது தான் பாம்புக்கடி மந்திரம் என்று கூறிவிட்டார்.


அந்த இளைஞனும் "தொந்தரவு பண்ணாமல் தூரப்போ" என்பதை மந்திரமாக நினைத்து ஜபம் செய்து வந்தான். அவனுடைய ஜெபத்திற்கு பாம்பு விஷத்தை இறக்கும் சக்தி ஏற்பட்டு விட்டது.
 
Top